Lucky Baskhar Review: லக்கி பாஸ்கர் விமர்சனம்.. துல்கர் சல்மானுக்கு இந்த முறை லக் அடித்ததா?

Rating:
3.5/5

நடிகர்கள்: துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: வெங்கி அட்லூரி
ரேட்டிங்: 3.5

சென்னை: தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியானது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியான இந்த படம் டோலிவுட் ரசிகர்களை தாண்டி பான் இந்தியா ரசிகர்களையே நிச்சயம் கவரும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

lucky baskhar  review  diwali 2024

சீதா ராமம் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் பெரிதாக ஓடாத நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் மீண்டும் துல்கர் சல்மானுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

லக்கி பாஸ்கர் கதை: 1992 ஸ்கேம் வெப்சீரிஸ், பிக்புல் உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே 1989 முதல் 1992 வரை ஹர்ஷத் மேத்தா நடத்திய பணமோசடி குறித்து பல படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி விட்டன. அதே காலக்கட்டத்தில் நடைபெறும் மோசடி கதையாகவே இந்த படத்தை உருவாக்க நினைத்த இயக்குநர் பாஸ்கர் எனும் வங்கி கேஷியர் கதாபாத்திரத்தை துல்கர் சல்மானுக்கு கொடுத்து க்ரியேட்டிவ் லிபர்டியுடன் புகுந்து விளையாடியுள்ளார். 3 வடபாவ் வாங்கவே சிரமப்படும் கேஷியர் அவரை நம்பி காதலித்து வந்த சுமதி (மீனாட்சி சவுத்ரி) என சாமானிய வாழ்க்கை வாழ்ந்து வரும் நபர் ஒரு கட்டத்தில் மோசடி செய்து எப்படி கோடீஸ்வரர் ஆகிறார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் மற்றும் சிக்கல்கள் வருகின்றன என்பதை ரொம்பவே சுவாரஸ்யமாகவும் போர் அடிக்காமல் சீட்டின் நுனிக்கே சென்றும் பார்க்கும் விதமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.

படம் எப்படி இருக்கு?: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் சல்மானுக்கு அப்படியொரு அல்வா சாப்பிடும் ரோல். மனுஷன் திரையை ஒட்டுமொத்தமாக தனது வசனங்களில் ஆக்கிரமித்து சிசிடிவி இல்லாத காலக்கட்டத்தில் எப்படியெல்லாம் வங்கிகளில் மோசடி செய்யலாம் என்கிற பாடத்தையே திரையில் நடத்தியிருக்கிறார். துல்கர் சல்மானுக்கு சற்றும் குறையாமல் மீனாட்சி சவுத்ரி படத்துக்குப் படம் தனது நடிப்பில் முன்னேற்றத்தை காட்டி வருகிறார். இந்த ஆண்டு கோட் படத்தை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரிக்கு இந்த படம் அமைந்துள்ளது. அடுத்து பாலகிருஷ்ணா படத்தில் நடித்து வருகிறார். பணம் மீதும் பணமோசடி மீதும் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக படத்தின் திரைக்கதை அமைத்த இடத்தில் இயக்குநர் சிக்ஸர் அடித்திருக்கிறார். அதனால், ஏற்படும் பக்க விளைவுகளையும் பக்காவாக எடுத்து வைத்து இருப்பது சிறப்பு.

பிளஸ்: முன்னணி நடிகர்களின் நடிப்பு மற்றும் இயக்குநரின் வசனங்களை தாண்டி படத்திற்கு பெரிய பலமே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தான். அமரன் படத்திலும் வேறலெவல் மியூசிக் போட்டு ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கிய ஜி.வி. பிரகாஷ் லக்கி பாஸ்கர் படத்திலும் மிரட்டியிருக்கிறார். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு நம்மை 30 வருடங்களுக்கு முன்னோக்கி கொண்டு சென்று விடுகிறது. காஸ்ட்யூம், கலையலங்காரம் என அனைத்துமே அற்புதம்.

மைனஸ்: ஏற்கனவே இதே பாணியில் பல படங்கள் மற்றும் வெப்தொடர்கள் வெளியான நிலையில், படம் இப்படித்தான் தொடங்கி, இப்படித்தான் முடியும் என்கிற அனுமானம் ஒரு சின்ன சிக்கலாக உள்ளது. ஆனால், இயக்குநர் முடிந்தவரை அதை திரைக்கதை மூலமாக ட்விஸ்ட் வைத்து சரிகட்டியிருக்கிறார். மற்றபடி பெரிதாக குறை சொல்லும் அளவுக்கு இந்த படமும் இல்லை. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 4 படங்களும் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றாது என்றே சொல்லலாம். அதிலும், இந்த படம் வொர்த் வர்மா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X