Lust Stories 2 Review: 4 கதையில் எந்த கதை சூப்பரா இருக்கு? லஸ்ட் ஸ்டோரீஸ் 2 விமர்சனம்!
நடிகர்கள்: தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர், திலோத்தமா சோமே, அம்ருதா சுபாஷ்
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
இயக்குநர்கள்: பால்கி, கொன்கனா சென் ஷர்மா, சுஜய் கோஷ் மற்றும் அமித் ஷர்மா
சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியை 4 இயக்குநர்கள் தனித் தனி கதையாக இயக்கி உள்ளனர்.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான பால்கி, கொன்கனா சென் ஷர்மா, சுஜய் கோஷ் மற்றும் அமித் ஷர்மா இயக்கி உள்ளனர்.

இதில், கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் எந்த கதை சிறப்பா இருக்கு என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
மிருணாள் தாகூர் கதை: இயக்குநர் பால்கி இயக்கிய 'மேட் ஃபார் ஈச் அதர்' கதை தான் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியில் முதல் கதை. பழம்பெரும் நடிகை நீனா குப்தா, சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் மற்றும் அங்கத் பேடி உள்ளிட்ட பலர் இந்த கதையில் நடித்துள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2வுக்கு வெறும் பாட்டி பேசும் வசனங்கள் மூலமாகவே கதையை ஓட்ட முயற்சித்து இருக்கிறார் பால்கி. திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் செக்ஸ் வாழ்க்கை சரியாக அமைந்தால் தான் திருமண வாழ்க்கை நீடிக்கும் என சிவராஜ் சித்த வைத்தியசாலை தாத்தா மாதிரி இரு வீட்டார் சந்திப்பின் போது பாட்டி பேசுகிறார். பாட்டியின் பேச்சைக் கேட்டு பேத்தி மிருணாள் தாகூர் தனது இணையுடன் இணைந்து விடுவது தான் அந்த கதை.
ஹோட்டல் ரூம் ரூமாக மிருணாள் தாகூர் தனது வருங்கால கணவருடன் சென்றும் ஒரு பிட்டுக் கூட காட்டாததால் இளைஞர்கள் ஆரம்பத்திலேயே டென்ஷன் ஆகி விடுகின்றனர்.
உங்க வீட்டு பெட்ல வேலைக்காரி இருந்தா: பெண் இயக்குநர் கொன்கனா ஷென் ஷர்மா இயக்கிய 2வது கதை தான் இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியிலேயே வித்தியாசமாகவும் லஸ்ட்டாகவும் இருக்கு.
திலோத்தமா சோமே, அம்ருதா சுபாஷ் நடித்துள்ள இந்த கதையில், வீட்டில் வேலைக்காரியை சுத்தம் பண்ண சொல்லிவிட்டு வேலைக்கு சென்ற திலோத்தமா திடீரென வீட்டுக்கு முன்னதாகவே வர, தனது படுக்கையறையில் வேலைக்காரி ஒரு ஆணுடன் உடலுறவு கொள்வதை பார்த்து அதிர்ந்து போகிறார்.
ஆனால், அந்த வேலைக்காரியை கண்டிப்பதற்கு பதிலாக, தனிமையில் வாடும் திலோத்தமா தினமும் அந்த நேரத்துக்கு ரகசியமாக வந்து வேலைக்காரி செய்யும் உடலுறவை மறைமுகமாக கண்ணாடி வழியே ஒளிந்திருந்து வேடிக்கைப் பார்த்து ஆர்கஸம் அடைகிறார்.
ஒரு நாள் இவர் திருட்டுத்தனமாக பார்ப்பதை வேலைக்காரி அறிந்து கொள்கிறார். ஆனாலும், தனது கணவருடன் அந்த வீட்டு பெட்டில் மேட்டர் செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்கிறார். இவரும் தொடர்ந்து பார்க்க ஒரு நாள் பல்லி ஓடி வர கத்தி விடுகிறார் திலோத்தமா.
அதன் பின்னர் படுக்கையில் இருந்து இருவரும் எழுந்து வர என் படுக்கையில் எப்படி இவ்ளோ கேவலமான வேலையை பண்ணலாம் என திலோத்தமா எதுவும் தெரியாதது போல திட்ட, நீ பண்ண வேலை கேவலம் இல்லையா என வேலைக்காரி எகிறுகிறார்.
அதன் பின்னர், என்ன நடந்தது என்கிற கதையை இன்டென்ஸ் ஆன நடிப்பால் சொன்னாலும், பல காட்சிகள் நம்பும் படியாகவே இல்லை. வேலைக்காரியின் கணவருக்கு தினமும் வேலையே இல்லாமல் இதே வேலையாகத்தான் இருப்பாரா? ஃபிளாட்டில் எப்படி தினமும் வேலைக்காரியின் கணவர் வந்து செல்ல முடியும் என பல கேள்விகள் இருந்தாலும், மற்ற மொக்கை கதைகளுடன் கம்பேர் செய்தால், இது கொஞ்சம் பெஸ்ட் என்றே சொல்லலாம்.

தமன்னா மற்றும் கஜோல் கதை: 3வதாக இடம் பெறும் தமன்னா, விஜய் வர்மா மோசடி, திரில்லர், கோஸ்ட், காம கதையும் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. கடைசியாக இடம்பெற்ற நடிகை கஜோல் கதையின் ஆரம்ப காட்சியிலேயே படுக்கையில் கஜோலை அவரது கணவர் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சிகள் வைத்து இயக்குநர் பதை பதைக்க வைத்தாலும், அதன் பின்னர் வழக்கமாக பார்த்து சளித்த கதையையே இயக்கி உள்ளார் அமித் ரவிந்தர் நாத் ஷர்மா.
தமன்னா கதையில் விஜய் வர்மாவுடன் அவர் செய்யும் உடலுறவு காட்சி தான் இந்த 2 மணி நேர 12 நிமிட ஆந்தாலஜியில் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











