For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Master Review: தளபதியின் மாஸ்டர் விஜய்சேதுபதியின் வில்லத்தனம் எப்படி இருக்கு?

  |

  Rating:
  3.0/5
  Star Cast: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆன்டனி வர்கஹெஸ்
  Director: லோகேஷ் கனகராஜ்

  சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோஹனன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் மாஸ்டர்.

  லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். XB Film Creators நிறுவனம் தயாரித்துள்ளது. ஒன்றரை வருடம் பல இன்னல்களை சந்தித்து இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பாக ஓடி வருகிறது.மாசிவ் ஹிட் என்று சொல்ல கூடிய அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி உள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆனந்தமாக உள்ளனர் .

  ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனர் என்ற பெயரை லோகேஷ் தட்டி செல்கிறார் . தனக்கு வித விதமாக திரைக்கதை அமைக்க தெரியும் என்றும் , குறிப்பாக மாஸ் ஹீரோஸ் வைத்து பக்கா என்டெர்டைன்மெண்ட் கொடுத்து தயாரிப்பார்களை வசூல் ரீதியாக வெற்றியடைய செய்யும் மாஜிக் நன்கு தெரிந்து வைத்து உள்ளார் .படத்தின் இணை துணை என்று 16 இயக்குனர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள் கொடுக்கலாம் .

  மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு? ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனம்.. தரமான இன்டெர்வெல்லாம்!மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு? ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனம்.. தரமான இன்டெர்வெல்லாம்!

  மாறுபட்ட தளபதி

  மாறுபட்ட தளபதி

  படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் இந்த படத்தில் தளபதி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக நடித்திருப்பார் என கூறிஇருந்தார். சொன்னது போலவே ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட தளபதியை தந்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடைசியில் ஒரு ரோலிலும் சர்ப்ரைஸாக நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தனது 3வது படத்தையும் வெற்றி படமாக கொடுத்து அசத்தியுள்ளார். விஜய்யின் பாடி லாங்குவேஜ் அடிக்கடி செய்யும் செல்ல குறும்பு , தனது பேண்டை அடிக்கடி கீழயும் மேலேயும் தூக்கி சரி செய்வது என்று வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைக்கிறார் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் சென்டெர்ஸ் ஹிட் என்று பெருமையாக சொல்ல கூடிய படமாக வந்து இருப்பது அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கிடைத்த பொங்கல் பரிசு

  மாறுபட்ட கோணம்

  மாறுபட்ட கோணம்

  காலேஜ் ப்ரொபஃசர் ஆக வரும் தளபதி மாணவர்களுக்கு மிகவும் பிடித்தாலும் அதிகமாக மது அருந்துவதால் மற்ற அதிகாரிகளால் வெறுக்கப்பட சில காரணங்களால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வாத்தியாக செல்கிறார். அங்கு வில்லனை எதிர்கொள்ள நேரிட கதை அங்கிருந்து நகர்கிறது. முதல் பாதியில் பஞ்ச் வசனங்கள் ஏதும் இடம்பெறாவிட்டாலும் தளபதியின் மாஸான இன்ட்ரோ, நடனம், மேனரிசம் மிகவும் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு பெரிய இழப்பினால் மனம் வேதனைப்பட்டு குடி பழக்கத்தை விடுகிறார். சீர்திருத்த பள்ளியில் தளபதி கபடி ஆடும் காட்சிகள் அரங்கை அதிர செய்கிறது. அங்கு இங்கு என்று ரசிக்கும் படி விஜய் அரசியல் பேசினாலும் சிறிது நெருடல் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் விஜய் மிக முக்கியமாக விஜய்யின் காஸ்ட்டுயூம்ஸ் கட்சிதமாக அழகாக இருக்கிறது.

  ரசிக்கும் பாணியில்

  ரசிக்கும் பாணியில்

  அவ்வப்போது மாணவர்களுக்கு , சந்திக்கும் நபர்களுக்கு தனது கதையென பொய்யான குட்டி ஸ்டோரி சொல்லும் தளபதி அஜித்தின் காதல் கோட்டை கதையையும் கூறியுள்ளது ரசிக்கும் விதத்தில் இருந்தது. காதல் கோட்டையில் தொடங்கி பிரேமம், டைட்டானிக் ஸ்டோரி மற்றும் இறுதி காட்சியில் டி. ராஜேந்திரன் பாடலையும் பாடுவது என ரசிக்கும் பாணியில் பலவற்றை செய்துள்ளார் விஜய். எத்தனையோ படங்களை குட்டி ஸ்டோரியாக சொன்னாலும் அஜித்தின் காதல் கோட்டை பற்றி சொல்லும் போது விசில் பறக்கிறது திரையரங்கில் ..

  ஹைலைட்டான இண்டெர்வெல்

  ஹைலைட்டான இண்டெர்வெல்

  எதிர்பார்த்தது போலவே விஜய் சேதுபதி வெறித்தனமான வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஈடுகொடுத்து கொடூரமான வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வில்லன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இண்டெர்வெல் ப்ளாக்கில் "ஐ ஆம் வெய்ட்டிங்" என விஜய்சேதுபதி பேசும் வசனம் ஹைலைட். விஜய் - விஜய்சேதுபதிக்கு இடையேயான சண்டை காட்சிகள் அனல் பறக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த கதைக்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளார் விஜய் சேதுபதி என்று கூறினால் மிகையாகாது. படத்தில் பல வசனங்கள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும் . குறிப்பாக ஒரு காட்சியில் " என்னை பிடிச்சவங்க நிறைய பேர் வெளிய இருக்காங்க " என்று சொல்லும் போது தியேட்டரில் ஆரவாரம் .

  மாளு, ஆண்ட்ரியா

  மாளு, ஆண்ட்ரியா

  கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா மாஸ்டரில் கலக்கியுள்ளார். முதல் பாதியில் சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மனதில் தங்குகிறார். வில்லும் அம்புமாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஆண்ட்ரியா. அதே போல் மாளவிகாவும் தளபதியுடன் ஜோடி போட்டு கலக்கியுள்ளார். மாளவிகாவுக்கு விஜயுடனான காட்சிகள் மிகவும் கம்மியாக உள்ளது என்பது ஒரு சிலர் குறையாக சொல்லலாம் . ஆனால் இந்த திரைக்கதைக்கு இந்த பங்களிப்பு அழகானது .

  சிறந்த நடிப்பு

  சிறந்த நடிப்பு

  அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், தீனா, கௌரி கிஷன், ரம்யா, பிரிஜிடா சகா ஆகியோர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். படத்தின் தொடக்கத்திலேயே மஹேந்திரன், மாளுவுடன் ரம்யா, சீர்திருத்த பள்ளியில் அர்ஜுன் தாஸ், கல்லூரியில் சாந்தனு, கௌரி என அனைவரின் காட்சிகளும் மனதில் தங்குகிறது. ஆதித்யா டீ வீ புகழ் கலாட்டா குருவிற்கு தளபதியுடன் இணைந்து சில காட்சிகள் நடித்தது பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

  சிறப்பான பணிகள்

  சிறப்பான பணிகள்

  தொழில்நுட்ப ரீதியாக எந்த வித குறையுமின்றி படத்தை தயாரித்துள்ளனர். இயக்கம், இசை, ஒளிப்பதிவு என தனது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர் படக்குழு. அனிருத்தின் இசை பல இடத்தில் நின்னு பேசுகிறது. அந்த அளவிற்கு தரமாக கமெர்ஷியல் எலிமெண்ட்ஸுடன் இசையமைத்துள்ளார். குறிப்பாக ஸ்டண்ட் சிவாவின் சண்டை காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது.

  Master Audience Reaction | Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Vijay Sethupathi | Filmibeat tamil
  திருவிழா கோலம்

  திருவிழா கோலம்

  நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் ஆசையை மாஸ்டர் திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாதுகாப்போடு ரசிகர்களின் படை திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டம் திரையரங்கையும் உயிர்த்தெழ செய்துள்ளது. தமிழ் நாடு மட்டும் அல்லாமல் கேரளாவிலும் இந்த படத்தை மாபெரும் ஒரு வெற்றி படமாக கொண்டாடி வருகின்றனர் .

  English summary
  Master is the Ha trick hit for director lokesh master is the movie for mass audience across many countries and in particular its a blaster for huge fans across india who worship actor vijay. its a big bang for all theater owners after the covid and lockdown tensions for many months . vijay fans scream in theater and enjoy the the screen presence of each and every dialogue. overall master movie is reaching heights with fans tremendous support and good screenplay done by lokesh kanakaraj .
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X