For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Maharani 2 Review...மகாராணி 2 வெப்சீரிஸ் எப்படி இருக்கு?...ஜெயித்ததா? சொதப்பியதா?

  |

  சென்னை : மகாராணி என்ற பெயரில் 2021 ம் ஆண்டு வெளியான வெப்சீரிசின் இரண்டாவது சீசனாக வெளிவந்துள்ளது மகாராணி 2. 10 எபிசோட்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸ், ஆகஸ்ட் 25 ம் தேதி வெளியிடப்பட்டது.

  Recommended Video

  Lakshmi Manju | ரஜினின்னு சொன்னாலே தன்னால ஸ்டைல் வந்துடும் | *INTERVIEW

  ரவிந்திர கெளதம் இயக்கி உள்ள இந்த வெப்சீரிஸில் லீட் ரோலில் ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த சீரிஸ் சோனி லைவ் சேனலில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்தியில் உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் தமிழிலும் டப் செய்து வளியிடப்பட்டுள்ளது.

  1990 களில் பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், அரசியல் காரணங்களுக்காக தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். இந்த கதையை அடிப்படையாக வைத்து தான் இந்த வெப்சீரிஸ் கதையை டைரக்டர் உருவாக்கி உள்ளார்.

  Diary Movie Review: அருள்நிதியின் ஹாரர் த்ரில்லர் டைரி.. மிரட்டுதா? உருட்டுதா? விமர்சனம் இதோ! Diary Movie Review: அருள்நிதியின் ஹாரர் த்ரில்லர் டைரி.. மிரட்டுதா? உருட்டுதா? விமர்சனம் இதோ!

  இது தான் மகாராணி 2 கதை

  இது தான் மகாராணி 2 கதை

  பீகார் முதல்வராக இருக்கும் பீமா பாரதி, எதிரிகளால் சுடப்படுகிறார். அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரால் ஆட்சி செய்யவும், ஆக்டிவ் அரசியலில் ஈடுபட முடியாமலும் போகிறது.இதனால் பினாமி அரசை நடத்த முடிவு செய்கிறார். வெளி உலகமே தெரியாத, குடும்பம் மட்டுமே தெரிந்த தனது மனைவியான ராணி பாரதியை முதல்வராக்குகிறார் பீமா பாரதி.

  என்ன செய்ய போகிறார் மகாராணி

  என்ன செய்ய போகிறார் மகாராணி

  குடும்ப தலைவியான ராணி, முதல்வராகி ஆட்சியை நடத்த கடுமையான போராட்டங்களை சந்திக்கிறார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் வலுக்கிறது. பிறகு தனது அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை அகற்ற சில நடவடிக்கைகளை எடுக்கிறார். கடைசியில் நடந்த ஊழல்களுக்கு எல்லாம் மூல காரணமே தனது கணவர் தான் என அவருக்கு தெரிய வருகிறது.கணவருக்கு எதிராக போராடி ஊழல்வாதிகளுக்கு எவ்வாறு தண்டனை வாங்கி கொடுக்கிறார். எப்படி தனது ஆட்சியை காப்பாற்றுகிறார் என்பது தான் வெப் சீரிசின் கதை.

  அரசியல் கதைக்களம்

  அரசியல் கதைக்களம்

  10 எபிசோட்கள் கொண்ட இந்த வெப்சீரிஸ் சுமார் ஏழறை மணி நேரம் கொண்டதாக உள்ளது. ஆனால் எந்த இடத்திலும் போர் அடிக்காமல், பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் கொண்டு சென்றுள்ளனர். நல்ல அரசியல் கதை, கதைக்களம் கொண்டதாக அமைத்து, அனைவரின் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

  கதையின் ப்ளஸ்

  கதையின் ப்ளஸ்

  இந்த வெப் சீரிசின் ப்ளஸ் என்று பார்த்தால், திரைக்கதை. அடுத்ததாக வசனங்கள். அரசியல் வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. தமிழில் டப் செய்யப்பட்டிருந்தாலும் மிக நேர்த்தியாக வசனங்களை வைத்துள்ளனர். அரசியல் விறுவிறுப்புடன் திரைக்கதையை நன்றாக உருவாக்கி உள்ளனர். இந்த கதையில் ஏராளமான கேரக்டர்கள் வந்து போவதால் ஒவ்வொரு வரையும் நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் சிரமமாக உள்ளது. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

  இது தான் மைனஸ்

  இது தான் மைனஸ்

  மைனஸ் என்று பார்த்தால், லீட் ரோலாக ராணி கேரக்டரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். அவரது திறமைகளை, ஆற்றலை பற்றி இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். அடல்ட் ஒன்லி காட்சிகள் இல்லை என்றாலும் சில இடங்களில் கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார்கள். இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

   ரசிகர்கள் கொடுத்த ரேட்டிங்

  ரசிகர்கள் கொடுத்த ரேட்டிங்

  ஹுமா குரேஷியின் நடிப்பு சினிமாத்தனம் கலந்ததாக இருந்தாலும் ரசிக்கும் படி உள்ளது. முதல் சீசனை விட இந்த சீசன் கொஞ்சம் த்ரில்லிங்காக, நன்கு ரசிக்கும் படி எடுத்துள்ளனர். அவரது சினிமா வாழ்க்கையிலேயே மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.ஒரு அழுத்தமான அரசியல் கதையை மிக நன்றாக சொல்லி உள்ளனர். ரசிகர்கள் இந்த வெப்சீரிசிற்கு 5 க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

  English summary
  Maharani 2, out now on SonyLiv, is a moderately engaging political drama that exceeds the standards set by the first season but doesn’t quite reach its potential. The series revolves around ‘gawaaran’ Rani Bharti as she tries to master the intricacies of the political system while dealing with challenges in her personal life.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X