twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Manmadha Leelai Review: மூன்று ஹீரோயின்களுடன் மஜா பண்ணும் அசோக் செல்வன்.. மன்மத லீலை விமர்சனம்!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: அசோக் செல்வன், ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே

    இசை: பிரேம்ஜி

    இயக்கம்: வெங்கட் பிரபு

    ரேட்டிங்: 3.5/5.

    சென்னை: மாநாடு படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, குயிக்கா ஒரு அடல்ட் காமெடி படத்தை கொடுக்கலாம் என இயக்கிய படம் தான் இந்த மன்மத லீலை.

    நடிச்சா இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்களுடன் தான் நடிப்பேன் என அவர் அடம்பிடிக்கிறாரோ இல்லையோ, இயக்குநர்கள் அசோக் செல்வனுக்காக ஹீரோயின்களை படத்துக்கு படம் கூட்டிக் கொண்டே போகின்றனர்.

    என்ன சொல்றீங்க.. கஸ்தூரி கர்ப்பமாகிட்டாரா? அவரே போட்ட ட்வீட்.. வாழ்த்தும் ரசிகர்கள்.. என்ன விஷயம்?என்ன சொல்றீங்க.. கஸ்தூரி கர்ப்பமாகிட்டாரா? அவரே போட்ட ட்வீட்.. வாழ்த்தும் ரசிகர்கள்.. என்ன விஷயம்?

    இந்த படத்தில் மூன்று ஹீரோயின்களுடன் கொஞ்சம் மாநாடு எஃபெக்ட் கலந்தது போல 2010க்கும் 2020க்கும் இடையே நடக்கும் மன்மத லீலை காட்சிகளை மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. மன்மத லீலை படத்தின் முழு விமர்சனத்தை இங்கே விரிவாக பார்ப்போம்.

    மயக்கம் வந்தது தான் மிச்சம்

    மயக்கம் வந்தது தான் மிச்சம்

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மன்மத லீலை திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகும் என 7 மணி காட்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு கேடிஎம் பிரச்சனை காரணமாக படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. மதியம் 2 மணிக்குத் தான் படம் ரிலீஸ் ஆனது. பல தியேட்டர்களில் மதியக் காட்சியும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மன்மத லீலையை பார்க்கலாம்னு போய் மயக்கம் வந்தது தான் மிச்சம் என அடிக்கிற வெயிலில் ட்வீட் போட்டு கடுப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

    மன்மத லீலை விமர்சனம்

    மன்மத லீலை விமர்சனம்

    மாநாடு படத்தில் டைம் லூப்பை வைத்து விளையாடிய இயக்குநர் வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தில் சத்யா (அசோக் செல்வன்) வாழ்க்கையில் 2010 மற்றும் 2020 காலக் கட்டத்தில் நடந்த ஒரு காம விளையாட்டு என்ன மாதிரியான விபரீதத்தில் கொண்டு போய் விட்டது என்பதை செம ஃபன்னாக சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு.

    அந்த மாதிரியான கதை

    அந்த மாதிரியான கதை

    அமெரிக்கன் பை, ஹாங் ஓவர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் தான் இயக்குநர் வெங்கட் பிரபு தொடர்ந்து ஜாலியான படங்களை இயக்கி வருகிறார். தமிழில் முற்றும் திறந்து முழு நிர்வாணமாக நடிகைகளை நடிக்க வைக்க முடியாது என்பதை புரிந்து வைத்துக் கொண்ட வெங்கட் பிரபு தாராளமாக லிப் லாக் காட்சிகளை வைத்து சரி கட்டி உள்ளார். போஸ்டரை பார்த்து ஏமாந்து போய்டாதீங்க.. உள்ளே ஒரு சின்ன பிட்டு கூட இல்லை என தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

    3 ஹீரோயின்கள்

    3 ஹீரோயின்கள்

    மன்மத லீலை டைட்டில் வைத்து ஒரே ஒரு ஹீரோயின் என்றால் நல்லாவா இருக்கும் என அசோக் செல்வனுக்கு ஜோடியாக குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் 3 ஹீரோயின்களை புக் செய்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. மனைவியாக ஸ்ம்ருதி வெங்கட் செம ஹோம்லியாக இருக்கிறார். (கள்ள) காதலிகளாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் நடித்துள்ளனர். 3 பேருமே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்துக் கொடுத்துள்ளனர்.

    அசோக் செல்வன் அசத்தல்

    அசோக் செல்வன் அசத்தல்

    தெகிடி, ஓ மை கடவுளே, தீனி என ஒவ்வொரு படத்திலும் தனது ஆபார நடிப்பை வெளிப்படுத்தி வரும் அசோக் செல்வன் இந்த படத்திலும் சத்யா கதாபாத்திரத்தில் சிக்சர் அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் ஹீரோயின் அப்பா ஜெயபிரகாஷ் (அதில் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு) வெளியே போகும் போது வீட்டுக்குள் வந்து பீர் குடித்து விட்டே மேட்டர் முடிக்கும் காட்சி மற்றும் அதே போல 2020ல் மனைவி மற்றும் குழந்தை வெளியே போனதும் தோழி ஒருவருடன் நடத்தும் மன்மத லீலை என மனுஷன் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார்.

    செம ட்விஸ்ட்

    முதல் பாதியில் என்னடா ஒரே சீனை இரண்டு காலக் கட்டத்தில் மாற்றி மாற்றி காட்டுகிறாரே வெங்கட் பிரபு, இந்த படம் அவ்வளவு தான் போல என நினைக்கும் ரசிகர்களுக்கு செகண்ட் ஹாஃபில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து தனது நேர்த்தியான ஸ்க்ரீன் பிளே மூலம் மீண்டும் ஸ்கோர் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. சில மைனஸ்கள் இருந்தாலும், இளைஞர்கள் கொண்டாடும் படமாக உருவாகி இருக்கிறது இந்த மன்மத லீலை. பிரேம்ஜி அமரனின் இசை மற்றும் எடிட்டிங் அட்டகாசம். ஆனால், அடுத்து எந்த பழைய பட டைட்டிலில் அசோக் செல்வன் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புவதை தவிர்க்க முடியவில்லை.

    English summary
    Manmadha Leela Movie Review (மன்மத லீலை திரை விமர்சனம்): After Maanadu Director Venkat Prabhu’s Adult comedy quicky stole the show. Ashok Selvan’s extradinory performance will surely entertain the audience completely.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X