Maaveeran Twitter Review: விஜய்க்கு திருமலை.. அஜித்துக்கு தீனா.. சிவகார்த்திகேயனுக்கு மாவீரன்!
சென்னை: இந்த முறை மிஸ் ஆகாது என நம்பிக்கையுடன் மாவீரன் படத்தை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி தியேட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் வாய்ஸ் மட்டும் கொடுத்த விஜய்சேதுபதி என பல பிரபலங்கள் கூட்டணியில் உருவான மாவீரன் படம் இன்று வெளியானது.

இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு, படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி, சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் எப்படி என பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே தொகுப்பாக பார்க்கலாம்.
சண்டை காட்சி செம: நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக மாற சீமராஜா படத்திலேயே முயற்சி செய்திருந்தார். பீரியட் போர்ஷன் எல்லாம் கஷ்டப்பட்டு நடித்தாலும் அவருக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. அதே போல சூப்பர் ஹீரோவாக பேட்மேன் ஸ்டைலில் ஹீரோ படத்தில் நடித்தார். அந்த படமும் அவரை கைவிட்டது.
இந்நிலையில், பக்கா ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயனை இந்த மாவீரன் படம் மாற்றி உள்ளது என ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.
விஜய், அஜித் வரிசையில்: நடிகர் விஜய்யை பக்கா ஆக்ஷன் ஹீரோவாக திருமலை படம் மாற்றியது. அதே போல அஜித்துக்கு தீனா படம் ஸ்ட்ராங்கான ஆக்ஷன் படமாக அமைந்தது. அதுபோல, சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படம் ஆக்ஷன் படமாக மாறியுள்ளது.
முதல் பாதி முழுவதும் அவரது ஸ்டன்ட் காட்சிகள், நடிப்பு எல்லாமே வேறலெவல் மிரட்டல், ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள மாவீரன் படம் ஹிட் அடிப்பது கன்ஃபார்ம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
கார்ட்டூன் சட்டை: ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்துள்ள நிலையில், அவர் அணிந்துள்ள சட்டை மாவீரன் படத்தின் கார்ட்டூன் தீமை குறிப்பது போல கார்ட்டூன் டிசைனிலேயே உருவாக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தலையை தொப்பிப் போட்டு மறைத்து வரும் நிலையில், ஒருவேளை ஜவான் ஷாருக்கான் போல மொட்டை தலையுடன் நடிக்கிறாரா? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகிறது.
இரண்டாம் பாதி சொதப்பல்: மாவீரன் முதல் பாதி சூப்பராக சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் சில லேக் இருப்பதாகவும், திரும்ப திரும்ப ரிப்பீட் காட்சிகள் வந்து கடுப்பேற்றுவதாக இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
முதல் பாதி முழுக்க சிவகார்த்திகேயன், யோகி பாபுவின் காமெடி ரோலர் கோஸ்டர் கலக்கல் என்றும் இடைவேளை காட்சி செம சூப்பர் என்றும் பாராட்டி உள்ளார்.
நூறு கோடி கன்ஃபார்ம்: மாவீரன் முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி டீசென்ட்டாகவும் இருக்கு, கண்டிப்பா டாக்டர், டான் படங்களை போல இந்த மாவீரன் படமும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











