Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Mahaan Review: அப்பா–மகனின் சூறையாட்டம்....மகான் படம் எப்படி இருக்கு...ஒரு பார்வை
நடிகர்கள் :
விக்ரம்
துருவ் விக்ரம்
சிம்ரன்
பாபி சிம்ஹா
சனந்த்
வாணி பேஜன்
வேட்டை முத்துக்குமார்
தீபக் பரமெஷ்
ஆடுகளம் நரேன்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
சென்னை : டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பேனரில் லலித் குமார் தயாரித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சியான் விக்ரமின் 60 வது படமாக உருவாகி உள்ள மகான் படம் அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ம் தேதி வெளியானது. கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு வெளிவரும் விக்ரம் படம். முதல் முறையாக அப்பா-மகன் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

மகான் டைட்டில் எதற்கு
ஓப்பனிங்கே வயதான கெட்அப்பில், முதுகில் ரத்த காயத்துடன் மிக சாதாரணமாக வேஷ்டி சட்டையில் காரில் வந்து இறங்கி கத்தும் விக்ரம், தான் வந்த காரை தானே எரிக்கிறார். பிறகு நடப்பது எல்லாமே ஃபிளாஷ் பேக் தான். சிறு வயதில் சாராய வியாபாரியின் மகனுடன் சேர்ந்து சூதாடியதற்காக அப்பாவிடம் அடி வாங்கும் பிள்ளையாக விக்ரம். அவருக்கு எதற்காக காந்தி மகான் என பெயர் வைத்தேன் என அவரது அப்பா விளக்குவதற்கு அப்படி ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்.

ஒரே நாளில் மாறும் வாழ்க்கை
மகானாக வாழ்வேன் என சிறுவயதில் அப்பாவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக காந்திய கொள்கைகளை பின்பற்றி வாழும் பள்ளி ஆசிரியர் காந்தி மகான். அவரது மனைவியாக, அரசு அதிகாரியாக சிம்ரன். பிறந்தநாளன்று கோயிலில் பிச்சைக்காரர் ஒருவர் சொல்வதை கேட்டு, ஒரு நாளாவது தனக்கு பிடித்தது போல் வாழ ஆசைப்பட்டு, கெட்அப்பை மாற்றி, மது, புகை, சூதாட்டம் என அனைத்தையும் சந்திக்கிறார். எதிர்பாராமல் பாரில் தனது பழைய மாணவனை சந்திக்கிறார். அவன் மூலம் அவரது அப்பாவான சாராய வியாபாரி பழக்கம் கிடைக்கிறது.

சாராய வியாபாரியாகும் மகான்
ஒரு நாள் மது குடித்ததற்காக விக்ரமை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்கிறார் மனைவி சிம்ரன். மீண்டும் சாராய வியாபாரி பாபி சிம்ஹாவுடன் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்து சாராய வியாபாரத்தில் தனி சாம்ராஜ்யம் அமைத்து, நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படி வழக்கமான சாராய வியாபாரியின் கதையாகவே ஃபஸ்ட் ஆஃப் செல்கிறது. இருந்தாலும் விக்ரமின் யதார்த்தமான நடிப்பு, நிஜமான ரவுடியை போல காட்டுகிறது. இன்டர்வலில் மாசாக என்ட்ரி கொடுக்கிறார் துருவ் விக்ரம்.

அப்பா-மகனின் சூறையாட்டம்
சூறையாட்டம் பாடலின் இறுதியில் என்ட்ரி கொடுக்கும் துருவ், அப்பா-மகன் இணைந்து ஆடும் சூறையாட்டம் நிஜமாகவே மாஸாக உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் துருவ், விக்ரமுடன் இருப்பவர்களை ஒவ்வொருவராக என்கவுன்டரில் கொல்கிறார். அதற்கு பிறகு நடக்கும் அப்பா - மகன் இடையேயான மோதல், பாச போராட்டம், கடைசியில் அப்பா-மகன் சேர்கிறார்களா என்பது தான் படத்தின் மீதி கதை. இதற்கு இடையில் அரசியல் தலையீடுகள் இவை அனைத்தும் கலந்ததாக உருவாகி உள்ளது மகான்.

மகான் படம் எப்படி இருக்கு
ஃபஸ்ட் ஆஃப் முழுவதும் சாராய வியாபாரத்தை சுற்றி மட்டுமே கதை செல்கிறது. இருந்தாலும் விக்ரமின் நடிப்பிற்காக ஓகே சொல்லலாம். செகண்ட் ஆஃப், வேற லெவல். விறுவிறுப்பான திரைக்கதை, இசை, சென்டிமென்ட், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என மிரட்டி உள்ளனர். ஃபஸ்ட் ஆஃப் நெகடிவ் விமர்சனங்களை அதிகம் பெற்றாலும், செகாண்ட் ஆஃப்பில் அதை அப்படியே பாராட்டாக மாற்றி விட்டனர். அதிலும் அப்பாவும் மகனும் மோதிக் கொள்ளும் காட்சிகள், துருவா? விக்ரமா ? இதில் யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வத்தை அனைவரின் மனதிலும் ஏற்படுத்துகிறது. துருவ் விக்ரம், நடிப்பில் அப்பாவையே மிஞ்சி விட்டார். சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மற்றொரு பெரிய ப்ளஸ்.
மக்கள் ரேட்டிங் என்ன
கடைசி வரை க்ளைமாக்ஸ் என்ன என்பதை யூகிக்க முடியாமல் திரைக்கதையை கொண்டு செல்வதும், இது தான் க்ளைமாக்சா என நினைத்துக் கொண்டிருக்கையில் வரும் ட்விஸ்ட் ஆகியவற்றில் கார்த்திக் சுப்பராஜ், பல தோல்விகளால் கற்ற பாடத்தையும், அவரின் திறமையையும் காட்டி உள்ளது. சிம்ரன் துவக்கத்தில் சில காட்சிகளிலும், கடைசியில் சில காட்சிகளிலும் மட்டுமே வந்து போகிறார். இருந்தாலும் செகண்ட் ஆஃபில் வித்தியாசமான கெட்அப்பில் வரும் சிம்ரனை பார்க்கும், சிம்ரனா இவர் என கேட்க வைக்கிறது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த வாணி போஜன் வரும் சீன்கள் படத்தில் மிஸ் ஆனது கொஞ்சம் ஏமாற்றம் தான். மொத்தத்தில் விக்ரம் ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கு நல்ல ட்ரீட் கொடுத்துள்ளனர். மக்கள் இந்த படத்திற்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.