Maareesan Review: மாரீசன் விமர்சனம்.. வடிவேலு வொர்த்தா?.. பகத் ஃபாசில் பெஸ்ட்டா?.. படம் எப்படி இருக்கு?

Rating:
3.5/5
Star Cast: வடிவேலு, பகத் ஃபாசில்
Director: சுதீஷ் சங்கர்

சென்னை: மலையாளத்தில் ஏகப்பட்ட டிவி சீரியல்களை இயக்கி வந்த இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வடிவெலு மற்றும் பகத் ஃபாசில் இருவருமே போட்டிப் போட்டு நடித்துள்ளனர்.

இந்த வாரம் தமிழ் சினிமாவில் மாரீசன் மற்றும் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி என இரு படங்கள் மோதுகின்றன. பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு இன்று வெளியாகிறது. இந்த மாதம் ஜூலையில் ஆரம்பத்தில் வெளியான 3 பிஹெச்கே படம் மட்டுமே 10 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

Mareesan Movie Review in Tamil  Vadivelu and Fahadh Faasil steals the show completely
Photo Credit:

இந்நிலையில், கண்டிப்பாக மாரீசன் மற்றும் தலைவன் தலைவி உள்ளிட்ட இரு படங்களும் மாதக் கடைசியில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடித்துள்ள மாரீசன் படத்தின் பத்திரிகையாளர் காட்சி போடப்பட்ட நிலையில், அந்த படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

மாரீசன் கதை: பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வரும் தயாளன் (பகத் ஃபாசில்) மீண்டும் தனது திருட்டுத் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். வேலாயுதம் (வடிவேலு) வீட்டில் தனது கைவரிசையை காட்ட வரும் போது, கையில் விலங்குடன் அவர் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறான். எனக்கு அல்ஸைமர் நோய் இருக்குப்பா, என் மகன் இப்படி என்னை கட்டிப்போட்டு வச்சிட்டு போயிடுறான். என் பேங்க் அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கு, நீ என்னை வெளியே கூட்டிட்டுப் போனால், உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன் என்றதும், வடிவேலுவிடம் இருக்கும் மொத்த பணத்தையும் ஆட்டையைப் போட பகத் ஃபாசில் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு செல்கிறான். உண்மையிலேயே வடிவேலு யாரு? பகத் ஃபாசில் யாரு? என்கிற ட்விஸ்ட்களுடன் 2ம் பாதியின் கதை ஆரம்பிக்க படம் சூடு பிடிக்கிறது. சரியான ட்விஸ்ட்டுகளை வைத்து சில கருத்துக்களையும் சொல்லி படத்தை கச்சிதமாக நிறைவு செய்துள்ளனர்.

Mareesan Movie Review in Tamil  Vadivelu and Fahadh Faasil steals the show completely
Photo Credit:

வடிவேலு நடிப்பு எப்படி?: மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் காமெடியனாக சுந்தர். சியின் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் நடித்தாலும், ரசிகர்கள் ரசிக்கவில்லை. ஆனால், அவரை இப்படி யதார்த்தமான நடிப்புக்குத் தீனிப்போடும் கதைகளில் பார்க்கவே விரும்புகின்றனர். பகத் ஃபாசில் உடன் சேர்ந்துக் கொண்டு வடிவேலு படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை தனது நடிப்பால் சிக்ஸர் அடித்திருக்கிறார். ஏடிஎம்முக்கு சென்ற பின்னர், ஞாபக மறதியால் ஏடிஎம் பின்னை தவறாக போடும் இடங்கள், பகத் ஃபாசிலை தனது மகனாகவே பார்க்க, அவருக்குள் ஏற்படும் மாற்றம் என அனைத்துமே சிறப்பு.

பகத் ஃபாசில் பக்கா: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் பகத் ஃபாசிலுக்கு திருடன் கதாபாத்திரம். உள்ளுக்குள் இருக்கும் நல்லவன் அவ்வப்போது எட்டிப் பார்க்க, வந்த வேலையை செய்துவிட்டு கிளம்பு என அவர் நடித்திருக்கும் விதம் அடிபொலி. முதல் பாதியில் டிராவல் படமாக செல்லும் இடங்களிலும், 2ம் பாதியில் கதையே மாறும் இடத்திலும் பகத் ஃபாசில் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார்.

பிளஸ்: யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. ஃபீல் குட் படமாக செல்லும் இடங்களில் வரும் வருடலான இசையும், கதையின் போக்கு மாறும் இடத்தில் வரும் த்ரில்லர் இசையும் அருமை. கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு , ஸ்ரீஜித் சரங்கின் எடிட்டிங் என அனைத்துமே சரியான அளவில் உள்ளது. வடிவேலு மற்றும் பகத் ஃபாசிலை தொடர்ந்து விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரமும் படத்துக்கு நல்லாவே கைகொடுக்கிறது. வடிவேலுவின் மனைவியாக வரும் சித்தாரா, தயாரிப்பாளர் தேனப்பன், கோவை சரளா என குறைந்த எண்ணிக்கையிலேயே கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களுக்கான கதாபாத்திரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் கதையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் விதம் கூடுதல் பிளஸ்.

மைனஸ்: மாரீசன் படத்தில் குறைகள் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. வடிவேலுவின் மேக்கப் ஒரு சில இடங்களில் இன்னமும் பெட்டராக இருந்திருக்கலாம் என்கிற ஃபீல் வருகிறது. 2ம் பாதி தான் படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது. ஆனாலும், அதன் நீளம் சற்றே அதிகமாக இருப்பதையும் இயக்குநர் கவனத்தில் கொண்டு இருக்கலாம். இன்வெஸ்டிகேஷன் கதையாக இந்த படம் மாறும் இடத்தில், அந்த காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்கிற எண்ணமும் எழுகிறது. ஆனால், படமாக பார்த்தால் மாரீசன் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

மாரீசன் விமர்சனம் குறித்து பிலிமிபீட் யூடியூபில் ரஞ்சித் கண்ணன் பேசியுள்ள வீடியோ விமர்சனத்தை காண இந்த வீடியோவை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X