மா.கா.பா.வின் புதுவிதமான காமெடியில்... மாணிக்! விமர்சனம்

மா.கா.பா.ஆனந்தின் காமெடி நடிப்பில் வெளிவந்துள்ளது மாணிக் திரைப்படம்.

Rating:
2.0/5

சென்னை : பல காமெடிகளை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மாணிக் செய்யும் காமெடி ரொம்ப புதுசு.

1980களில் இருந்து தொடங்குகிறது படம். மனோபாலாவிடன் கணக்குப்பிள்ளையாக இருக்கும் மா.கா.பா.ஆனந்த் அவர் பெண்ணை காதலித்ததால் கொல்லப்படுகிறார். மேலோகம் செல்லும் மாகாபா அடுத்த ஜென்மமாக பூமியில் பிறக்கிறார். பிறந்த உடனே அவரை கொன்றுவிடும்படி சாமியார் ஒருவர் கூறுகிறார். ஆனால் தனது குழந்தை மீதான பாசத்தால் மா.கா.பா.வின் அம்மா உயிர் தப்ப வைக்கிறார்.

பாட்டியின் அரவணைப்பில் ஒரு காப்பகத்தில் வளரும் மா.கா.பா.ஆனந்த், பாட்டி இறந்த பிறகு, தனது நண்பன் வஸ்தவனுடன் சென்னைக்கு வருகிறார். தடைவிதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டியில் திரும்பவும் விளையாட வைத்து கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என சபதம் கொள்கிறார்.

Maanik movie review

இதில் அவர் சாதித்தாரா இல்லையா என்பதை காமெடியுடன் சொல்ல முயல்கிறது மாணிக்.

கிட்டத்தட்ட 'பாபா' படத்தில் காமெடி வெர்ஷனை மட்டும் எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது மாணிக். பேரு மட்டும் நம்ம பாட்ஷாவை நினைவுப்படுத்துகிறது. புதுவிதமாக ஏதோ ஒன்றை முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மார்டின். ஆனால் அது ஒர்க்கவுட் ஆகுமா இல்லையா என்பது கேள்விக்குறியே.

பேண்டசி கலந்த காமெடி படமாக இருப்பதால், ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

Maanik movie review

சிங்கிள் ஹீரோ படம் என்பதால் மிகுந்த மெனக்கெடலுடன் நடித்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். துறுதுறுப்பான அவரது நடிப்பு கவர்கிறது. படத்தின் கதை களம் அவருடைய ஏரியா என்பதால், நிறுத்தி நிதானமாக விளையாடி செஞ்சுரி அடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் 25 ரன்களில் பரிதாபமாக கேட்சு கொடுத்து அவுட்டாகிறார். அடுத்த மேட்சில் நல்லா பெர்பார்ம் பண்ணுங்க மா.கா.பா.

சூசா குமார் படம் முழுக்க அழகு தேவதையாக வருகிறார். காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை. அவரது அப்ப இறக்கும் காட்சி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

Maanik movie review

கவுரவ வேடத்தில் வரும் யோகி பாபு சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். மனோபாலா, மதுமிதா சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். வில்லன் அருள்தாஸ் அறிமுக காட்சியும் அவர் செய்யும் அலப்பறைகளும் காமெடி கலந்த மிரட்டல்.

தரண்குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவில் பேண்டசி காட்சிகள் சிறப்பு. படத்தொகுப்பும் வித்தியாசமாகவே இருக்கிறது.

நம்மை நன்றாக சிரிக்க வைத்திருந்தால், இந்த 'மாணிக்' - ஐ நாம் பாட்ஷாவாக கொண்டாடியிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X