Guntur Kaaram Review: மாஸா? மொக்கையா?.. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் எப்படி இருக்கு?

ஹைதராபாத்: பவன் கல்யாணின் அட்டாரண்டிகி தாரேதி மற்றும் அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படங்களை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் அதிகாலை காட்சியாகவே வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவில் அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் 1 உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், டோலிவுட்டில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில், காலையில் இருந்தே மகேஷ் பாபு ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் படம் வெளியாகி உள்ளதா? அல்லது என்ன ஆச்சு மாஸ் பில்டப் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

Mahesh Babus Guntur Kaaram Review by Twitter Fans is here

மகேஷ் பாபு டபுள் மாஸ்: கடைசியாக மகேஷ் பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் வில்லனாக சமுத்திரகனியும் நடித்திருந்தனர். இந்நிலையில், மகர சங்கராந்திக்கு வெளியாகி உள்ள குண்டூர் காரம் படத்தையும் குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி டிராமா படமாகவே மகேஷ் பாபு கொடுத்து டபுள் மாஸ் காட்டியிருக்கிறார்.

ட்விட்டர் விமர்சனம்: டோலிவுட்டின் யங் குயின்களான ஸ்ரீலீலா மற்றும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், வழக்கமாக மகேஷ் பாபு படத்தில் இடம்பெறும் பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், படம் மெகா பிளாக்பஸ்டர் என மகேஷ் பாபு ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

Mahesh Babus Guntur Kaaram Review by Twitter Fans is here

கூட்டம் அள்ளுது: கடந்த ஒரு வருடமாக மகேஷ் பாபு படம் ஏதும் வராமல் இருந்த நிலையில், இந்த சங்கராந்திக்கு தியேட்டர்களில் சரவெடி வெடித்து மகேஷ் பாபுவை காண ரசிகர்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். வின்டேஜ் பாபுவை படத்தில் காண முடிகிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mahesh Babus Guntur Kaaram Review by Twitter Fans is here

காரமே இல்லை: மகேஷ் பாபு ஒன் மேன் ஷோ நல்லா இருந்தாலும், ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்த காரம் படத்தில் கொஞ்சம் கூட இல்லை என்றும் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா நடனம் மற்றும் சில காமெடி காட்சிகள் மட்டுமே நல்லா இருக்கிறது. பிலோ ஆவரேஜ் படம் என இந்த நெட்டிசன் கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X