twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Man vs Bee Review; தேனீ-யுடன் மல்லுக்கட்டும் மிஸ்டர் பீன்..ஓடிடியில் ஒரு காமெடி கலக்கல்

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: ரோவன் ஹட்கின்சன், ஜிங்க் லூசி, ஜூலியண்ட் ரிண்ட் டட்

    இசை: நிக் ஏஞ்சல்

    இயக்கம்: டேவிட் கெர்

    சென்னை: நடிகர் ஹட்கின்சன் நடித்த மிஸ்டர் பீன் பட வரிசையும் டிவி சீரியலும் உலக பிரசித்தி பெற்றவை.

    எது செய்தாலும் அது சிக்கலில் போய் முடியும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரோவன் ஹட்கின்சன். மிஸ்டர் பீன் மிகவும் புகழ்பெற்ற பாத்திரமாகும்.
    அவருடைய தற்போதைய நடிப்பில் வெப்சீரிஸில் வெளி வந்துள்ள 'மேன் வெர்சஸ் பீ' படம் செம காமெடியாக உள்ளது.

    சார்லி சாப்ளின் வரிசையில் மிஸ்டர் பீன்

    சார்லி சாப்ளின் வரிசையில் மிஸ்டர் பீன்

    நம் வாழ்க்கையில் நாம் பல்பு வாங்கும் சந்தர்ப்பங்களையும் தன்னைத்தானே சட்டையர் செய்துக்கொள்ளும் காட்சிகளையும் வைத்து படம் எடுத்தவர் சார்லி சாப்ளின். இதன் மூலம் அவர் உலகப்புகழ்பெற்றார். அந்த வரிசையில் லாரல்-ஹார்டி உள்ளிட்ட பலர் வந்தாலும் ரோவன் ஹட்கின்சனின் மிஸ்டர் பீன் வரிசை படங்கள் தனி ரகம். இதில் சிறப்பு என்னவென்றால் சாப்ளின், ஹட்கின்சன் இருவரும் பிரிட்டீஷ்காரர்கள். தமிழில் பாக்யராஜ் இதுபோன்ற பாத்திரங்களில் புகழ்பெற்றவர்.

    சுயமாக சட்டையர் செய்யும் பாத்திரங்கள்

    சுயமாக சட்டையர் செய்யும் பாத்திரங்கள்

    தன்னைத்தானே சட்டையர் செய்து எடுக்கப்பட்ட படங்களின் நகைச்சுவை காட்சிகளை உலகம் முழுவதும் மொழி கடந்து மக்கள் ரசித்தனர். இதனால்தான் ஊமைப்படங்களையே பெரும்பாலும் எடுத்த சாப்ளின் ரசிக்கப்பட்டார். மிஸ்டர் பீன் ஹீரோவும் அப்படித்தான் ரசிக்கப்பட்டார். ஒருவர் எது செய்தாலும் அவருடைய முட்டாள் தனமான செய்கையால் சிக்கலில் சிக்கிக் கொள்வார். அதை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ரோவன் ஹட்கின்சன் டி.வி சீரியல் மிகப்பிரபலம்.

    ஹாலிவுட்டில் கலக்கிய ரோவன் ஹட்கின்சன்

    ஹாலிவுட்டில் கலக்கிய ரோவன் ஹட்கின்சன்

    அவர் டி.வி.சீரியல் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பீன் பின்னர் படமாக வந்தது, ஜானி இங்கிலீஷ், பீன்'ஸ் ஹாலிடே போன்ற படமும் மிகப்பிரபலம். மிஸ்டர் பீன் காமெடி கார்ட்டூனாகவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மிஸ்டர் பீன் நடித்துள்ள வெப் சீரீஸ் ஓடிடி தளத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. 'மேன் வெர்சஸ் பீ' (Man Vs Bee) என பெயரிடப்பட்டுள்ள இது 9 எபிசோடுகளாக ஒவ்வொன்றும் 15 நிமிடங்களாக வெளிவந்துள்ளது.

    கதை இதுதான்

    கதை இதுதான்

    கன்னட நடிகர் கிச்சா நடிப்பில் ராஜமவுலி எழுதி இயக்கி நானி நடித்த 'நான் ஈ' போன்ற கதை கொண்டதுதான் 'மேன் வெர்சஸ் பீ' (Man Vs Bee) படமாகும். ஒரு மிகப்பெரிய மில்லியனர் தான் தனது மனைவியுடன் சுற்றுலா கிளம்புகிறார், அவரது விலை உயர்ந்த வீட்டையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பழங்கால பொருட்களையும் அவர்கள் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ள ஒருவரை அழைக்கிறார். வீட்டை பார்த்துக்கொள்ள வருபவர்தான் மிஸ்டர் பீன் ரோவன் அட்கின்சன்.

    ஆரம்பக்காட்சியிலேயே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகிறது

    ஆரம்பக்காட்சியிலேயே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகிறது

    அவர் வரும்போதே, வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைச் சொல்லி அதில் கோடிக்கணக்கான பவுண்ட் மதிப்புள்ள பழைய காலத்து கார், புத்தகம், ஓவியம், சிலை என பலவற்றைப்பற்றி சொல்லும்போதே நமக்கு புரிந்து விடுகிறது மிஸ்டர் பீன் அட்கின்சன் கூத்தடிக்கப்போகிறார் என்று. BEAN என்கிற படத்தில் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பழங்கால ஓவியத்தின்மீது இங்க் கரை பட்டு அதை அழிக்க தின்னரை உபயோகப்படுத்தி அதனால் ஓவியம் பாழாக பின்னர் அவர் அடிக்கும் கூத்துகளை பார்த்ததில் இதிலும் அப்படிப்பட்ட தரமான சம்பவம் இருக்கும் என புரிந்தது.

    நம்பிக்கையை வீணாக்காத படம்

    நம்பிக்கையை வீணாக்காத படம்

    நமது நம்பிக்கையை அவர் வீணடிக்கவில்லை. மிக நவீனமாக எலக்ட்ரானிக் லாக்குடன் கட்டப்பட்ட வீட்டை அட்கின்சனிடம் ஒப்படைத்துவிட்டு கூடவே செல்லப்பிராணியான நாயையும் ஒப்படைத்துவிட்டு இந்த ஆள் ஒழுங்கா வீட்டைப்பார்த்துக்கொள்வானா என்று சந்தேகத்துடன் வீட்டின் உரிமையாளர் மனைவி கணவருடன் கிளம்பிச் செல்வார். பின்னர் தேனீயுடன் அவர் அடிக்கும் கூத்துகளே படம்

    தேனீ தான் பிரதான வில்லன்

    தேனீ தான் பிரதான வில்லன்

    நிம்மதியாக வீட்டைப்பார்த்துக் கொள்ளும் நேரத்தில் மகளுடன் போனில் பேசும் அட்கின்சன் வீட்டுக்குள் நுழையும் தேனியை விரட்ட அது போக்கு காட்ட அவர் கைப்பட்டு மிக விலை உயர்ந்த பழங்கால சிலை தலை உடைந்துபோகும். அதன் பின்னர் தேனியை விரட்ட அவர் எடுக்கும் முயற்சிகளும் தேனி அவருக்கு போக்கு காட்டுவதும், இடையில் நாய் அடிக்கும் கூத்துகளும் இந்த போராட்டத்தில் கோடிக்கணக்கான விலையுள்ள சுவர் ஓவியம், புத்தகம், அலங்கார மணி உள்ளிட்ட மொத்த பொருட்களையும் அட்கின்சன் உடைத்து விடுவார்.

    வீட்டுக்குள் அடிக்கும் கூத்துகள் செம சுவாரஸ்யம்

    வீட்டுக்குள் அடிக்கும் கூத்துகள் செம சுவாரஸ்யம்

    இடையில் இரவில் தவறுதலாக கதவை திறக்க அலாரம் அடித்து காலையில் விசாரிக்க போலீஸ் வர, தனது பேண்டுக்குள் புகுந்த தேனியை விரட்டவும் முடியாமல் போலீசாருக்கு பதில் சொல்லவும் முடியாமல் யோகா செய்வதுபோல் செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கும். இடையில் நாய் உடல் நிலை பாதிக்க அதைக்காப்பாற்ற விலை உயர்ந்த பழமையான காரை எடுத்துச் செல்ல காருக்குள் தேனி புகுந்துவிட அதை அடிக்கும் முயற்சியில் கார் சேதமாக ஒரு மனுஷனுக்கு இத்தனை சோதனைகளா என எண்ணத்தோன்றும்.

    இதுதான் மீதமுள்ள கதை

    இதுதான் மீதமுள்ள கதை

    இடையில் பொருட்களை திருட வரும் திருடர் கூட்டம் லைப்ரரி அறைக்குள் மாட்டிக்கொள்ள ஹட்கின்சனை விசாரிக்க வரும் போலீஸார் அவர்களை பிடித்துச் செல்வார்கள், கடைசியில் தேனியை வீட்டை விட்டு விரட்டினாரா? அவர் சேதமாக்கிய கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள், பல கோடி மதிப்புள்ள பழைய கார் போன்றவற்றை என்ன செய்தார் என்பதே மீதமுள்ள கதை. முழுக்கதையையும் எழுதினால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

    எட்டிப்பார்க்கும் பீன் கேரக்டர்

    எட்டிப்பார்க்கும் பீன் கேரக்டர்

    இடையிடையே மிஸ்டர் பீன் எட்டிப்பார்ப்பார், வீட்டுக்குள் நுழைய முடியாமல் எலக்ட்ரானிக் லாக் ஆக, நாயை வெளியே வரவழைத்து, நாய் கழுத்துப்பட்டையில் உள்ள எலக்ட்ரானிக் டிவைசர் வைத்து நாயைப்போல் வீட்டுக்குள் நாய் செல்லும் வழியில் நுழைவது போன்ற பல காட்சிகளில் மனம் விட்டு சிரிக்கலாம். மிஸ்டர் பீன்ஸை பார்த்தவர்கள் ரசித்து பார்க்கலாம்.

    பிளஸ்

    பிளஸ்

    மிஸ்டர் பீன்ஸ் படம் பார்த்ததால் இவர் என்னென்ன கூத்து அடிக்கப்போகிறாரோ என்கிற சுவாரஸ்யம் வந்துவிடுகிறது. வழக்கமாக ஒரு தவறை செய்து அதை ஈடுகட்ட அதேப்போன்று டூப்ளிகேட்டை உருவாக்கும் சாமர்த்தியம் இந்த படத்திலும் உண்டு. வெப் சீரிஸ் என்பதாலும் 15 நிமிடம் ஒரு எபிசோடு என்பதாலும் வேகமாக நகர்கிறது. ஒரு படத்தை 5 ஆக வெட்டி வைத்ததுபோல் உள்ளது. பிளஸ்

    மிஸ்டர் பீன்ஸ் படம் பார்த்ததால் இவர் என்னென்ன கூத்து அடிக்கப்போகிறாரோ என்கிற சுவாரஸ்யம் வந்துவிடுகிறது. வழக்கமாக ஒரு தவறை செய்து அதை ஈடுகட்ட அதேப்போன்று டூப்ளிகேட்டை உருவாக்கும் சாமர்த்தியம் இந்த படத்திலும் உண்டு. வெப் சீரிஸ் என்பதாலும் 15 நிமிடம் ஒரு எபிசோடு என்பதாலும் வேகமாக நகர்கிறது. ஒரு படத்தை 5 ஆக வெட்டி வைத்ததுபோல் உள்ளது.

    மைனஸ்

    மைனஸ்

    ஏற்கெனவே பார்த்து புளித்துப்போன காமெடியாக உள்ளது. வேறு எதுவும் புதிதாக செய்து சிக்கிக் கொள்வாரா என பார்க்கும்போது காட்சிகள் குறைவாகவே உள்ளது. மிஸ்டர் பீன் படத்தில் வரும் அதிகப்படியான கேரக்டர்கள் இப்படத்தில் குறைவு, நாயும், தேனீயும் மட்டுமே என்பதால் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. அட்கின்சனுக்கு வயதானது தெரிகிறது.

    மொத்தத்தில் வெப் சீரீஸ் என்பதால் நன்றாக பார்த்து ரசிக்கலாம். பெரியவர் முதல் சிறுவர் வரை ரசித்து மகிழ ஒரு படம். மீண்டும் மீண்டும் பார்க்கவும் ஏற்ற படம்.

    English summary
    Man vs Bee Review in Tamil: Mr Bean Stuck with Bee similar to Villan Struggle in Naan EE Movie. “Man vs Bee” Web Series Have Released Now to Entertain Fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X