Max Review: மேக்ஸ் விமர்சனம்.. கைதி படத்தை விட மிரட்டுகிறதா?.. கிச்சா சுதீப்பின் தாண்டவம் எப்படி?

நடிகர்கள்: கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார்
இசை: அஜனீஷ் லோக்நாத்
இயக்கம்: விஜய் கார்த்திகேயா
ரேட்டிங்:

Rating:
3.5/5
Star Cast: கிச்சா சுதீப், வரலட்சுமி சரத்குமார்
Director: விஜய் கார்த்திகேயா

சென்னை: கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், சுனில், வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழில் நேற்று வெளியான படம் தான் மேக்ஸ்.

கன்னட திரையுலகில் கேஜிஎஃப், காந்தாரா படங்களுக்குப் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் மேக்ஸ் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தை பல இடங்களில் நினைவுப்படுத்துகிறது.

max movie  max movie review  kiccha sudeepa

ஆனாலும், இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை வித்தியாசப்பட்டு ரசிகர்களை கடைசி வரை போர் அடிக்காமல் செம ஆக்‌ஷன் பிளாக் என்டர்டெயின்மென்ட் படமாக அமைந்துள்ள நிலையில், அந்த படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க.

மேக்ஸ் கதை: ஒரு நாள் இரவுக்குள் போலீஸ் ஸ்டேஷனையே காலி செய்துவிட வேண்டும் என அமைச்சரின் ஆட்கள் படையெடுத்து வரும் நிலையில், அடுத்த நாள் அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியமர காத்திருக்கும் அர்ஜுன் என்கிற மேக்ஸ் (கிச்சா சுதீப்) அந்த போலீஸ் ஸ்டேஷனையும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கதை.

max movie  max movie review  kiccha sudeepa

படம் எப்படி இருக்கு?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் மட்டுமே நடக்கும் கதையாக இருக்கும். அதே போலத்தான் இந்த படமும். இதிலும், ஹீரோயின் மற்றும் டூயட் பாடல்கள் எல்லாம் கிடையாது. போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக சேர வரும் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் அதே ஸ்டேஷனில் பணியாற்றி வரும் பெண் போலீஸுக்கு அமைச்சரின் மகன்களால் ஏற்படும் அவமானத்தை பார்த்து டென்ஷனாகி அவர்களை அடித்து ஸ்டேஷனில் அடைக்கிறார். எதிர்பாராத ஒன்று அங்கே நடந்துவிட அமைச்சரின் ஆட்கள் ஸ்டேஷனையே காலி செய்ய நினைக்கின்றனர். வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ரோலில் அமைச்சரின் ஆளாக இருந்து கிச்சா சுதீப்புக்கு குடைச்சல் கொடுக்கிறார். எல்லாவற்றையும் தனியாளாக நின்று கிச்சா சுதீப் எப்படி சமாளிக்கிறார் என்பதை முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை விறுவிறுப்பாக காட்டி ரசிகர்களை மனநிறைவுடனே தியேட்டரை விட்டு அனுப்புகிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா.

max movie  max movie review  kiccha sudeepa

பிளஸ்: கிச்சா சுதீப் தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். சுனில், வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு என மற்ற நடிகர்கள் எல்லாம் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் அனல் பறக்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை தரமான சம்பவம். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படம் போவதே ரசிக்கும் படி உள்ளது. நிச்சயம் கிச்சா சுதீப்புக்கு இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

மைனஸ்: பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளன. ஆனால், ஸ்க்ரீன் பிளேவை வைத்து அதை முடிந்தவரை இயக்குநர் சரிகட்டியிருக்கிறார். கதை மற்றும் திரைக்கதை எழுதும் போது அந்த லாஜிக் மிஸ்டேக்குகளையும் கொஞ்சம் கவனமாக சரி செய்திருந்தால் இன்னமும் சூப்பரான படமாக இந்த படம் மாறியிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X