மாமியாரிடம் மாட்டிகொண்ட மருமகன்.. பக்கா 90ஸ் கிட்ஸ் பையன்... சிரிக்க வைக்கிறதா மச்சாண்ட மாலாஹ!
கேரளா: மலையாளத் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து பின்பு குணசித்திர நடிகராக, வித்தியாசமான கதைகளில் நாயகனாக சௌபின் ஷாஹிர் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மச்சாண்ட மாலாஹ திரைப்படம் கலகலப்பான காமெடி படமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை இதில் காணலாம்.
வித்தியாசம்: மற்ற மொழி சினிமாவை காட்டிலும் மலையாள சினிமா சற்று வித்தியாசம் நிறைந்தது. கதைக்காக ஹீரோ இருந்தால் போதும் ஒன்லைன் ஸ்டோரியை வைத்து திரைக்கதையில் விளையாடி சூப்பர் ஹிட்கொடுத்துவிடுவார்கள். பெரிய பட்ஜெட்டும் இல்லை, பெரிய ஹீரோக்கள் நடித்தால் தான் படம் ஓடும் என்பது இல்லை, எப்படி மலையாளத்தில் மட்டும் இப்படிப்பட்ட படங்களை எடுக்க முடிகிறது என பலரும் வியந்து பார்ப்பதுண்டு. மலையாளத்தில் இருந்து பல படங்கள், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.

மச்சாண்ட மலாஹ: டிரைவிங் லைசென்ஸ் படத்தில் செளபின் ஷாகிர் பிரமாதப்படுத்தியிருப்பார். அதை தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் கவனத்தை பெற்று வருகிறது. தற்போது மச்சாண்ட மலாஹ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
அவருக்கு ஜோடியாக நமீதா ப்ரமோத் நடித்துள்ளார். தியான் சீனிவாசன், சாந்தி கிருஷ்ணா, மனோஜ் கே.யு., வினீத் தட்டில் டேவிட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மச்சாண்ட மாலாஹ என்றால் மச்சானின் தேவதை என அர்த்தம்.
காதல் தோல்வி: 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத இளைஞராக இருக்கும் சௌபின் ஷாஹிர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருக்கிறார். கேரள அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்தொன்றில் நடத்துனராக இருந்தபோதும், இளம்பெண்கள் அவரைக் கணவராக ஏற்கத் தயாராக இல்லை. அப்போது அரசு நடத்துனராக இருக்கும் பெண் ஒருவர் சௌபின் ஷாஹிரை காதலிக்கிறார். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் வேறொருவருடன் திருமணம் செய்து வைக்கின்றனர். இதை கண்டு மனம் நொந்து போகும் சௌபின் ஷாஹிர் திருமணமே வேண்டாம் என்ற வெறுப்பில் உள்ளார். பின்னர், வேறு இடத்திற்கு மாறுதல் பெற்று செல்கிறார்.

மீண்டும் காதல்: வாழ்க்கை மீது வெறுப்படைந்த நாயகன் செளபின் ஷாஹிர் நடத்துனர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தில் பேருந்தில் ஏறும் ஒரு பெண் ( நமீதா பிரமோத்) அவரது இயல்பைக் குலைக்கிறார். சண்டையிடுகிறார். அவரைப் பற்றி மேலதிகாரியிடம் புகார் செய்கிறார். நமீதா பிரமோத் செய்யும் ஒவ்வொன்றும் செளபிந் ஷாஹிருக்கு எரிச்சலை தருகிறது ஆனால், அவரை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலை தற்செயலாக அமைகிறது.
பின்னர் நமீதா பிரமோத் செய்வதை ஒன்றை நினைத்து சிரிக்கிறார். அப்பெண் மீது காதல் வருகிறது. அவரைப் பெண் கேட்கலாம் என்று முடிவெடுக்கிறார்.
வீட்டோட மாப்பிள்ளை: ஆனால், செளபின் ஷாஹருக்கு மச்சானாக நடித்திருக்கும் சீனிவாசன் வேண்டாம் அவசரப்படாதே என்று சொன்னாலும், நாயகன் கேட்பதாக இல்லை. பின்னர், நண்பருடன் செளபின் ஷாஹர், நமீதா பிரமோத்தை பெண் கேட்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் வீட்டில், அவரது தாயார் என்னோட மகளைக் கட்டிக்கணும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு என்கிறார். வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கணும் என்று கூறியதும். அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார் அந்த செளபின்.

கலகலப்பு: பெண் பார்த்து திருமணம் செய்துகொண்டாலும் வீட்டோட மாப்பிள்ளையாக நாயகன் செல்வதில் அவரது சகோதரிக்கும், மச்சானுக்கும் விருப்பம் இல்லை. அப்போது நாயகனை பார்த்து நீ ஒரு அப்பாவி உனக்கு ஒன்றும் தெரியாது என்கின்றனர். எனவே, அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணை ஏற்றுக்கொண்டாரா என்பதை தான் மச்சான்ட மாலாஹ படம் வலியுறுத்துகிறது. எந்த ஒரு டென்சனும் இல்லை, நுனி சீட்டில் உட்காரும் த்ரில்லர் கதையும் இல்லை, படம் தொடங்கி 10 நிமிடம் போர் அடித்தாலும், அதன்பிறகு ஜெட் வேகத்தில் கதை காமெடியாக நகர்கிறது. திருமணம் ஆகாத இளைஞர்கள் செய்யும் அத்தனை சேட்டைகளும் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications











