twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: நவீன் ,சுருதி ரெட்டி , ராஜ்மோகன்

    இசை : ரூஃபியான்

    இயக்குனர் : எம் எஸ் ராஜ்

    சென்னை: மெரினா புரட்சி 2017ல் சென்னை மெரினாவில் பல லட்ச மக்கள் ஒன்று கூடி ஜல்லிகட்டுகாக செய்த போராட்டமாகும் .இந்த போராட்டம் தமிழக வரலாற்றில் நடைபெற்ற மிக பெரிய போராட்டங்களின் ஒன்றாக கருதபட்டது .இந்த போராட்டம் அரசியலாக்கபட்டு மெரினா புரட்சி முடிவுரும் போது பல போலீசாரால் அடித்தே அனைத்து மக்களும் விரட்டி அடிக்கபட்டனர் .

    பாட்டு , பைட்டு, காமெடி, பன்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கான படம் அல்ல மெரினா புரட்சி.. 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக 8நாட்கள் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் தமிழ் உணர்வு கொஞ்சம் ஜாஸ்தி இருப்பவர்களுக்கும் மெரினா புரட்சி கண்டிப்பாக பிடிக்கும்

    Mareena puratchi Directed by M.s raj got released

    தற்போது இந்த நிஜ நிகழ்வை சில கற்பனை காட்சிகளுடன் பதிவுசெய்து இருக்கும் படம்தான் மெரினா புரட்சி .மெரினா புரட்சி படத்தை 75 சதவீதம் ஆவனப்படம் என்றே சொல்லலாம் மெரினாவில் நடந்த போராட்டங்களை தான் முழுக்க முழுக்க காட்டி இருக்கிறார்கள் .

    மெரினா புரட்சி ஒரு புலனாய்வு ஆவண திரைப்படம். ஜல்லிக்கட்டு தடையைக் கொண்டு வர உதவிய இரண்டு தமிழர்கள் யார் என்பதை சொல்லி இருக்கிறார்கள் . நடிகை ஹேமமாலினி தடைக்கு எவ்வாறு உதவினார்..கடைசி நாள் வன்முறை ஏன் நடந்தது? யாரின் திரைக்கதை போன்ற பல விஷயங்களை புலனாய்வு பாணியில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்

    Mareena puratchi Directed by M.s raj got released

    படம் ஆரம்பமாகி சில காளைகளை பற்றிய காட்சிகள் காமிக்கபடுகின்றன ,அதன் பின் ஒரு தொலைக்காட்சியின் உயர்தட்டு அதிகாரியாக அறிமுகமாகிறார் புட் சட்னி புகழ் ராஜ்மோகன் ,படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தன் பாக்கெட்டில் இருந்து ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து கொடுத்து
    தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மெரினா சென்று ஆவனப்படுத்தி வருமாறு கேட்டு கொள்கிறார் .அதன் பின் அவர்கள் அதை ஆவனப்படுத்தி எடுத்து வருகிறார்கள் அதுதான் மெரினா புரட்சி கதையின் சுருக்கம். ஆனால் இதை தெளிவாக நிறைய காட்சி அமைப்புக்களுடன் திரைக்கதை அமைத்து எம் எஸ் ராஜ் சொன்ன விதம் பாராட்ட தக்கது .

    மெரினாவில் நடந்த போராட்டத்தின் போது பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் .இந்த போராட்டத்தை தங்களின் விளம்பரத்திற்காக சிலரும் பயன்படுத்தி கொண்டனர் .அப்போது நடந்த சில அரசியல் செயல்பாடுகளை இந்த படத்தில் விமர்சித்தும் இருந்தார்கள் .மேலும் பல இடங்களில் மற்ற பட காட்சிகளில் வரும் ரெகுலரான வசனங்கள் வைத்தது சற்று உருத்தலாகவே இருந்தது .

    Mareena puratchi Directed by M.s raj got released

    மொத்தத்தில் மெரினா புரட்சி படம் ஒரு ஆவனப்படமாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கும் ஆனால் அதனுல் இனைக்கபட்ட காட்சிகளும் மெரினா போராட்ட காட்சிகளும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை அதை நீக்கி படத்தை ஆவனப்படுத்தி இருந்தாலே போதுமானது .மற்ற படி படம் பேசிய விஷயம் சொல்ல பட்ட கருத்து விமர்சித்தவை அனைத்தும் நன்று.

    நடிகர் மற்றும் இசையமைப்பாளர் மீது படம் எழுப்பும் குற்றச்சாட்டு யோசிக்க வைக்கிறது.ஜல்லிக்கட்டு போராட்டக் களத்திற்கு மீண்டும் சென்று வந்த உணர்வை தருகிறது மெரினா புரட்சி.

    ஐ ஏ ஸ் சகாயம் அவர்கள் மற்றும் திருமுருகன் காந்தி போன்றவர்கள் இந்த படத்திற்கு பல விதத்தில் சப்போர்ட் செய்து வருகிறார்கள் . இன்னும் எத்தனையோ பிரபலங்கள் இந்த புரட்சிகரமான பதிவுக்கு ஒட்டு மொத்த குழுவையும் பாராட்டி வருகிறார்கள் . பல இயக்குனர்கள், தொண்டு நிறுவனங்கள், பல இயங்கங்கள்,பல நடிகர்கள் என்று இந்த பட்டியல் ஏராளம்

    திரைப்படம் , தொழில் நுட்பம் என்று பார்க்கும் பொழுது இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு செய்து இருந்தால் இந்த படம் வேற லெவல் அங்கீகாரம் கிடைத்திருக்கும் . மெரீனா புரட்சி என்ற ஒன்றை தமிழர்கள் நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கமாட்டார்கள்.

    Mareena puratchi Directed by M.s raj got released

    செல் போன் லைட் , விடிய விடிய உறக்கம் இல்லமால் நின்றது, கத்தி பேசி குரல் கொடுத்தது , நேரடியான செய்திகளை உடனுக்குடன் கொண்ட சென்ற ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் , பசி, போராட்டம் , மாற்றம் , அதிரடியான முடிவுகள், சர்வ தேச அளவில் திரும்பி பார்க்க வைத்த தருணங்கள் என்று நம் மனதில் எத்தனையோ நினைவுகள் ரீவைண்ட் செய்து பார்க்க ஒரு நல்ல முயற்ச்சி தான் இந்த படம்.

    போராட்டங்கள் என்றுமே வறட்சி ஏற்பட கூடாது என்பதற்காக எடுத்த முயற்ச்சி தான் இந்த மெரீனா புரட்சி .

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ள முடியாதவர்கள் என்று யாராக இருந்தாலும் இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் பலரது உணர்ச்சிகளையும் பல தமிழர்களின் உணர்வுபூர்வமான பல செயல்பாடுகளையும் நினைத்து பெருமை படலாம். சினிமா தனமாக , சினிமா லாங்குவெஜ் என்று எதிர்பார்த்தால் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று தெரியாது. இந்த படத்துக்கு என்று ஊடகங்கள் கொடுக்கும் மார்க் மற்றும் ரேட்டிங் பார்த்துவிட்டு இந்த படம் சொல்ல வந்த விஷியத்தை நாம் தவிர்த்து விட கூடாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

    மார்க் போட வேண்டிய படமாக இருந்தாலும் , இந்த தமிழ் சமூகம் மார்க் பண்ண வேண்டிய படம் மெரீனா புரட்சி.

    English summary
    mareena revolution which happened in tamilnadu has been made as an movie finally by director m.s raj. movie titled as mareena puratchi is been released with list of other commercial movies and theaters for this movie is less . many real incidents and real time visuals with lots of vox.pop been attached in this movie scenes . kind of documentary style and every tamilian would like to rewind the real incidents of this unforgettable mareena revolution .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X