Mark Antony Twitter Review: விஷாலுக்கு செம்ம கம்பேக்... மார்க் ஆண்டனி ட்வீட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

காமெடி ஜானரில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி உள்ளது என நெட்டிசன்களும் டிவீட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, மார்க் ஆண்டனி விஷாலுக்கு சரியான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மார்க் ஆண்டனி ட்வீட்டர் விமர்சனம்: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம், பல தடைகளைத் தாண்டி இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.
அதனால், இன்று வெளியான மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல தடைகளை கடந்து வெளியான மார்க் ஆண்டனி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஷாலுக்கு கம்பேக் கொடுத்துள்ளதாகவும், எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேங்கஸ்டர் ஜானர் படமாக இருந்தாலும், முழுக்க முழுக்க காமெடியாகவும், டைம் ட்ராவல் பின்னணியிலும் மார்க் ஆண்டனி உருவாகியுள்ளது. அதேபோல், படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய்க்கு நன்றி சொன்னதும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'மார்க் ஆண்டனி' பாஸ் ஆண்டனி எனவும், முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாவது பாதி செம்ம ஜாலியாக இருந்ததாக சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க் ஆண்டனி படத்தில் எஸ்ஜே சூர்யா தான் செம்ம மாஸ் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எஸ்ஜே சூர்யா டான்ஸ், சில்க் ஸ்மிதா சீன், இடைவேளை காட்சி, ஜாக்கி பாண்டியனின் வால்கிங் சீன் ஆகியவை செம்ம மாஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மார்க் ஆண்டனி படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்து வருவதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் மார்க் ஆண்டனி விஷாலின் ப்ளாக் பஸ்டர் என்றும் விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
முக்கியமாக மார்க் ஆண்டனி திரைப்படம் முழுவதும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என சொல்லப்படுகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால், படம் முழுவதும் அவரின் டச் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அஜித்தின் விடாமுயற்சி சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று, மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாதியில் உள்ளதாகவும் ரசிகர்கள் ட்வீட்டரில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மார்க் ஆண்டனி படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும், சில காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு செம்ம மிரட்டலாக இருப்பதாகவும், விஷாலுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை எனவும், அவரது நடிப்பு ஏமாற்றமே என்றும் கூறியுள்ளார். மார்க் ஆண்டனி முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகிவிட்டது என்றும் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளதாகவும், பாக்ஸ் ஆபிஸில் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் ட்வீட்டர் விமர்சனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











