twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Maara Review..எப்படி இருக்கு மாதவன், ஷ்ரத்தாவின் ரொமான்டிக் டிராமா, மாறா?

    By
    |

    Rating:
    2.5/5
    Star Cast: ஆர் மாதவன், சிரத்தா ஸ்ரீநாத், சுஷிவதா, மௌலி, அலெக்சாண்டர் பாபு
    Director: திலீப் குமார்

    தான் கேட்ட கதை ஒன்று ஓவியமாக வரையப்பட்டிருக்க, அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளை தேடிச் செல்லும் இளம் பெண் செய்யும் டச்சிங் விஷயம்தான், மாறா.

    அமேசானில் வெளியாயிருக்கும் படம் இது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளிவந்த 'சார்லி'யின் ரீமேக். பழங்கால கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்து பாதுகாக்கும் வேலையைச் செய்யும் ஷ்ரத்தா, கேரளாவுக்கு செல்கிறார். தங்கும் இடம் தேடி அலையும் இடத்தில், தான் சிறுவயதில் கேட்டகதை, ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது. ஆவலாகும் ஷ்ரத்தா, அதை வரைந்த மாறாவைத் (மாதவன்) தேடுகிறார்.

    பல வருட காதலாமே.. திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகை ஆனந்தியின் கணவர் இவர்தான்! பல வருட காதலாமே.. திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகை ஆனந்தியின் கணவர் இவர்தான்!

    சந்தித்தாரா

    சந்தித்தாரா

    அவர் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஷ்ரத்தாவுக்கு மாறா வரைந்த ஓவியம் கிடைக்கிறது. நிஜக் கதையான அது, பாதியோடு இருக்க, அதற்கடுத்து என்ன நடந்திருக்கும் எனத் தேடி செல் கிறார் ஷ்ரத்தா. அவர் அந்த மாறாவை சந்தித்தாரா, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

    சிலிர்க்கும் உணர்வு

    சிலிர்க்கும் உணர்வு

    ஷ்ரத்தாதான் கதையின் நாயகி. மொத்தப் படத்தையும் அவர்தான் இழுத்துச் செல்கிறார். அம்மாவுடன் பேசும்போது காட்டுகிற செல்லக் கோபம், சுவர் ஓவியத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற வியப்பு, மாறாவுடன் போனில் பேசும்போது ஏற்படுகிறது பதட்டம், மெளலியின் காதலைக் கேட்டு சிலிர்க்கும் உணர்வு என நடிப்பால் மிரட்டுகிறார்.

    பாலியல் தொழிலாளி

    பாலியல் தொழிலாளி

    மாதவன் அதிகமாக வரவில்லை என்றாலும் கதை அவரைச் சுற்றியே நகர்வால், மொத்தக் காட்சியிலும் அவர் இருப்பது போன்றே திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். வீட்டுக்குள் திருட வந்தவனுடன் சரக்கடிப்பது, அவனுடன் திருடச் செல்வது, பாலியல் தொழிலாளியின் பிறந்த நாளை, மீன் வறுத்துக் கொண்டாடுவது, தன்னை வளர்த்த வெள்ளையிடம் செல்லம் காட்டுவது, கிளைமாக்ஸில் மெளலியை கட்டி அணைத்தபடி சிந்தும் கண்ணீர் என மாதவன், இன்னும் அப்படியே இருக்கிறார் நடிப்பில்.

    நறுக் மீசை

    நறுக் மீசை

    மருத்துவராக ஷிவதா. திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் மாற்றம் தெரிகிறது, அவர் முகத்தில். நறுக் மீசையுடன் வரும் திருடன் அலெக்ஸாண்டர் பாபு, வேற மாதிரி லுக்கில் மாறா பற்றி சொல்லும் கிஷோர், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கும் 'ஆன்டிக்' பாய் எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், பாலியல் தொழிலாளி அபிராமி, அந்த மீனாட்சியை மனதில் சுமந்துகொண்டு அலையும் மெளலி என அத்தனை கேரக்டரும் நச்!

    சரிகட்டி வருகிறார்

    சரிகட்டி வருகிறார்

    படத்தை ரிச்சாக கொடுக்க அதிகம் மெனக்கெட்டிருக்கிறார், இயக்குனர் திலீப்குமார். இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய சில காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து போவதால், போரடிப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அதை சரிகட்டி வருகிறார் அழகாக. ஜிப்ரான் இசையில் முதல் பாடல் கேட்கும்படி இருக்கிறது. மற்றவை மனதில் தங்கவில்லை.

    ஒற்றிக் கொள்ளலாம்

    ஒற்றிக் கொள்ளலாம்

    ஆனால், அவருடைய பின்னணி இசை, படத்துக்கு பலம். ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமார் ஆகியோரின் ஒளிப்பதிவில், சில காட்சிகள் அப்படியே ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. கலை இயக்குனர் அஜயன் சலிசெரிக்குத்தான் அதிக வேலை. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

    English summary
    Maara is a romantic drama. but meanders in search of depth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X