Made in Korea Review: பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ விமர்சனம்.. பார்க்கலாமா? வேண்டாமா?

Rating:
3.0/5
Star Cast: பிரியங்கா மோகன், ஜென்சன் திவாகர்
Director: ரா. கார்த்திக்

சென்னை: நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக பல கொரிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் தமிழ் டப்பிங்குடன் சமீப காலமாக ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு மேலும் தீனிப்போடும் விதமாக 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் தான் 'மேட் இன் கொரியா'.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் கொரிய காம்போவில் மார்ச் 12, 2026ம் தேதியான இன்று வெளியாகி உள்ள 'மேட் இன் கொரியா' படம் குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

Made in Korea Review in Tamil  Priyanka Mohan OTT movie is Worth or Not
Photo Credit:

மேட் இன் கொரியா கதை: தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் செண்பகத்தை தேடி கொரியாவில் இருந்து 4 பேர் ஏன் வருகின்றனர்? என்கிற கேள்வியுடன் பிரியங்கா மோகன் யானை மீது நின்றபடி செல்ஃபி எடுக்க படம் ஆரம்பிக்கிறது. சிறு வயதில் கன்னியாகுமரியில் இருந்து கடல் கடந்து கொரியாவுக்குச் சென்ற செண்பகம் என்கிற அரசி வேடத்தில் டிராமாவில் நடித்த நிலையில், கொரியா மீது ஆர்வம் வருகிறது நம்ம ஹீரோயின் செண்பாவுக்கு (பிரியங்கா மோகன்).

அருவி படத்தில் அதிதி பாலன் அப்பாவாக நடித்திருந்த நடிகர் தான் இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கும் அப்பாவாக நடித்துள்ளார். இட்லி கடை படத்தில் வருவது போன்ற சின்ன ஹோட்டலை தனக்குப் பிறகு தனது மகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் உள்ளார்.

ஆனால், மகளுக்கோ எப்படியாவது கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்கிற லட்சியத்துடன் வளர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொரியாவுக்கு எப்படி செல்கிறார். அவரை தேடி இந்தியாவுக்கு ஏன் 4 பேர் வருகின்றனர் என்பது தான் இந்த படத்தின் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: பிரியங்கா மோகன் தமிழில் பெரிய கேப் விட்ட நிலையில், ஓடிடி மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். ரா. கார்த்திக் நித்தம் ஒரு வானம் படத்தை போல இதையும் ஃபீல் குட் படமாக இயக்கியுள்ளார். பிரியங்கா மோகனின் காதல் செட்டாகாத நிலையில், அந்த நபரால் கொரியாவுக்கு விபத்து போல செல்ல நேரிட அங்கே அவர் எப்படி சில நண்பர்களை வயது வித்தியாசம் பாராமல் பிடிக்கிறார்.

அவருடைய பல ஆண்டுகால கனவு நகரமான சியோல் அவருக்கு எப்படிப்பட்ட எக்ஸ்பீரியன்ஸை தருகிறது. கொரிய உணவும் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவும் கலக்கும் இடம் என ஏகப்பட்ட ஃபீல் குட் காட்சிகளுடன் எந்தவொரு பரபரப்பும் இன்றி பொறுமையாக நகர்ந்து படம் பாசிட்டிவாகவே ஒரு மெசேஜ் உடன் முடிகிறது.

ஓவர் பில்டப் மற்றும் ரொம்ப பெரிய டிராமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த மேட் இன் கொரியா மேட் செய்யப்பட்டது கிடையாது. ஓடிடியில் கொரிய படங்களை எப்படி அழகாக பார்த்து ரசிக்கிறார்களோ அவர்களுக்கான ஃபீல் குட் படமாகவே இந்த மேட் இன் கொரியா உள்ளது. பிரியங்கா மோகன் உடன் இணைந்து ஜென்சன் திவாகர், கொரிய நடிகர்களான பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ஸி ஹுன் பேக், ஹ ராம் ஜோ, ஜே ஹேயோன், சோரி கிம், ராக் கிம் உள்ளிட்ட கொரிய நடிகர்களும் செம க்யூட்டாகவே நடித்துள்ளனர். தாராளமாக ஓடிடியில் வெளியாகி உள்ள மேட் இன் கொரியாவை ஒரு முறை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X