Patriot Public Review - மம்மூட்டி, மோகன் லால் இணைந்து நடித்த பேட்ரியாட் எப்படி?.. மக்கள் விமர்சனம்
திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டியும், மோகன் லாலும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பேட்ரியாட். மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஃபகத் பாசில் உள்ளிட்டோரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். மலையாள திரையுலகத்தின் இரண்டு ஜாம்பவான்கள் சேர்ந்து நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்பவர்கள் மம்மூட்டியும், மோகன் லாலும். இவர்கள் இரண்டு பேரும் மலையாள சினிமாவின் வீரியமிக்க விதைகளாக இன்னமும் நிற்கிறார்கள். இத்தனை வருடங்கள் தனித்தனியாக நடித்துக்கொண்டிருந்த அவர்கள்; இப்போது சேர்ந்து பேட்ரியாட் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். மகேஷ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஃபகத் பாசில், நயன்தாரா, ரேவதி என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு: இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்திருந்தது. இன்று படமானது அதே ஹைப்போடு ரிலீஸானது. ரசிகர்கள் ஆர்வமாக படம் பார்க்க சென்றார்கள். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் அந்தப் படம் குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதை இதில் பார்க்கலாம்.
மக்கள் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர், "படம் மூன்று மணி நேரம் இருந்தாலும் போர் அடிக்கவில்லை. படத்தில் எல்லோருக்குமான ஸ்பேஸை இயக்குநர் சரியாக கொடுத்திருக்கிறார். நல்ல கதை போர் அடிக்கவில்லை. முதல் பாதி, இரண்டாவது பாதி இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. க்ளைமேக்ஸ் கொஞ்சம் முன்கூட்டியே கணிக்கும்படி இருந்தாலும்; ட்விஸ்ட் சூப்பராக இருந்தது. தமிழ் ஆடியன்ஸுக்கு தேவையான விஷயங்களும் படத்தில் இருக்கின்றன" என்றார்.
படம் நன்றாக இருந்தது: அவரைத் தொடர்ந்து பேசிய இன்னொரு ரசிகர், "படம் நன்றாகத்தான் இருந்தது. வித்தியாசமான ஜானரில் கதையை கொண்டு வந்திருக்கிறார்கள். கதைக்கு தேவைப்பட்டதால்தான் மோகன் லாலும், மம்மூட்டியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நிறைய தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக தேவை. படத்தின் கன்டென்ட்தான் முக்கியம். மோகன் லால் எல்லாம் இரண்டாம் பாதியில்தான் வருகிறார். அவரை மாதிரி நம் ஊரில் ஹீரோக்கள் எல்லாம் செய்யமாட்டார்கள்.ரஜினி, கமல் பட ப்ரோமோவிலேயே யார் ஹீரோ, யார் வில்லன் என்றுதானே வருகிறது. படத்துக்கான ஸ்க்ரீன்களை அதிகப்படுத்த வேண்டும்" என்று அக்கறையோடு குறிப்பிட்டார்.
பெண் ரசிகை: படம் பார்த்த பெண் ரசிகை கூறுகையில், 'படம் நன்றாக இருந்தது. அனைத்தையும் நன்றாகத்தான் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்தால் தேசப்பற்று வரும். நல்ல படம்தான். எதிர்பார்ப்போடுதான் வந்தோம். படம் சூப்பராக இருக்கிறது. மேக்கிங் எல்லாம் அருமையாக இருந்தது. நாட்டு நடப்புகளுக்கு கனெக்ட்டடாக இருந்தது" என்றார். படம் பார்த்த ரசிகர்களும், ரசிகைகளும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனமே கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக படம் இனி வரும் நாட்களில் இன்னமும் நன்றாக பிக்கப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
