Blue Sattai Maran: ஒரேயொரு ட்விஸ்ட்.. படம் சோலி முடிஞ்சு.. மெர்ரி கிறிஸ்துமஸ் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
மெர்ரி கிறிஸ்துமஸ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்கச் சென்றால் நல்ல அனுபவமாக இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இந்தப் படத்தின் கதை பற்றி பேசியுள்ள அவர், “கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள்ல விஜய் சேதுபதியும் கத்ரீனா கைஃப்பும் ஒரு பார்ல சந்திக்குறாங்க. இவங்களோட பின்னணின்னு சொன்னா ஹீரோயினுக்கு 4 வயசலு வாய் பேச முடியாத ஒரு பெண் குழந்தை இருக்கு. விஜய் சேதுபதி லவ் ஃபெயிலியரால பாதிக்கப்பட்டவர்.”

“இவங்க இரண்டு பேரும் பார்ல முதன்முறையா சந்திச்சு பேசும் போதே நல்ல புரிதலுக்குள்ள வர்றாங்க. அதுக்குள்ள ஒரு திடுக்கிடும் திருப்பமா ஒரு சம்பவம் நடக்குது. அதன் பின்னர் விஜய் சேதுபதியும் கத்ரீனா கைஃப்பும் என்ன பண்ணாங்க என்பது தான் கதை. படத்தோட ஆரம்பத்துல ஹீரோவும் ஹீரோயினும் மீட் பண்ணி பேசுறது, பழகுறது எல்லாம் பார்க்கும் போது எதோ நல்ல ஃபீல் குட் மூவிக்கு வந்துருக்கோம்ன்னு நினைக்க வச்சுது.”
“ஆனா அதுல திடீர்ன்னு கொண்டு வந்து ஒரு ட்விஸ்ட் வச்சாங்க. அந்த ட்விஸ்ட்டுக்கு அப்புறம் படம் செயற்கைன்னா செயற்கை அவ்ளோ செயற்கையா மாறிடுச்சு. அத இன்னும் சுவாரஸ்யபடுத்துறேன்னு நினைச்சு படத்த ரொம்பவே மொக்கையாக்கிட்டாங்க. அதே மாதிரி படத்துல ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் போர்ஷன் வருது. இதுவரை போலீஸ் இன்வெஸ்டிகேஷன்னா என்னனே தெரியாம எடுத்து வச்ச மாதிரி இருக்குது” என விமர்சித்துள்ளார்.
பிரஞ்சு நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்த மூவியில் பெரிய சுவாரஸ்யமே இல்லை எனவும் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதேபோல், படத்தில் வரும் ஒரு கேரக்டர் சுத்தமாக எடுபடவே இல்லை. அதனை உருவாக்கிய விதத்தில் இயக்குநர் கோட்டை விட்டுள்ளார் எனவும், த்ரிஷயம் படம் மாதிரியான பரபரப்போ, மோகன்லால் குடும்பத்தினர் மீது ரசிகர்களுக்கு வரும் பரிதாபமோ மெர்ரி கிறிஸ்துமஸ் பார்க்கும் போது இல்லை என்றுள்ளார்.
அதேபோல், முக்கியமான கேரக்டர்கள் எதுவும் படத்துக்கு நியாயம் சேர்க்கவில்லை. ஆனால், விஜய் சேதுபதியின் நடிப்பும் பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளன. மொத்தத்தில் இந்தப் படம் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய 'அந்தாதூன்’ மாதிரியெல்லாம் இல்லாமல் சுமாராகவே உள்ளது. சில காட்சிகள் ரேடியோ நாடகம் மாதிரி செயற்கைத்தனமாக இருப்பதாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











