Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
சென்னை: இந்த ஆண்டு விஜய், அஜித்துக்கு ஏற்பட்ட நிலைமை டோலிவுட்டின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கும் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கீதா கோவிந்தம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியான சர்காரு வாரி பாட்டா படம் டிசாஸ்டர் என #DisasterSVP ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மகேஷ் பாபு படத்தை பங்கமாக கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படியொரு மோசமான கதையில் மகேஷ் பாபு ஏன் நடித்தார் என பலரும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அதனால்தான் திருமணம் செய்து கொண்டேன்… பட்டென்று பதில் சொன்ன மகேஷ் பாபு
கீதா கோவிந்தம் இயக்குநர்
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தை ஜாலியாக இயக்கிய இயக்குநர் பரசுராமுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் மகேஷ் பாபு. செம ஜாலியாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தியேட்டரில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
மகேஷ் பாபு படம்
பாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன் என்றும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாது என மகேஷ் பாபு பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சர்காரு வாரி பாட்டா படத்திற்கு #DisasterSVP ஹாஷ்டேக்கை தெலுங்கு சினிமா ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.
என்ன கதை
அதிக தொகைகளை பெரும் புள்ளிகளுக்கு வட்டிக்கு விட்டு அமெரிக்காவில் இருந்து சம்பாதிக்கும் மகேஷ் பாபு சரியான நேரத்தில் பணம் திரும்ப வரவில்லை என்றால் நேரடியாக வசூல் வேட்டையில் இறங்கி விடுவார். யாரையும் வச்சு பார்க்க மாட்டார். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் படிப்பு செலவுக்காக வாங்கும் பணத்தை கொடுக்காமல் விடும் நிலையில், அவருடைய அப்பாவான சமுத்திரகனியிடம் மகேஷ் பாபு பிரச்சனை பண்ண வர, மகேஷ் பாபுவுக்கும் சமுத்திரகனிக்கும் நடக்கும் மோதல் தான் கதை என்றும் இதற்கு இடையே கீர்த்தி சுரேஷ் உடன் எப்படி காதல் உருவாகிறது என்பது தான் படத்தின் கதை என நெட்டிசன்கள் ரிவீல் செய்து வருகின்றனர்.
|
முதல் நாளே காத்துவாங்குதா
மகேஷ் பாபுவின் படம் நல்லா இருக்கோ, இல்லையோ முதல் நாளிலாவது ஹவுஸ்ஃபுல்லாக மாறிவிடும். ஆனால், வியாழக்கிழமையான இன்று பெரிய எதிர்பார்ப்பு இல்லாத நிலையில், பல தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்து வாங்கி வருவதாக நெட்டிசன்கள் வீடியோக்களை வெளியிட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
சிறப்பு காட்சி ரத்து
முதல் முறையாக மகேஷ் பாபுவின் படத்தின் சிறப்பு காட்சிக்கு போதுமான டிக்கெட்டுகள் விற்காத நிலையில், ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியே ரத்து செய்யப்பட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். உரிய புரமோஷன் மற்றும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க எதுவுமே பண்ணாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
Recommended Video
கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த ஃபிளாப்
ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்த நிலையில், அந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை. முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், மகேஷ் பாபுவின் படத்தில் கிடைத்த வாய்ப்பு கை கொடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இந்த படம் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்கின்றனர். சிரஞ்சீவியின் போலா சங்கர் (வேதாளம் ரீமேக்) படத்திலும் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!