Lust Stories 2 Review: செத்துப்போன தமன்னாக்கூட செக்ஸ்.. லஸ்ட் ஸ்டோரீஸ் 2 விமர்சனம் இதோ!

Rating:
2.5/5
Star Cast: தமன்னா, விஜய் வர்மா
Director: சுஜய் கோஷ்

ஓடிடி: நெட்பிளிக்ஸ்

சென்னை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜியே தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் படமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர்கள் நடித்த கதை இந்த ஆந்தாலஜியில் மூன்றாவதாக இடம்பெற்றாலும், முதலில் அந்த கதையை பற்றி தெரிந்துக் கொள்ளவே இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் வெயிட்டிங்.

வித்யா பாலன் நடித்த கஹானி படத்தை இயக்கிய இயக்குநர் சுஜய் கோஷ் இந்த 3வது கதையை இயக்கி உள்ளார். லஸ்ட் ஸ்டோரீஸுக்கு பதிலாக கோஸ்ட் ஸ்டோரீஸ் கதையை இயக்கி விட்டார் என்றே தோன்றுகிறது.

முதல் கதையில் சீதாராமம் நடிகை மிருணாள் தாகூரும் கடைசி கதையில் கஜோலும் நடித்துள்ள நிலையில், தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

Lust Stories 2 Review in Tamil: Tamannaah and Vijay Varma hot scenes only saves the show

என்ன கதை: விஜய் வர்மா பெரிய கம்பெனிக்கு அவர் விரும்பியவாறு சிஇஓவாக மாறிவிட்டார். அதன் பின்னர் பெரிய இடத்து பெண்ணையும் திருமணம் செய்துக் கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு கொள்ள அவசர அவசமாக அந்த பெண் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது மரத்தில் விஜய் வர்மா கார் மோதுகிறது.

பின்னர், காரை ரிப்பேர் செய்ய செல்லும் இடத்தில் தமன்னா ஆடிப் பாடுவதை பார்த்து விட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன தனது மனைவி இங்கே என்ன பண்றா? என அவரிடம் விசாரிக்கிறார்.

தமன்னாவின் தற்போதைய கவர்ச்சிகரமான கட்டழகை பார்த்து காமம் கொள்ளும் விஜய் வர்மா அவருடன் உறவில் ஈடுபடுகிறார். தமன்னா தன்னை கொல்ல விஜய் வர்மாவின் மனைவி தான் ஆட்களை அனுப்பினார் என்று சொல்ல ஷாக் ஆகும் விஜய் வர்மா அதன் பின்னர் என்ன செய்கிறார் என்பது தான் கதை.

தமன்னா, விஜய் வர்மா போர்ஷன் எப்படி இருக்கு?: ஆரம்பக் காட்சியிலேயே காரில் விஜய் வர்மா இன்னொரு பெண்ணுடன் செக்ஸ் சாட் செய்துக் கொண்டிருக்க, கம்பெனியில் முக்கிய முடிவை எடுக்கப் போகிறோம் உடனே வா என சொல்கின்றனர்.

இன்னொரு பக்கம் அவர் மனைவி மற்றும் குழந்தைகளை காட்டுகின்றனர். அப்போது தான் விஜய் வர்மாவுக்கு திருமணம் ஆன விஷயமும் அவரது மனைவியும் ஒரு போர்ட் மெம்பர் என்பதும் தெரிய வருகிறது.

Lust Stories 2 Review in Tamil: Tamannaah and Vijay Varma hot scenes only saves the show

அதன் பின்னர், வீடியோ காலில் உள்ளாடையையும் கழட்டிவிட்டு, ஆபிஸுக்கு போகப் போறியா? இங்கே வரப் போறியா என்று அந்த பெண் கேட்க அவரை பார்த்துக் கொண்டே எதிரே வரும் சைக்கிள் பெல் அடிக்க காரை திருப்பி மரத்தில் மோதி விடுகிறார்.

அதன் பின்னர், தமன்னாவை அந்த ஊரில் விஜய் வர்மா சந்திக்க, தமன்னாவுக்கு என்ன ஆச்சு? என்றும் 10 வருஷமா ஏன் தன்னை பார்க்கவில்லை என்றும் கேட்கிறார். தமன்னா ஃபிரெஷ் அப் ஆகிவிட்டு வருகிறேன் என சொல்லி குளிக்கச் செல்ல பாத்ரூம் தாழ்பாள் ஓட்டை வழியாக தமன்னாவை பார்த்து காமம் கொள்கிறார்.

மீண்டும் தமன்னாவை தன்னுடன் வரச் சொல்லிவிட்டு அவருடன் உறவு கொள்கிறார். தான் கர்ப்பமாக இருந்ததை அறிந்து விஜய் வர்மாவின் தற்போதைய மனைவி தான் தன்னை கொல்ல ஆளை அனுப்பினர் என்று தமன்னா கூற, அப்போ அதை விசாரிக்க வேண்டும் என சொல்லி விட்டு கலவி முடிந்ததும் விஜய் வர்மா ஒரு விஷயத்தை உளர தமன்னாவுக்கு விஜய் வர்மா மீதே சந்தேகம் வருகிறது.

பிளஸ்: சுஜய் கோஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள த்ரில்லர் லஸ்ட் கதையில் கோஸ்ட் ஸ்பெஷலும் கலந்துக் கட்டி கொடுத்திருக்கிறார். தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் லிப் லாக் காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும், வசனமாடா முக்கியம் படத்தை பாருடா என்பது போல அதெல்லாம் ஏன் பேசிக்கிட்டு, சீக்கிரம் வேலையை பாருன்னு தமன்னா தமிழில் பேசும் வசனங்கள் இளைஞர்களை நிச்சயம் கவர்ந்து விடும்.

Lust Stories 2 Review in Tamil: Tamannaah and Vijay Varma hot scenes only saves the show

மைனஸ்: என்ன டா கதை முழுக்க காமமாகவே சென்றுக் கொண்டிருக்கிறதே என கடுப்பான ரசிகர்களுக்கு கடைசியில் கிளைமேக்ஸில் ட்விஸ்ட் வைக்கிறேன் என இயக்குநர் வைத்த ட்விஸ்ட் இருக்கே? இதுவரை ஏன்டா இதை பார்த்தோம் என்றே தோன்ற வைக்கிறது.

ஆரம்பத்திலேயே, என்ன அந்த சாலைகள் எல்லாம் சிஜியில் இருக்கு, நடந்து சென்றவர்கள் திரும்பவும் நடக்கின்றனர். போலீஸ் ரோலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லேட்டஸ்ட் மகாபாரதத்தில் பலராமராக நடித்தவர் வருகிறாரே என அத்தனையும் செயற்கையாக இருக்கும் போதே கதையை கெஸ் பண்ண முடிந்து விடுவது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X