Loving Adults Review: கள்ளக்காதலிக்காக மனைவியை கொல்லத் துணிந்த கணவன்.. அப்புறம் தான் ட்விஸ்ட்டே!

Rating:
3.0/5

நடிகர்கள்: தர் சலீம், சோன்ஜா ரிச்டர், சுஸ் வில்கின்ஸ்
இயக்கம்: பார்பரா டாப்ஸி - ராத்தன்பர்க்
இசை: கிறிஸ்டியன் எய்ட்னஸ் ஆண்டர்சன்
ஓடிடி: நெட்பிளிக்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்: Till Death Do Us Part என்கிற தலைப்பில் பிரபல எழுத்தாளர் அனா எக்பர்க் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த லவ்விங் அடல்ட்ஸ்.

Loving Adults Movie Review in Tamil

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த படத்தின் கதை ரொம்பவே இன்டென்ஸாகவும் கணவன் மனைவி உறவு, கள்ளத்தொடர்பு, கள்ளக்காதலிக்காக மனைவியை போட்டுத் தள்ள நினைக்கும் கணவன், கணவரை காப்பாற்ற அவரது கள்ளக் காதலியை கொலை செய்யும் மனைவி என ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் இந்த படம் மிரட்டுகிறது.

தர் சலீம் கணவராகவும் சோன்ஜா ரிச்டர் மனைவியாகவும் வயதானவரை காதலிக்கும் பெண்ணாக சுஸ் வில்கின்ஸும் தத்ரூபமாக நடித்திருப்பது தான் இந்த படத்தை அடுத்து என்ன நடக்கப் போகுது என்கிற ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டுகிறது.

Loving Adults Movie Review in Tamil

லவ்விங் அடல்ட்ஸ் கதை: செல்வாக்கு மிகுந்த மனைவி மற்றும் நோய்வாய்ப்பட்ட மகன் உடன் கிறிஸ்டியன் வாழ்ந்து வருகிறார். வயதான நிலையிலும் ஆசைக்கு ஏது வயது என்பது போல தனது நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேறும் ஸெனியாவுடன் காதல் கொள்கிறார் கிறிஸ்டியன்.

இருவரும் ரகசியமாக கம்பெனி ஸெனியாவின் வீடு என கண்டபடி உடலுறவு கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் மனைவி லியோனோராவுக்குத் தெரிய வர கணவரை கடுமையாக திட்டி கண்டிக்கிறார்.

Loving Adults Movie Review in Tamil

கடுப்பான கிறிஸ்டியன் கள்ளக் காதலியுடன் நிம்மதியாக வாழ தடையாக இருக்கும் மனைவியை போட்டுத் தள்ள முடிவு செய்கிறார். காலையில் மனைவி ஜாகிங் செல்லும் போது டிரக்கை கொண்டு அவரை இடித்துக் கொல்கிறார். ஆனால், வீட்டுக்கு வந்து படுக்கும் போது, அங்கே மனைவி இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.

மனைவிக்கு பதில் யாரை கொன்றோம் என்று புரியாமல் பதற்றத்தில் இருக்கும் கணவரை போலீஸில் பிடித்துக் கொடுக்காமல், தன்னையே கொல்லத் துணிந்த கணவரையும் போட்டுத் தள்ளாமல் கணவருடன் ஒரு டீலிங் பேசி விட்டு கணவர் காதலிக்கும் அந்த பெண்ணை போட்டுத் தள்ளுகிறார். அந்த கொலையை கடைசி வரை போலீஸுக்குத் தெரியாமல் எப்படி இருவரும் மறைக்கின்றனர் என்கிற கதையை பாபநாசம் படம் ரேஞ்சுக்கு செம த்ரில்லிங்குடன் கொண்டு சென்று இருக்கின்றனர்.

Loving Adults Movie Review in Tamil

வயதானவரை காதலிப்பதால் வரும் பிரச்சனை: படத்தின் டைட்டிலே லவ்விங் அடல்ட்ஸ் என இயக்குநர் வைத்திருக்கிறார். வயதானவரை இளம் பெண்கள் காதலிக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும் என்கிற எச்சரிக்கை மணியை அடிப்பது போன்றே படத்தின் கதை நகர்கிறது.

உனக்காகவும் உன் மகனுக்காகவும் என் 20 ஆண்டு கால வாழ்க்கையை தொலைத்து விட்டேன். இப்போ என்னையும் கொல்லப் பார்க்கிறாயா? என மனைவி கேட்கும் இடத்திலும், இது என்னோட வீடு வெளியே போ என கணவனை மிரட்டும் இடத்திலும் சோன்ஜா ரிச்டர் நடிப்பில் மிரட்டுகிறார்.

கொலையும் செய்வாள் மனைவி என்பது போல நீயும் நானும் ஒன்றாக இருக்க தடையாக இருப்பது அந்தப் பெண் தானே அவளையே போட்டுத் தள்ளுகிறேன் என கதையின் வில்லியாக அதுவரை அப்பாவிப் பெண்ணாக இருந்து விட்டு டோட்டலாக மாறும் காட்சிகள் எல்லாம் வேறலெவல்.

மனைவியை டிரக் ஏற்றிக் கொள்கிறேன் என்கிற பெயரில் முதல் சீனிலேயே ஜாகிங் சென்ற வேறொரு அப்பாவிப் பெண்ணை கொல்வதாக இருக்கட்டும் மனைவியை கொல்லவும் முடியாமல் மனைவி சொல்லை தட்டவும் முடியாமல் போலீஸாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்கிற பயத்துடனே தனது ஆசைகளையும் புதிய காதலியிடம் தீர்த்துக் கொள்ளும் நபராக நடிப்பில் வெரைட்டி காட்டி பாராட்டுக்களை அள்ளுகிறார் தர் சலீம்.

Loving Adults Movie Review in Tamil

பிளஸ்: ஆபாசக் காட்சிகள் நிறைந்த அடல்ட் படமாக ஆரம்பிக்காமல் ஆரம்பத்திலேயே மனைவியை கொல்லும் அந்த டிரக் சீனை வைத்து விட்டு, அவர் மனைவி எப்படி அதிலிருந்து தப்பினார். இறந்தது யார்? இவர் ஏன் மனைவியை கொல்லத் துடிக்கிறார். பின்பு இவரை காப்பாற்ற மனைவி ஏன் கொலைகாரி ஆகிறார்.

போலீஸார் கடைசி வரை அந்த பெண்ணின் உடலைக் கூட கைப்பற்ற முடியாமல் எப்படி போகிறது. இந்த கதையை அந்த போலீஸ் அதிகாரி தனது மகளின் திருமணத்தின் போது ஏன் சொல்ல வேண்டும் என ஏகப்பட்ட திருப்பங்கள் அடங்கி இருக்கும் திரைக்கதை தான் இந்த படத்தின் பெரிய பிளஸ். அதற்கு ஏற்ப நடிகர்கள் நடிக்காமல் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

மைனஸ்: ஆரம்பத்தில் கதையை ஆரம்பித்தாலும் அதன் பிறகு கதை எதை நோக்கி செல்கிறது என்கிற தெளிவு இல்லாமல் அடல்ட் பட பாணியில் ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளையும் ஆபாசக் காட்சிகளையும் வைத்து யங் ஆடியன்ஸை பிடிக்கிறேன் என்கிற பெயரில் இழுத்து அடித்து அதன் பின்னர் கதைக்குள் வருவது மைனஸ் ஆக மாறி உள்ளது.

இப்படியொரு கிரைம் ஸ்டோரியில் போலீஸாரின் பங்கு மற்றும் கண்டுபிடிப்பு அதிகம் இருந்திருக்க வேண்டும். மேலும், பிரபல நடிகர் யாராவது சேஸ் செய்துக் கொண்டிருந்தால் மேலும், படத்திற்கு பலமாக இருந்திருக்கும் அதுதான் மிகப்பெரிய குறையாகவே படத்தைக் கெடுக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தை தாராளமாக ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X