twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜா

    |

    Rating:
    3.0/5


    நடிகர்கள்:
    ஆரவ், காவ்யா தாப்பர், நிகிஷா , ராதிகா , நாசர்

    இசையமைப்பாளர் - சைமன் கே கிங்

    இயக்குனர் : சரண்

    சென்னை : பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்திருக்கும் முதல் படம். மேலும் இயக்குனர் சரண் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கிருக்கும் படம் இந்த மார்க்கெட் ராஜா .மார்க்கெட் ராஜா படத்தை தயாரித்துள்ளார் சுரபி பிலம்ஸின் எஸ்.மோகன் .இந்த படத்தில் ஆரவ் ,நிகிஷா பட்டேல் ,காவ்யா தாப்பர் ,ராதிகா சரத்குமார் ,சாமஸ் ,ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

    பிக்பாஸ்க்கு பிறகு ஆரவ் நடித்து இருக்கும் முதல் படமாகும் .பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ,இவர் நடித்த முதல் படத்தை தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர் ,இந்ந சூழலில் தற்போது இந்த மார்க்கெட் ராஜா படம் வெளியாகியுள்ளது . டீ .வி புகழ் தாண்டி சினிமா துறையில் புகழ் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புடன் மார்க்கெட் ராஜா களம் இறங்கி இருக்கிறார்.

    market raja mbbs directed by charan released with a bang

    இயக்குனர் சரண் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை இயக்கி வந்த வெற்றி இயக்குனர் .இவர் காதல் மன்னன் முதல் வட்டாரம் வரையில் வெற்றி படங்களை கொடுத்தவர் அதன் பின் அவர் இயக்கிய மோதி விளையாடு ,அசல்,ஆயிரத்தில் இருவர் ஆகிய மூன்று படங்களுமே ஆவெரேஜ் படங்கள் தான், இதற்கடுத்து சிறு இடைவேளையை எடுத்து கொண்டு மீண்டும் படம் இயக்க வந்துள்ளார் இயக்குனர் சரண் . கமல் நடித்த வசூல் ராஜா படத்தின் பொழுதே இந்த டைட்டில் பதிவு செய்ய பட்டது. அப்பொழுது பயன் படுத்தாத சூழ்நிலையில் இப்போது பயன்படுத்த பட்டு இருக்கிறது .

    படத்தில் ரோகினியின் மகன் ஒரு பயந்த சுபாபம் கொண்ட ஒரு மருத்துவர் ,அவன் மாரக்கெட் ராஜா எனும் ரௌடிக்கு பதிலாக கொல்லபடுகிறான் ,அந்த இடத்தில் அந்த மருத்துவரின் ஆவி பலம் மிக்க ரௌடியான மார்க்கெட் ராஜா உடம்பில் ஏறிக்கொள்கிறது .இதன் பின் என்ன நடக்கிறது , சாதுவான டாக்டர் ஆவி மார்க்கெட் ராஜா உடம்பில் என்ன செய்கிறது என்பதே படத்தின் மீதி கதை .

    market raja mbbs directed by charan released with a bang

    முதல் பாதி முழுவதுமே படத்தின் டானாக வருகிறார் ஆரவ் ,இரண்டாம் பாதியில் குழந்தை போல் பம்மி விடுகிறார் ,ஏனெனில் டாக்டரின் ஆவி புகுந்து விட ஆரவ் இப்படி மாறி விடுகிறார் .இந்த கதையை முன்னோட்டம் பார்த்தவர்களாலே யூகிக்க முடிந்தது ,இதற்கு மேல் திரைக்கதையில் எந்த வித சுவாரஸ்யமான விஷயமும் இல்லை என்பதே படத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் படத்தில் வரும் இரட்டை வசன காமெடிகள் என எந்த காமெடியும் வேலைக்கு ஆகவில்லை .பொதுவாக சரண் படங்களில் கதை சொதப்பினாலும் காமெடி கைகொடுக்கும் ஆனால் மாரக்கெட் ராஜா படத்தில் எந்த காமெடியும் பெரிதாக கைகொடுக்க வில்லை என்பது கவலை.

    பி ஜி எம் கொடுக்கும் பிரமாண்டம் , பில்ட் அப் இசை கருவிகள் எல்லாம் ஓகே தான் , அனால் காட்சிகளில் அந்த அளவு சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம். தாஸாக வரும் ஆதித்யாவும் வர்தாவாக வரும் சாம்ஸும் படத்துக்கு ஆறுதல் அளிக்கிறார்கள். முடிந்தவரை முயற்சி செய்து ஒரு கட்டத்தில் நம்மை எப்படியோ புன்சிரிப்பாவது வர வைக்கிறார்கள்.

    market raja mbbs directed by charan released with a bang

    ராதிகா சரத்குமார் சுந்தரி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாக வடிவேலு பல படங்களில் அடி வாங்கினாலும் பில்ட் அப் கொடுத்து சமாளித்து காமெடி செய்வார் . அந்த மாதிரியான ஒரு சாயலில் ராதிகா கதாபாத்திரம் உருவாக்க பட்டிருந்தது ,அந்த கதாபாத்திரம் பரவாயில்லை என்று கூறலாம் . சுருட்டு பிடிக்கும் ராதிகா பல காட்சிகளில் சுழட்டி சுழட்டி அடி வாங்குகிறார். கெத்தாக நடிக்கும் சீரியல் ராதிகாவை பார்த்த ரசிகர்களுக்கு இது புதுசு தான் . நல்ல முயற்சி ஆனாலும் இன்னமும் வேண்டும் பயிற்சி. காமெடி அவ்வளவு ஈஸி இல்லை என்பது நன்கு புரிகிறது

    அதை தாண்டி நாஸர் போன்ற நடிகர்கள் பெரிதாக ஒன்றும் மனதில் ஒட்ட வில்லை என்பது தான் உண்மை . எப்போதும் சரண் படங்களில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைப்பார் இந்த முறை சைமன் கே கிங் இசையமைத்துள்ளார் ,புதியவரை தேடி சென்று படத்தை கொடுத்து விட அவரும் முடிந்தவரை புதிய முயற்ச்சிகள் செய்திருக்கிறார் .

    market raja mbbs directed by charan released with a bang

    நடிகர் ஆரவ் விளம்பரங்களில் இருந்து தற்போது கதாநாயகனாக மாறியுள்ளார் ,நடித்த முதல் படத்திலே இரு வேறு கதாபாத்திரத்தில் கடினப்பட்டு நடித்தது பாராட்டக்கூடிய விஷயம் தான் .டான் மற்றும் டாக்டர் என இரு வேறு கதாபாத்திரங்களை சரியாக நடித்திருந்தார். மெனக்கெட்டு பல விசயங்கள் தெளிவாக செய்தது பாராட்டுக்குரியது.

    ஸ்டெப்னியாக வரும் கதாபாத்திரத்திற்கு ஸ்டெப்ஹானி என்று பெயர் வைத்து கிளாமர் காட்ட நிகிஷா பட்டேலை பயன் படுத்தி இருக்கிறார்கள். இடுப்பை ஆட்டி ஐட்டம் டான்ஸ் செய்கிறார் நிகிஷா. கதையோடு பெரிதாக அவரும் ஒட்டவில்லை.

    சாயாஜி ஷிண்டே மினிஸ்டர் கதாபாத்திரங்கள் நடிக்க கூடாது என்று தமிழ் சினிமா ரெட் கார்டு குடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அலுப்பு தட்டுகிறது. தேவதர்ஷினியும் முனீஸ்காந்தும் இந்த படத்தில் வந்தார்கள், நின்றார்கள்,சென்றார்கள் அவ்வளவு தான்.

    காவ்யா தாப்பர் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார். ஹீரோயின் என்பதை தாண்டி படத்தில் வந்த எல்லா கதாபாத்திரங்களுடனும் நடிக்கும் ஒரு வாய்ப்பு இவருக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. லக்கி கேர்ள் இன்னும் நிறைய வித்யாசமான படங்கள் செய்ய வாழ்த்துவோம் .

    market raja mbbs directed by charan released with a bang

    மேலும் படம் தமிழ்நாட்டில் 210திரையரங்கிலும் வெளிநாடுகளில் 90 திரையரங்களிலும் ஆக மொத்தம் 300திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது . கடும் போட்டிக்கு நடுவே இத்தனை தியேட்டர்கள் கிடைத்தது சிறப்பே ஆகும் .

    சரண் சார் நீங்க தான் பேய் படங்களின் அணிவகுப்பை ஆரம்பித்து வைத்தீர்கள் . முனி படம் மூலம் விஸ்வரூபம் எடுத்தது . நீங்களும் தயவு செய்து இனிமேல் பேய் , ஆவி படம் எடுக்காதீங்க சார். தமிழ் சினிமா ஆவிகளின் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்கிட்டு இருக்கு.

    மார்க்கெட் ராஜா ஆவரேஜான கூஜாவை நிரப்புமா ? லெட்ஸ் வெய்ட் வாட்ச்

    English summary
    market raja mbbs is the movie produced by surabi films and aarav who is popular in television show big boss has performed as lead for the 1st time . many senior artist also have done their best in this movie with various characters. tough competitions and big expectations are there for this movie among youngsters. director charan has directed this movie after a long gap and he is waiting for a bang in his carrier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X