twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணா நீ துங்கடா.. கதை எங்க பாஸ்.. ஏமாற்றிய கார்த்திக் நரேன்.. மாஃபியாவிற்கு கடைசியில் என்ன ஆனது?

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இன்று காலை வெளியான மாஃபியா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    |

    Recommended Video

    MAFIA MOVIE FDFS | AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

    சென்னை: இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இன்று காலை வெளியான மாஃபியா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் கார்த்திக் நரேன் பெரிய போராட்டத்திற்கு இடையில் தன்னுடைய இரண்டாவது படைத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளார். இவரின் முதல் படமான துருவங்கள் பதினாறு பெரிய அளவில் கவனம் ஈர்த்து வரவேற்பை பெற்றது.

    கார்த்திக் நரேன், ரகுமான், யாஷிகா ஆனந்த், அஞ்சனா நடித்திருந்த இந்தப்படம் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்நது கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் படம் இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கிறது.

    இடையில் வேறு படம்

    இடையில் வேறு படம்

    இந்த நிலையில்தான் இடையில் கார்த்திக் நரேன், அருண் விஜயை வைத்து மாஃபியா படத்தை இயக்கினார். அருண் விஜய் ஹீரோ, பிரியா பவானி சங்கர் ஹீரோயின், பிரசன்னா வில்லன் என்று கலவையான குழுவோடு படம் தயார் ஆனது. படமும் கேட் அண்ட் மவுஸ் கதையோடு வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

    என்ன மோசம்

    என்ன மோசம்

    மாஃபியா படத்தில் மிக முக்கியமான விமர்சனத்தை பெற்றது படத்தின் ஸ்லோ மோஷன். படம் முழுக்க பல காட்சிகள் மிக மிக ஸ்லோவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ இன்ட்ராவிற்கு ஸ்லோ மோஷன் காட்சிகள். ஹீரோயின் இன்ட்ராவிற்கு ஸ்லோ மோஷன் காட்சிகள். வில்லன் இன்ட்ராவிற்கு ஸ்லோ மோஷன் காட்சிகள் என்று படத்தில் பாதியை ஸ்லோ மோஷன் காட்சிகளே தின்று விடுகிறது.

    முதல் பாதி எப்படி

    முதல் பாதி எப்படி

    அடுத்தபடியாக படத்தின் முதல் பாதியில் எதையுமே இயக்குனர் சொல்லவில்லை. கதை முதல் பாதியில் சொல்லாமல் பில்டப் மட்டும் கொடுத்துக் கொண்டே செல்கிறார். இதோ கதை வரும், அதோ கதை வரும் என்பது போலதான் பில்டப் கொடுத்துக் கொண்டே செல்கிறார். ஆனால் படத்தின் கதை இரண்டாம் பாதிக்கு மேல்தான் தொடங்குகிறது. அந்த கதையும் அரைத்த மாவுதான்.

    ஸ்டைல் எப்படி

    ஸ்டைல் எப்படி

    மாஃபியா படம் உண்மையில் நல்ல ஸ்டைல்லாக இருக்கிறது. படத்தில் ஹீரோ வில்லன் என்று இருவரும் ஸ்டைலாக இருக்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் பேஷன் ஷோ கிடையாதே. படம். படத்தில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு கொஞ்சம் கூட கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முக்கியமாக படத்தின் ஸ்கிரீன் பிளே பல இடங்களில் கண்ணா நீ தூங்கடா என்ற பீலிங்கை வரவைக்கிறது.

    ஏன் இவங்க

    ஏன் இவங்க

    அதேபோல் போக படத்தில் பிரியா பவானி சங்கர் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை எப்படி போலீஸ் துறைக்கு எடுத்தார்கள். போலீஸ் எல்லாம் ஏன் முகமூடி அணிந்து கொண்டு சுற்றுகிறார்கள். பிரியா பவானி சங்கரை ஏன் கடைசியில் இப்படி டம்மி செய்தார்கள் என்று பல கேள்விகள் எழுகிறது.

    இரண்டாம் பாதி

    இரண்டாம் பாதி

    முதல் பாதியோடு ஒப்பிட்டு பார்த்தால் மாஃபியா படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் ஓகேவாக இருக்கிறது. ஒரு மோசமான மத்தியான தயிர் சாததத்திற்கு பின் ராத்திரி கிடைக்கும் பிரியாணி போல கொஞ்சம் நன்றாக இருந்தது. இரண்டாம்பாதி படம் முடியும் நேரத்தில்தான கொஞ்சம் வேகம் எடுக்கிறது. படம் வேகம் எடுக்கும் போதே முடிந்துவிடுகிறது.

    ஆனால் கொஞ்சம்

    ஆனால் கொஞ்சம்

    படத்தின் கிளைமேக்ஸ் டிவிட்ஸ் சிறப்பாக வந்து இருக்கிறது. அந்த டிவிஸ்டுக்காக படத்தை தேவையில்லாமல் இழுத்து இருக்கிறார்கள். அதேபோல் இரண்டாம் பாகத்திற்கான லீட் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. 45 நிமிட கதையை தேவையில்லாமல் 1.45 நிமிடத்திற்கு மேல் எடுத்து இருக்கிறார் கார்த்திக். இதை ஒரு சிறிய ஒரு மணி நேரம் நெட் பிளிக்ஸ் படமாக எடுத்து இருந்தால் மாஸ் ஹிட் ஆகி இருக்கும்.

    English summary
    Mafia movie is getting mixed review: Karthick Naren has to learn more
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X