twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Love Today Review: கோமாளி இயக்குநர் ஹீரோவாக சாதித்தாரா? ’லவ் டுடே’ விமர்சனம் இதோ!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், யோகி பாபு
    இசை: யுவன் சங்கர் ராஜா
    இயக்கம்: பிரதீப் ரங்கநாதன்

    சென்னை: ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்றே அவர் ஹீரோவாக நடிக்கப் போவதாக அறிவித்ததும் திரைத்துறையிலே ஏகப்பட்ட பேர் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தனர்.

    தான் அசிங்கமாக இருக்கிறேன் என்பதை சிறு வயதில் இருந்து பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அது எனக்கு புதுசு இல்லை, ஹீரோவாக இந்த இடத்தில் நிற்பது தான் புதுசு என பிரதீப் ரங்கநாதன் பேச்சால் மட்டும் பதிலடி தரவில்லை, தனது நடிப்பாலும் கொடுத்து இருக்கிறார்.

    விஜய் நடித்த லவ் டுடே படமே பழசாகி விட்ட நிலையில், இந்த காலத்து செல்ஃபோன் காதல் எப்படி இருக்கு என குட்டி தனுஷ் போல இருக்கும் பிரதீப் ரங்கநாதன் சொல்லியிருக்கும் லவ் டுடே சாதித்ததா? சொதப்பியதா என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம் வாங்க..

    தள்ளிப்போன காந்தாரா.. ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவி மகிழ்ச்சி ட்வீட்! தள்ளிப்போன காந்தாரா.. ஓடிடியில் வெளியானது பொன்னியின் செல்வன்.. ஜெயம் ரவி மகிழ்ச்சி ட்வீட்!

    என்ன கதை

    என்ன கதை

    கோமாளி படத்திலேயே செல்போன் வீடியோ எடுத்து யூடியூப் பிரபலமாக காட்சிகள் அதிகம் இருக்கும். இந்நிலையில், தான் நடித்த ஷார்ட் பிலிமான அப்பா லாக் (App(a) Lock) கதையையே முழு நீளத் திரைப்படமாக எடுத்து நடித்துள்ளார் கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். உருகி உருகி காதலிக்கிறோம் என பொண்ணோட அப்பாவிடம் ஹீரோ தைரியமாக சொல்ல, உன் செல்போனையும், என் மகள் செல்போனையும் ஒரு நாள் எக்ஸ்சேஞ்ச் பண்ணுங்க, நாளைக்கும் இதே மன நிலையில், இருந்தால் வந்து சொல்லுங்க கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சத்யராஜ் போடும் செம கண்டிஷன் தான் இந்த படத்தின் கதையே..

    இன்றைய காதல்

    இன்றைய காதல்

    ஃபேக் ஐடி தொல்லை, செக்ஸ் சாட், பார்ன் வீடியோக்கள் பார்ப்பது, சோஷியல் மீடியா புல்லிங், மார்ஃபிங், சொர்க்க வாசல் வாட்ஸ் அப் க்ரூப் என இன்றைய இளைஞர்களின் காதல் எந்த அளவுக்கு சின்ன பின்னாமாகி கிடக்கிறது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்லியிருக்கும் பிரதீப் காலத்திற்கு ஏற்றார் போல மாறித்தான் ஆக வேண்டும் என்றும் இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடிக் கொண்டிருக்க முடியாது, நம்பிக்கை வைத்தால் தான் குடும்ப வாழ்க்கையே நடத்த முடியும் என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

    மாங்கொட்டை சீன்

    மாங்கொட்டை சீன்

    செல்போன் இன்றைய இளைஞர்களை எந்தளவுக்கு கெடுக்கிறது என்பதை புரிய வைக்க முடிவு செய்த பிரதீப், அதனை சுற்றி நடக்கும் பிளஸ், மைனஸ்களை ஒரு விமர்சகரை போலவே பிரித்தெடுத்து அதை தனது கதையில் காமெடி, சென்டிமென்ட், காதல் என ஒரு பேக்கேஜிங்காக அடுக்கி சொன்னது சூப்பர். நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு ஒரு மாங்கொட்டையை வைத்து பாடமெடுத்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

    இவானாவா இது

    இவானாவா இது

    பாலா படத்தில் பார்த்த இவானாவா இது என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இன்றைய நவநாகரீக பெண்ணாகவே பிரதிபலித்து இருக்கிறார் இவானா. பெண்கள் அனுபவிக்கும் சமூக வலைதள சீண்டல்கள் எந்தளவுக்கு கொடுமையானது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு சில காட்சிகள் இருப்பது தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது. பெண்கள் அதையெல்லாம் கடந்து ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தில் கடக்கும் விதத்தை காட்சியாக காட்டியிருப்பதற்கு இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    யோகி பாபு சிக்ஸர்

    யோகி பாபு சிக்ஸர்

    கோமாளி படத்தில் யோகி பாபுவை எந்தளவுக்கு பிரதீப் ரங்கநாதன் பயன்படுத்தினாரோ, இந்த படத்தில் அதற்கும் மேலாகவே யோகி பாபுவை பயன்படுத்தி இருக்கிறார். பிரதீப் - இவானா காதல் போர்ஷன் மட்டுமே இருந்திருந்தால் படம் போரடித்து விடும் என்பதை புரிந்து கொண்டு யோகி பாபுவுக்கும் ரவீணாவுக்கும் இடையேயான போர்ஷனை உருவாக்கி படத்தை கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

    பிளஸ்

    பிளஸ்

    யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, எடிட்டர் பிரதீப்பின் வித்தியாசமான கட்ஸ், சத்யராஜ், ராதிகாவின் சீனியாரிட்டியான நடிப்பு உள்ளிட்ட ஏகப்பட்ட பிளஸ்கள் லவ் டுடே படத்தை வெற்றிப்படமாக மாற்றி உள்ளன. இயக்குநராகவும், நடிகராகவும் பிரதீப் ரங்கநாதன் படத்தை கடைசி வரை தாங்கிப் பிடித்திருக்கிறார்.

    மைனஸ்

    மைனஸ்

    இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸை எல்லாம் டார்கெட் செய்து எடுக்கவில்லை. ஏகப்பட்ட ஆபாச காட்சிகள், ஆபாச வசனங்கள் இளைஞர்களை டார்கெட் செய்தே எடுக்கப்பட்டு இருப்பது சில இடங்களில் மைனஸ் ஆக மாறி உள்ளன. இப்படியொரு படத்துக்கு பிசினஸ் ரீதியாக முன்னணி நடிகர் ஒருவரை போட்டு எடுத்திருந்தால் முதல் நாளே மிகப்பெரிய கலெக்‌ஷன் வந்திருக்கும். ஆனால், இன்றைய இளைஞர்களின் காதல் கதைக்கு பிரதீப் - இவானா பக்காவான ஜோடியாகவே ஸ்க்ரீனில் தெரிகின்றனர். லவ் டுடேவே இப்படி இருக்கே.. லவ் டுமாரோ எப்படி இருக்கும்?

    English summary
    Love Today 2022 Movie Review in Tamil (லவ் டுடே திரைவிமர்சனம்): Comali Director Pradeep Ranganathan's debut hero movie deals with nowadays youngsters love and cellphone problems and social media bullying.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X