செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படம் எப்படி இருக்கு? பயில்வான் விமர்சனம்!

சென்னை: டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம். இப்படத்தில் குஷி ரவி, மைம் கோபி, கௌசல்யா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்திருக்கும் இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

"மனிதன் தெய்வமாகலாம்" திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் சூழ்நிலையால் எப்படி 'தெய்வம்' போல மாறுகிறான் என்பதை சொல்லும் கதையாக அமைந்துள்ளது.
இந்த படத்தில், செல்வராகவனை, குஷி ரவி காதலித்து திருமணம் செய்கிறார். ஆரம்பத்தில் சாதாரண கூலி தொழிலாளியாக இருக்கும் இவர்ககள், கடுமையாக உழைத்து, ஒரு தாபா ஹோட்டலின் உரிமையாளராக உயர்கிறார்கள். இந்த ஊரில், ஒரு வயதான நபர் எல்லாத்துக்கும் மனு கொடுத்து வருபவர். ஊருக்கு சரியான சாலை வசதி இல்லாததால், அவர் அரசியல்வாதி ஒய்.ஜி. மகேந்திரனை சந்தித்து மனு கொடுக்கிறார்.

Selvaragavan Bayilvan Ranganathan  review
Photo Credit:

படத்தின் கதை: ஒய்.ஜி. மகேந்திரன் தனது மைத்துனரான மைம் கோபியிடம் சாலை போடும்படி கூறுகிறார். ஆனால், மைம் கோபி ஒரு பொறுப்பில்லாதவராக, தவறான வாழ்க்கைய வாழ்ந்து கொண்டு, பெண்கள் பின்னால் சுற்றி திரியும் ஒரு கொடூர வில்லனாக இருக்கிறார். ஒருநாள் மைம் கோபி, செல்வராகவன் ஹோட்டலுக்கு வந்து சரக்கு அடிக்கிறார். "இங்கே குடிக்கக்கூடாது" என்று செல்வராகவன் தடுத்ததால், இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்த மைம் கோபி, தனது அடியாட்களை வைத்து தாபாவை தகர்க்கிறார்.

சிறப்பான நடிப்பு: இதன்பின், செல்வராகவன் அந்த அநியாயத்துக்கு எப்படி பதிலடி கொடுக்கிறார்? அவரது கோபம் எப்படி 'தெய்வத்தின் தண்டனை' போல மாறுகிறது? என்பதுதான் மீதிக் கதை. செல்வராகவன், தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நன்றாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதனில் இருந்து மாற்றம் அடையும் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறார். குஷி ரவி, அழகாகவும், கதைக்கு ஏற்றபடியும் நடித்துள்ளார்.
மைம் கோபி, எதிர்மறை கதாபாத்திரத்தில் தனது பங்கு சிறப்பாக செய்துள்ளார்.
படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேடத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

பயில்வான் ரங்கநாதன்: படத்தின் கருத்து நல்லதாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது. முக்கியமான திருப்பங்கள் முன்பே தெரிந்து விடுவதால், படம் ஈர்ப்பு இழக்கிறது. கிளைமாக்ஸ் கூட அதிக தாக்கம் இல்லாமல் போய்விடுகிறது. மொத்தத்தில், இன்னும் screenplay-ல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X