twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Maayon Review: பத்மநாப சாமி கோயில் கதையா? சிபிராஜின் மாயோன் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன்

    இசை: இளையராஜா

    இயக்கம்: கிஷோர்

    சென்னை: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சாமி கோயிலின் ரகசிய அறைகளில் ஏராளமான பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டன. அந்த விஷயத்தை மனதில் வைத்து இயக்குநர் கிஷோர் இப்படி ஒரு படத்தை உருவாக்கி உள்ளாரா? என்கிற கேள்வி படம் பார்க்கும் போது இயல்பாகவே எழுகிறது.

    ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற ஒரு புதையல் தேடுதல் வேட்டை படத்தை இயக்குநர் கிஷோர் படமாக்கிய விதம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

    நடிகர் சிபிராஜ், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி மற்றும் பகவதி பெருமாள் என ஸ்டார் காஸ்ட் அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    ஆமா.. அத்தனை பேரும் யூடியூப் ஓடிப்போய்.. ஆமா.. அத்தனை பேரும் யூடியூப் ஓடிப்போய்..

    மாயோன் கதை

    மாயோன் கதை

    மாயோன் மலை எனும் இடத்தில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை ஆராய்ச்சி செய்யும் தொல்லியல் துறையில் கே.எஸ். ரவிக்குமாரின் தலைமைக்கு கீழ் நாயகன் சிபிராஜ், நாயகி தான்யா ரவிச்சந்திரன், வில்லன் ஹரிஷ் பெரடி மற்றும் நண்பர் பகவதி பெருமாள் உள்ளனர். அந்த கோயில் இருக்கும் புதையலை திருட வேண்டும் என சிபி ராஜும் ஹரிஷ் பெரடியும் திட்டம் போட அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பது தான் மாயோன் படத்தின் கதை.

    புதையல் வேட்டை

    புதையல் வேட்டை

    மம்மி, டாம்ப் ரைடர், டிரெஷர் ஹன்ட் என ஏகப்பட்ட புதையல் வேட்டை படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி உள்ளன. தமிழிலும் மரகத நாணயம் எனும் லோ பட்ஜெட் புதையல் வேட்டை படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த வரிசையில் வெளியாகி உள்ள இன்னொரு புதையல் வேட்டை படம் தான் மாயோன். அந்த மாயோன் மலையையும், பழங்கால கிருஷ்ணர் கோயிலையும் ட்ரோன் ஷாட்களில் காட்டும் போதே மெய்சிலிர்க்கும் விதமாக இருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் தனது ஒட்டுமொத்த மேஜிக்கையும் காட்டி இருக்கிறார்.

    ஹீரோ சிபிராஜ்

    ஹீரோ சிபிராஜ்

    வெற்றியோ, தோல்வியோ எதையும் கண்டுக் கொள்ளாமல் அடுத்த அடுத்த படங்களில் தனது முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார் சிபிராஜ். சிபிராஜை வில்லன் ரேஞ்சுக்கு காட்டும் போதே, அதில் ஏதோவொரு ட்விஸ்ட் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்த்ததை போலவே அப்படியொரு ட்விஸ்ட்டையும் இயக்குநர் வைத்திருக்கிறார். திறமையான தொல்லியல் துறை அதிகாரியாக நடித்துள்ள சிபிராஜ் தனக்கு கொடுத்த வேலையை பக்காவாக செய்துள்ளார்.

    ஹீரோயின் வேண்டுமே

    ஹீரோயின் வேண்டுமே

    நெஞ்சுக்கு நீதி படத்தைத் தொடர்ந்து நடிகை தான்யா ரவிச்சந்திரன் இந்த படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சிபிக்கு ஜோடி வேண்டுமே என்பதற்காக மட்டுமே அவரது கதாபாத்திரத்தை இயக்குநர் கிஷோர் எழுதியிருக்கிறாரே தவிர மத்தபடி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஹீரோயினின் கதாபாத்திரம் அமையாதது கோலிவுட் சினிமாவுக்கே கிடைத்த சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும்.

    பலம்

    பலம்

    புதையல் வேட்டை படத்திற்கான அத்தனை அம்சமும் படத்தில் நன்றாகவே உள்ளது. இயக்குநர் கிஷோர் முடிந்த வரை விறுவிறுப்பாக திரைக்கதையை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் அழகாக கொண்டு சென்றிருக்கிறார். மாமனிதன் படத்திற்கு பெரியளவில் கை கொடுக்காத இளையராஜாவின் இசை மாயோன் படத்தில் டிவைனாக உள்ளது. அதிலும் அந்த "மாயோனே மணிவண்ணா" பாடல் தரத்தின் உச்சம்.

    பலவீனம்

    இந்த படத்திற்கு மிகப்பெரிய பலவினமே அதன் பட்ஜெட் தான். சிஜி காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் இந்த படத்திற்கு நல்ல பட்ஜெட்டில் படம் எடுத்திருந்தால், நிச்சயம் ஏகப்பட்ட ரசிகர்களை தியேட்டர்களை தேடி வரவழைத்து இருக்கும். அதே போல நடிகர்களின் தேர்வும் இந்த பட்ஜெட்டுக்கு போதுமான ஆட்களை போட்டு இருக்கிறார்களே தவிர மேக்கிங் ஒன்றும் பிரமாதமாக இல்லை என்பது பெரிய பலவீனமாகவே மாறிவிட்டது. குழந்தைகளை நிச்சயம் இந்த மாயோன் படம் ஈர்க்கும். ஆனால், பெரியவர்கள் தியேட்டருக்கு கூட்டிச் சென்றால் தானே என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. மொத்தத்தில் மாயோன் ஒரு நல்ல முயற்சி!

    English summary
    Maayon Movie Review in Tamil (மாயோன் விமர்சனம்): Actor Sibiraj's Maayon movie deal with a treasure hunt story inside Maayon Krishna Temple with some twists and turns.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X