Turbo Review: பிரமயுகம் மிஸ் பண்ண 100 கோடி வசூலை தட்டித் தூக்குமா டர்போ.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த ஆண்டு வார வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறிவிடுகின்றன. இந்த வாரம் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள டர்போ திரைப்படம் வெளியானது.

மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த வைசாக் இயக்கத்தில் இந்த டர்போ திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் ஏற்கனவே மம்மூட்டியை வைத்து 'போக்கிரி ராஜா', 'மதுரை ராஜா' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

இந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான 'பிரமயுகம்' திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், 100 கோடி வசூலை ஈட்டவில்லை. பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் மற்றும் ஆவேசம் உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை கடந்த நிலையில், மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம்.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

மகனை விட ஸ்பீடு: கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் சரியாக ஓடவில்லை. அடுத்ததாக லக்கி பாஸ்கர் என்னும் படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ஆனால் அவரது அப்பா மம்மூட்டி 72 வயதிலும் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் படத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழில் செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரமயுகம் படத்தைக் கொடுத்த மம்முட்டி மே மாதம் அதற்குள் டர்போ படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார்.

வின்னர்: வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டர்போ திரைப்படம் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் டிக்கெட் விற்பனையே 3 கோடி வசூலை தாண்டிய நிலையில், படத்துக்கு கிடைத்திருக்கும் பாசிட்டிவ் டாக் காரணமாக முதல் நாள் வசூல் 7 முதல் 8 கோடி வரை வரும் எனக் கூறுகின்றனர்.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

குறை இருந்தாலும்: டர்போ படத்தில் பல குறைகள் உள்ளன. ஆனால், படத்தை கடைசி நேரத்தில் ட்ரிம் செய்து வெளியிட்டுள்ளனர். படம் பார்க்கும் போது மம்மூட்டியின் அதிரடி ஆக்‌ஷன் நடிப்பு மட்டுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய தியேட்டர் எக்ஸ்பிரீயன்ஸாக இருக்கும் என்றும் மம்மூட்டி ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் இந்த படம் என ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

செகண்ட் ஹாஃப் மிரட்டல்: டர்போ படத்தின் முதல் பாதி குட் மற்றும் இரண்டாம் பாதி மிரட்டல் என ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். படத்தில் ராஜ் பி மெயின் வில்லனாக வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். காமெடி காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்துமே வொர்க்காகி உள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

அடுத்த 100 கோடி பார்சல்: பிரமயுகம் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனையை மிஸ் செய்த நிலையில், டர்போ திரைப்படம் மலையாள திரையுலகத்துக்கு அடுத்த 100 கோடி படமாக அமையும் என்றும் தியேட்டர்களில் மம்மூக்கா ரசிகர்கள் தெறிக்கவிட்டு கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mammootty s Turbo Twitter Review and Reactions is here

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X