Maari 2 Review: எத்தனை நண்பன் துரோகியானாலும் எத்தனை துரோகி எதிரியானாலும் நான் தாங்குவேன்டா...

இரண்டு ரவுடிகளுக்கு இடையே நடக்கும் சண்டை தான் மாரி 2.

Recommended Video

மாரி 2 பக்கா மாசா இருக்கு- வீடியோ

Rating:
3.0/5

சென்னை : திருந்தி வாழ நினைக்கும் முன்னாள் ரவுடிக்கும், அவனை பழிவாங்க துடிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாரி 2.

முதல் பாகத்தை போலவே இதிலும் பக்கா ரவுடி மாரி (தனுஷ்). அவருடைய நண்பன் கிருஷ்ணா. இருவரும் சேர்ந்து உள்ளூரில் கெத்துகாட்டி ரவுடியிசம் செய்து வருகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒருவனை போட்டு தள்ளி அந்த பெண்ணை காப்பாற்றுகிறார் மாரி. இதை பார்க்கு அராத்து ஆனந்திக்கு (சாய் பல்லவி), மாரி மீது காதல் மலர்கிறது. ஆனால் கொல்லப்பட்ட நபரின் தம்பியான பீஜாவுக்கு (டோவினோ தாமஸ்) மாரி மீது பகை உருவாகிறது. மாரியை கல்யாணம் செய்ய வேண்டும் என சாய் பல்லவியும், கொலை செய்ய வேண்டும் என டோவினோ தாமஸும் துரத்துகிறார்கள். சாய் பல்லவி மீது தனுஷுக்கும் காதல் மலர்கிறது.

Maari 2 movie review

இந்நிலையில் டோனிடோ சாமர்த்தியமாக காய் நகர்த்தி, தனுஷுக்கும், கிருஷ்ணாவுக்கும் இடையேயான நட்பை முறிக்கிறார். தனுஷ் மீது கிருஷ்ணா பகை கொண்டு அவரை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இதில் சாய் பல்லவியும் தனுஷும் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள், வில்லன் டோவினோவை தனுஷ் ஜெயித்தாரா என்பதே மீதிப்படம்.

மாரி முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி ஆக்ஷன், மாஸ் வசனங்கள், சூப்பர் காமெடி, உருக வைக்கும் காதல் என வெரைட்டியாக இருக்கிறது மாரி 2.

Maari 2 movie review

மாரி 2 மூலம் தனுஷ் தனது ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார். வடசென்னையில் அண்டர்ப்ளே செய்த தனுஷ், ,இந்த படத்தில் இறங்கி அடித்து கலக்கியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், பஞ்ச் டயலாக்குகளிலும் மாஸ் காட்டியிருக்கிறார். சாய் பல்லவியுடனான ரொமான்ஸ் காட்சிகள், அவரை பிரியும் போது ஏற்படும் வலி, பொறுப்பான அப்பா, மாஸ் ரவுடி என யதார்த்தம் மீறாத தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

மெல்லிய மலராக பார்த்த சாய் பல்லவியை அராத்து ஆனந்தியாக பார்ப்பது செம சர்ப்ரைஸ். தனுஷுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

Maari 2 movie review

ரோபா சங்கர், அறந்தாங்கி நிஷா, கல்லூரி வினோத் ஆகியோருடன் தனுஷும், சாய் பல்லவியும் செய்யும் காமெடிக்கு தியேட்டரே குலுங்கி சிரிக்கிறது. குட்டி மாரியாக நடித்துள்ள மாஸ்டர் ராகவ், சேட்டை செய்து ஸ்கோர் செய்கிறார்.

பொறுப்பான ஐஏஎஸ் அதிகாரியாக வந்து செல்கிறார் வரலட்சுமி. உடல்மொழியில் கெத்து காட்டியிருக்கிறார். கிருஷ்ணாவுக்கு இந்த படம் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நம்பலாம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

Maari 2 movie review

மிரட்டல் வில்லனாக வரும் டோவினோ தாமஸ், உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். சைக்கோதனமான அவரது வில்லனத்தனம் மாரி முன்பு கெத்து காட்டி நிற்கிறது. வசன உச்சரிப்பில் நிறைய மலையாள வாடை வீசுகிறது. சில சமயம் மாதவன் போலவும், சில சமயம் பிரித்விராஜ் போலவும் தெரிகிறார்.

படத்தில் பஞ்ச் டயலாக்குகளுக்கு குறைவே இல்லை. ஒரு சில வசனங்கள் மாஸாகவும், அதே சமயம் கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கின்றன. உதாரணமாக, "பெண்ணை பொருளாக நினைக்காத ஆண் கிடைக்கும் வரை காத்திரு", என தனுஷ் பேசும் வசனத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

யுவனின் இசையில் படம் வேற வெலக்கு மெருகேறியிருக்கிறது. பிரபு தேவா நடனமைப்பில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் - சாய் பல்லவி ஆட்டம் செம தூள். இளையராஜா குரலில் ஒலிக்கும் "வானம் பொழியாம பூமி விளையுமா கூறு " பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

Maari 2 movie review

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி.கேவின் எடிட்டிங்கும் ஒரு மாஸ் ஆக்ஷன் படத்துக்கு தேவையான விஷயங்களை கச்சிதமாக செய்திருக்கிறது. சில்வாவின் சண்டை பயிற்சியில் ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கின்றன.

ஒரு முழு நீள பொழுது போக்கு படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் படத்தின் நீளம் தான் சற்று அதிகமாக இருக்கிறது. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த படம் பிடிக்கும். அவரது ரசிகர் அல்லாதவர்களுக்கு இப்படம் போரடிக்க வாய்ப்புகள் அதிகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X