Mangalavaaram Review: இது பேய் படமா? பிட்டு படமா?.. பயல் ராஜ்புத்தின் செவ்வாய்க்கிழமை விமர்சனம்!

நடிகர்கள்: பயல் ராஜ்புத், நந்திதா, அஜய் கோஷ்

இசை: அஜனீஷ்

இயக்கம்: அஜய் பூபதி

ரேட்டிங்:

Rating:
3.0/5
Star Cast: பயல் ராஜ்புத், நந்திதா, அஜய் கோஷ்
Director: அஜய் பூபதி
.

சென்னை: தமிழில் இந்த வாரம் சொல்லிக் கொள்ளும் படி எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், தெலுங்கில் உருவான மங்களவாரம் எனும் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை எனும் தலைப்பில் வெளியானது.

இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் லீடு ரோலில் பயல் ராஜ்புத் நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அட்டகத்தி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரத்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.

Mangalavaaram movie Review in Tamil: Director Ajay Bhupathi uses Nymphomaniac concept

அரண்மனை பாணி படங்களை போலவே ஃபிளாஷ்பேக்கில் ஒரு பெண் கொல்லப்படுவதும், ஆரம்பத்தில் இருந்து அனைவரையும் அவள் கொடூரமாக கொல்லப்படுவதுமான வழக்கமான டெம்பிளேட் கதை தான் என்றாலும் திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் அஜய் பூபதி கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை கதை: மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மர்மமான முறையில் ஊரில் உள்ள மக்கள் இறக்கின்றனர். அவர்கள் இறந்த இடத்திற்கு அருகே வித்தியாசமான எச்சரிக்கை வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. மாயா எனும் போலீஸ் அதிகாரியாக அந்த ஊருக்கு வரும் நந்திதா இந்த தொடர் மரணம் குறித்து விசாரணையில் இறங்குகிறார். ஷைலு எனும் கதாபாத்திரத்தில் அந்த ஊரில் வாழ்ந்த ஹீரோயின் பயல் ராஜ்புத்துக்கு என்ன ஆனது? அவருக்கும் இந்த மரணங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை.

மேக்கிங்கில் மிரட்டல்: இயக்குநர் அஜய் பூபதி மற்றும் இசையமைப்பாளர் அஜனீஷ் மேக்கிங்கிலும் பின்னணி இசையிலும் சும்மா புகுந்து மிரட்டியுள்ளனர். முதல் பாதி முழுக்கவே திகில் கிளப்பும் காட்சிகள் நிறைந்து பேய் படம் பார்க்கும் உணர்வையே ரசிகர்களுக்கு கடத்துகிறது. இடைவேளைக்கு முன்பாக ஹீரோயினான பயல் ராஜ்புத்தின் என்ட்ரியும் புல்லரிக்க செய்கிறது.

அதீத காமம் கொள்ளும் பெண்: இந்த படத்தின் இரண்டாம் பாதியில் வழக்கமாக ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல கதை நகராமல் புதிய வகையில் வித்தியாசமான ஒரு ட்விஸ்ட்டை இயக்குநர் வைத்துள்ளார். அதற்காகத்தான் படத்தின் ஆரம்ப ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், டிரெய்லர் என அனைத்திலும் அரை நிர்வாண கோலத்தில் ஹீரோயின் பயல் ராஜ்புத்தை காட்டியதற்கு காரணம் என தெரிகிறது. Nymphomaniac எனும் நோயால் பாதிக்கப்பட்டதாக இடைவேளைக்கு பிறகு வரும் கதை வித்தியாசமாக இருந்தாலும், அதனை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் கோட்டை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

பிளஸ்: ஒட்டுமொத்த படத்தையும் தாங்கும் அளவுக்கு பயல் ராஜ்புத் நடிக்க ஆரம்பித்த நிலையில் தான் இந்த படத்தையே அவரை நம்பி இயக்குநர் உருவாக்கி உள்ளார். இசையமைப்பாளர் அஜனிஷின் பிஜிஎம் தியேட்டரில் ரசிகர்களை பீதியடைய செய்கிறது. தசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு அழகாகவும், ஆக்ரோஷமாகவும் படத்தின் கதையை தெளிவாக கடத்துகிறது.

மைனஸ்: இந்த படத்தை கொஞ்சம் ஃபாஸ்ட் பேஸில் இயக்குநர் அஜய் பூபதி கொண்டு சென்றிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு மற்றும் ஆர்வம், வழக்கமான கிளைமேக்ஸை நோக்கி இரண்டாம் பாதி செல்வதால் இல்லாமல் போய் விடுவது மைனஸ் ஆக உள்ளது. அடல்ட் ஜோக்குகள், அந்த மாதிரி காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர். இளைஞர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X