Kanguva First Review: கங்குவா எப்படி இருக்கு? 2000 கோடிக்கு கன்டன்ட் இருக்கா? மதன் கார்க்கி விமர்சனம்
சென்னை: சூர்யா தற்போது மிகவும் பிசியாகவே உள்ளார். தான் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் செலவு செய்து வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் கங்குவா. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும், படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. படத்திற்கான புரோமோஷன் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய மதன் கார்க்கி படம் எப்படி உள்ளது என்பது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய கேமியோ கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உரையாடும்போது எல்லாம் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது.

சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் என தள்ளிப்போனது. இது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள கங்குவா படம் சூர்யாவின் 42வது படமாகும். படத்தில் இருந்து இப்போதைக்கு இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக தீஷா பதானி நடித்துள்ளார்.
கங்குவா: கங்குவா படம் ரூபாய் 2000 கோடிகள் வரை வசூல் செய்யும் என தயாரிப்பாளார் தெரிவித்து வருகின்றார். மேலும் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் படத்தின் வசூல் மற்றும் அதற்கு செலுத்தும் ஜி.எஸ்.டி பில்லினை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் நவம்பரில் கங்குவா, ஜனவரியில் சூர்யா 44, அடுத்த ஆண்டு இறுதிக்குள் சூர்யா 45 என தொடர்ந்து படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

புரோமோஷன்: கங்குவா படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா படத்தில் தனது தம்பியும் நடிகருமான கார்த்தி நடித்திருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே இந்தப் படத்தில் கார்த்தி நடித்ததை பேட்டியில் கேஷ்வலாக தயாரிப்பாளர் சொல்லியிருந்தார். அதன் பின்னர் இது குறித்து வாய் திறக்கவில்லை. நாளுக்கு நாள் படத்தின் மீதான ஹைப் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விமர்சனம்: அதாவது அவரது எக்ஸ் பதிவில், ”முழுப்படத்தையும் பார்த்தேன். டப்பிங்கின்போது படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நான் 100 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது படத்தின் தாக்கம் மனதில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆழமான கதை, நுணுக்கமான திரைக்கதை, பிரமாண்டமான காட்சிகள் மற்றும் கம்பீரமான இசை என கங்குவா ஒரு பவர் ஹவுஸாக மாறி நிற்கின்றது. சூர்யா நடித்த படங்களில் தலைசிறந்த படங்களில் இப்படமும் இருக்கும். இப்படியான கதையை உருவாக்கி இயக்கியதற்காகவே சிவாவிற்கு நன்றியும் பாராட்டும். இப்படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் நன்றி” என எழுதியுள்ளார். மதன் கார்க்கியின் இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் புருவம் உயர்த்தவும் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











