Kara Review: கர விமர்சனம்.. ஒடிசாவில் நடந்த அந்த சம்பவம்.. மாரி செல்வராஜின் ஷார்ட் ரிவியூவ்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கர. தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிரித்வி பாண்டியராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதேபோல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் இன்று அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்த தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கர படம் பார்த்த மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " இப்போது தான் "கர" பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் ...கர கொண்டாடப்படும்" என்று பாராட்டி உள்ளார்.

Mari Selvaraj Praises Kara   Dhanush Starrer Gets Strong First Review

ஏற்கனவே படம் பார்த்த தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம், இந்த படம் மட்டும் மக்களால் கொண்டாடப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வெற்றியை எட்டி விட்டால், தமிழ் சினிமா உலகிற்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும். சரியான கதையை நம்பி படம் எடுத்தால் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக தேவையற்ற வித்தைகளை செய்ய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜும் பாராட்டுவதால் மொத்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்குமே பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்ட பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்று பலரும் நம்பிக்கையில் உள்ளனர்.

Read more about: kara mari selvaraj dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X