twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Malik review: மலையாள திரையுலகின் நாயகனா மாலிக்.. பகத் ஃபாசிலின் புதுப்படம் எப்படி இருக்கு?

    |

    திருவனந்தபுரம்: இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாலிக் திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகி இருக்கிறது.

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் கதையை போலவே மாலிக் படத்தின் கதையும் அமைந்து இருக்கிறது.

    ஆனால், கேரளாவில் 2009ம் ஆண்டு பீமபள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு ஊர் ஒரு காட்ஃபாதர் இருக்கத்தானே செய்வாங்க!

    விக்ரம் படத்தில் ஆண்டவர் தான் வில்லனா? விஜய்சேதுபதியும் பகத் பாசிலும் என்ன பண்ண போறாங்களோ?விக்ரம் படத்தில் ஆண்டவர் தான் வில்லனா? விஜய்சேதுபதியும் பகத் பாசிலும் என்ன பண்ண போறாங்களோ?

    சிங்கிள் ஷாட்

    சிங்கிள் ஷாட்

    இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாலிக் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள சானு வர்கீஸ் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டி உள்ளார். விஸ்வரூபம், ஜெர்சி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தான் சானு வர்கீஸ். மாலிக் படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் 12 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் 150 பேருக்கும் மேல் அசத்தலாக நடித்து ஆச்சர்யப்பட வைக்கின்றனர்.

    நடிப்பு அரக்கன்

    நடிப்பு அரக்கன்

    கேரள சினிமாவின் நடிப்பு அரக்கனாக நடிகர் பகத் ஃபாசில் தனது முட்ட முட்ட கண்களால் காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார். 18 வயது இளைஞனாக எப்படி உடல் மெலிந்து நடித்தார் என்பது எந்த அளவுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறதோ அதே அளவுக்கு வயதான சுலைமானாக அவர் மெல்ல நடக்கும் அந்த காட்சிகளும் பிரமிப்பை கூட்டுகிறது.

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    இந்த கதை ஒரு புனைவுக் கதை என கொட்ட எழுத்துக்களில் போட்டே படத்தை ஆரம்பித்தாலும், கேரளாவில் 2009ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே படம் உருவாகி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேரள அரசியல், மதப்பிரச்சனை, நல்லது செய்யும் தாதா என மாலிக் படம் ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி இருக்கிறது.

    சிறந்த நடிப்பு

    சிறந்த நடிப்பு

    படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இளைஞர், வயதானவர் என வெரைட்டி காட்டி நடிக்க வேண்டிய கட்டாயத்தை திரைக்கதை அமைத்து விட்டது. அந்த களத்தில் அனைவரும் களமிறங்கி தங்கள் பங்கிற்கு அசத்தி இருப்பது தான் மாலிக் படத்தை வியந்து பார்க்க தூண்டுகிறது. நாயகி நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், வினய் ஃபோர்ட், திலீஷ் போத்தன் என அனைவருமே தரமான நடிப்பை தந்திருக்கின்றனர்.

    இன்னொரு நாயகனா

    இன்னொரு நாயகனா

    ஹாலிவுட்டில் வெளியான காட்ஃபாதர் படத்தின் இன்ஸ்பிரேஷன் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் இருந்ததை போலவே பகத் ஃபாசிலின் மாலிக் படத்தில் நாயகன் படத்தின் இன்ஸ்பிரேஷன் ஏகப்பட்ட இடங்களில் இருப்பது இந்த படத்திற்கு பிளஸ் ஆகவும் சில சமயங்களில் மைனஸ் ஆகவும் அமைந்து விடுகிறது.

    ஒடிடி நாயகன்

    ஒடிடி நாயகன்

    அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ள பகத் ஃபாசிலின் மாலிக் திரைப்படம் நிச்சயம் பொலிட்டிக்கல் கிரைம் த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ஒடிடி படைப்பு என்பதால் எல்லை மீறி எந்தவொரு ஆபாச காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை. தொடர்ந்து ஒடிடி தளத்தில் கலக்கி வரும் பகத் ஃபாசில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு தான் இந்தமுறையும் வின்னர் என்று கம்பீரமாக சொல்லலாம்.

    English summary
    Fahad Faasil’s political thriller movie Malik streaming now on Amazon Prime. Mahesh Narayanan’s Malik will be a OTT winner.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X