Mark Antony Review: விஷால் வெறித்தனம்.. எஸ்.ஜே. சூர்யா டபுள் வெறித்தனம்.. மார்க் ஆண்டனி விமர்சனம்!
நடிகர்கள்: விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
ரன் டைம்: 2 மணி நேரம் 31 நிமிடங்கள்
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் பக்கா என்டர்டெயின் திரைப்படமாக அமைந்துள்ளது.
நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து சறுக்கல்கள் ஏற்பட்டு வந்தாலும், லத்தி படத்தில் எல்லாம் ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருந்தார். அதை விட டபுள் மடங்கு உழைப்பை போட்டதன் விளைவு மற்றும் இந்த முறை விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் சொதப்பாமல் திரைக்கதை அமைத்ததன் விளைவு படம் பாஸ் மார்க் வாங்கி உள்ளது.

ஒரு பக்கம் விஷால் வெறித்தனமாக நடித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் எப்போதும் போல டபுள் டக்கர் நடிப்பை கொடுத்து நடிப்பு அரக்கன் தான் என்பதை இந்த படத்திலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. வாங்க மார்க் ஆண்டனி படத்தின் முழுமையான விமர்சனத்துக்குள் போகலாம்..
மார்க் ஆண்டனி கதை: தன்னுடைய கேங்ஸ்டர் அப்பா ரொம்பவே கொடுமைக்காரன், அம்மாவை கொன்றதே அவர் தான் என நினைத்துக் கொண்டிருக்கும் மகன் விஷாலுக்கு சயின்ட்டிஸ்ட் செல்வராகவன் உருவாக்கிய ஒரு டைம் மெஷின் டெலிபோன் கிடைக்க, தனது தந்தையை பழி வாங்க டைம் டிராவல் செய்கிறார். ஆனால், அதன் விளைவாக அவரது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது.

விஷாலுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் என்ன உறவு, யாருக்கு யார் அப்பா, படத்தின் ரியல் வின்னர் யார் என ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் ட்விஸ்டுகளுடன் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, கவர்ச்சி என கலந்து கட்டி இந்த படத்தை பக்கா என்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக கொடுத்துள்ளனர்.
பிளஸ்: மார்க் ஆண்டனியின் முதல் பிளஸ் என்றால் எஸ்.ஜே. சூர்யா தான். சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டுவது போல முகத்தில் அத்தனை எக்ஸ்பிரஷன். ஷூட்டிங்கில் வேடிக்கை பார்ப்பது போலவே சிலர் ஸ்க்ரீனிலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை வாயை பிளந்து பார்ப்பது தான் ஹைலைட். அடுத்ததாக விஷால் தனது ஒட்டுமொத்த வித்தையை இறக்கி எப்படியாவது இந்த படத்தை ஹிட் ஆக்க வேண்டும் என ஏகப்பட்ட ரிஸ்க்குகளை எடுத்து நடித்துள்ளார்.

அதிலும், கிளைமேக்ஸில் வரும் அந்த மொட்டை தலை கேங்ஸ்டர் ரோல் எல்லாம் வேறலெவல் வெறித்தனம். ரிது வர்மா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் பழைய பாடல்களை பின்னணி இசையாக பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார். டைம் டிராவல் கேங்ஸ்டர் என வித்தியாசமாக யோசித்து திரைக்கதையை உருவாக்கி கடைசி வரை ரசிகர்களை என்டர்டெயின் செய்த விதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் ஸ்கோர் செய்கிறார். அந்த சில்க் சீன் எதிர்பார்த்ததை போலவே படத்திலும் ஸ்பெஷல் தான்.

மைனஸ்: மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் பாதி ரொம்பவே ஸ்லோ ஸ்டார்ட்டாக உள்ளது தான் படத்திற்கு மைனஸ் ஆக மாறுகிறது. மேலும், லாஜிக் மீறல்கள் இருக்கலாம். ஆனால், நம்ப முடியாத அளவுக்கு இப்படி இருக்கலாமா என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. சில இடங்களில் பழைய இயக்குநர் அடிக்கடி எட்டிப் பார்ப்பதை ஆதிக் ரவிச்சந்திரன் தவிர்த்து இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக இரண்டாம் பாதி படத்தை முடித்தால் ரசிகர்கள் கொடுத்த காசுக்கு வொர்த்தான படமாகவே மார்க் ஆண்டனி மாறிவிடுகிறது.


Click it and Unblock the Notifications











