Loveyapa X Review: இந்தியில் வெளியான லவ் டுடே.. அமீர் கான் மகனும், ஸ்ரீதேவி மகளும் கலக்கினார்களா?

மும்பை: கடந்த ஆண்டு அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான மகராஜ் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து கோர்ட் கேஸ் எல்லாம் சந்தித்து தான் வெளியானது. அந்த படத்தில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் சாமியார் ஒருவரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து வெற்றி பெறும் ஒரு பத்திரிகையாளனாக நடித்து அசத்தியிருப்பார் ஜுனைத் கான்.

இந்நிலையில், அவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் தான் லவ்யப்பா (Loveyapa). பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.

loveyapa  loveyapa review  love today

பாலிவுட்டின் வாரிசு நடிகர்களான அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் போனி கபூர் - ஸ்ரீதேவியின் 2வது மகளான குஷி கபூரும் இணைந்து இந்த படத்தில் ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், அவர்களுக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததா? இல்லையா? என்பது குறித்த ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

லவ் டுடே ரீமேக்: பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, ரவீணா ரவி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான கலக்கலான காமெடி காதல் படம் தான் லவ் டுடே. அந்த படம் தெலுங்கில் அப்படியே டப் செய்து வெளியாகியும் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில், அந்த படம் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. இயக்குநர் அத்வைத் சந்திரன் இயக்கத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூர் இணைந்து நடித்துள்ள லவ் டுடே இந்தி ரீமேக் இன்று லவ்யப்பா (Loveyapa) எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது.

loveyapa  loveyapa review  love today

காமெடி கலாட்டா: இந்த காலத்து இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காமெடி கலந்து இந்த படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். படத்தின் காமெடி காட்சிகள் மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என அனைத்துமே சிறப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பிரபல விமர்சகர் சுமித் கடேல் எந்தவொரு எக்ஸ்பெக்டேஷனும் இல்லாமல் படத்துக்குப் போனேன் படம் செம ஃபன்னாக இருந்தது என விமர்சித்துள்ளார்.

loveyapa  loveyapa review  love today

அமீர்கான் மகன் அட்டகாசம்: பெரிய திரையில் ஜுனைத் கானின் முதல் படம் இது. மனுஷன் ரொமாண்டிக்கில் பின்னி எடுத்திருக்கிறார். இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் காதலர்கள் எப்படி உள்ளனர். ஒருவரது மொபைல் போனை அவர்களது காதலர்கள் பார்த்தாலே பல பிரச்சனைகள் வரும் அளவுக்கு இளைஞர்களின் உலகை டெக்னாலஜி எனும் பெயரில் எப்படி கெடுக்கின்றனர். அதையெல்லாம் கடந்து இன்றைய காதல் எப்படி இருக்கிறது என்பதை போரடிக்காமல் காமெடியாக கொடுத்த விதமே சூப்பர் என பாராட்டி வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்தியிலும் இந்த படத்தின் மூலம் காலடி பதித்துள்ளது.

loveyapa  loveyapa review  love today

குஷி கபூர் தான் குறை: தமிழில் இவானா நடித்த அளவுக்கு கூட இந்தியில் குஷி கபூரின் நடிப்பு இல்லை. ஜான்வி கபூர் அளவுக்கு அவரது தங்கை குஷி கபூர் ஆன் ஸ்க்ரீனில் அசத்த தவறி வருகிறார். அவரை மட்டும் இந்த படத்தில் இருந்து மாற்றியிருந்தால் இன்னமும் படம் சிறப்பாக இருந்திருக்கும். இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெரிதாக ஒட்டவில்லை. துணை நடிகர்கள் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். நிச்சயம் காதலர் தினத்துக்கு சரியான ட்ரீட்டாக இந்த படம் அமையும் என்கின்றனர்.

loveyapa  loveyapa review  love today

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X