For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Mehandi Circus Review: காதல், காதல், காதலோ காதல்... காதலை தூக்கிப் பிடிக்கும் மெஹந்தி சர்க்கஸ்!

  |

  Rating:
  2.5/5
  Star Cast: மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங்
  Director: சரவணா ராஜேந்திரன்

  சென்னை: உண்மை காதல் என்றும் மாறாது என்பதை அழுத்தமாக சொல்லும் மற்றொரு காதல் படம் தான் மெஹந்தி சர்க்கஸ்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு ஊரில், ஒரு நடுத்தர வயது பெண் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கட்டிலில் கிடக்கிறார். அந்த பெண்ணின் கணவரை அழைத்து வர, அவரது மகள் உறவினர் ஒருவருடன் புறப்படுகிறார்.

  Mehandi circus review: Once again a love and love movie

  மகாராஷ்டிராவில் இருந்து அப்படியே கொடைக்கானல் பூம்பாறைக்கு பயணிக்கிறது கதை. பிளாஷ் பேக் காட்சிகள் விரிகின்றன. பூம்பாறையில் ராஜகீதம் என்ற பெயரில் கேசட் கடை வைத்திருக்கும் இளைஞன் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்), அந்த ஊரில் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருக்கும் சன்னி சார்லஸின் மகள் மெஹந்தியை (ஸ்வேதா திரிபாதி) காதலிக்கிறார். மெஹந்திக்கும் ஜீவா மீது காதல் மலர்கிறது.

  சாதி வெறிப்பிடித்த ஜீவாவின் தந்தை ராஜாங்கம் (மாரிமுத்து), காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் மெஹந்தியின் தந்தையும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹீரோயினின் உறவுக்கார பையன் ஜாதவின் (அஞ்சுர் விகாஷ்) உதவியுடன் காதல் தொடர்கிறது.

  Mehandi circus review: Once again a love and love movie

  ஒருகட்டத்தில் எதிர்ப்பு அதிகமாகவே, மெஹந்தியின் தந்தையிடமே நேரடியாக சென்று பெண் கேட்கிறார் ஜீவா. மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் பெண் தருவதாக சம்மதிக்கிறார் சன்னி சார்லஸ். கத்தி வீச்சில் ஜெயித்து மெஹந்தியின் கரம் பிடித்தாரா ஜீவா?, மகாராஷ்டிராவில் இருந்து வந்த பெண் யார் என்பது தான் மீதிக்கதை.

  காதலை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும், வாழ வைக்கப் போகும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் படம். எத்தனை படங்கள் வந்தாலும், காதல் மட்டும் அலுக்காது என்பதை நன்கு உணர்ந்து படத்திற்கு கதை - வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன். குறிப்பாக ஷார்ப்பான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

  Mehandi circus review: Once again a love and love movie

  'மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ' என படம் முழுவதையும் காதல் கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். கொடைக்கானல் மலைகளும், பூம்பாறையின் இயற்கை அழகும் படத்துடன் சேர்ந்து காதல் டூயட் பாடுகின்றன.

  ரம்மியமான காட்சியமைப்பு, கண்களை உறுத்தாத ரொமான்ஸ், பின்னணியில் இசையராஜா பாடல்கள், எதிர்ப்பு, சவால், போட்டி, பிரிவு, வலி, மது, தேவதாஸ் நாய், கூடுதலாக சர்க்கஸ் வித்தைகள் என ஒரு காதல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது. கண்டதும் காதல் கதை தான் என்றாலும், அதை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக தர முயன்றிருக்கிறார் இயக்குனர்.

  ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், நடிகர் ரகுமானின் சிறுவயது சாயலில் தோற்றமளிக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். இது முதல் படம் தான் என்பதால், போகப் போக பார்க்கலாம், ரங்கராஜின் நடிப்பு எப்படி மெருகேறுகிறது என்பதை.

  Mehandi circus review: Once again a love and love movie

  வட இந்திய பெண்ணாகவே படம் முழுவதும் வருவதால், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸ், காதல், வேதனை என ஒவ்வொரு காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார்.

  ஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடி பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சில வசனங்களில், அவரையும் மீறி ராஜூ முருகன் தான் வெளியே தெரிகிறார். சர்ச் பாதர் வேல.ராமமூர்த்தி, அஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

  ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஈர்க்கும் அளவுக்கு, பாடல்கள் ஈர்க்கவில்லை. காதலை ரசித்து ரசித்து ஒவ்வொரு ஃபிரேமையும் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். ஏற்றம், இறக்கம் இல்லாமல், படத்தை ஒரே ஸ்பீடில் எடிட் செய்திருக்கிறார் பிலோமின் ராஜ்.

  Mehandi circus review: Once again a love and love movie

  தலைப்பை தவிர வேறு எந்த புதிய ஆச்சரியங்களும் இல்லாமல், ஏற்கனவே பார்த்த பல படங்களின் கலவையாக தான் வந்திருக்கிறது மெஹந்தி சர்க்கஸ். இடைவெளி காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும், யதார்த்தமாக நகரும் படத்தை, அப்படியே கமர்சியல் சினிமாவாக மாற்றிவிடுகின்றன. எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

  சர்க்கஸ் வித்தை காட்டி, புதிய கிளாஸில் பரிமாறப்பட்ட பழைய ஒயின் இந்த 'மெஹந்தி சர்க்கஸ்'.

  English summary
  The tamil movie Mehandi circus, starring Madhampatti Rangaraj, Swetha Tiripathy directed by Saravanan Rajendran is romantic film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X