Middle Class Review: மிடில் கிளாஸ் விமர்சனம்.. கஷ்டப்பட்டு உழைக்குறோம்.. நிம்மதியா தூங்குறோம்!

Rating:
3.0/5
Star Cast: முனிஷ்காந்த், விஜயலட்சுமி
Director: கிஷோர் முத்துராமலிங்கம்

சென்னை: இந்த ஆண்டு முழுக்க ஏகப்பட்ட மிடில் கிளாஸ் பாவங்கள் படங்களாக கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனலை மிஞ்சும் அளவுக்கு பல படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் நிலையும், கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் பட்ஜெட் படங்களை மட்டுமே எடுக்கும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

முன்னணி நடிகர்கள் மட்டும் தான் ஹீரோக்களாக வர வேண்டுமா? நல்ல நடிக்கத் தெரிந்த முனிஷ்காந்த் ஹீரோவாக ஆகக் கூடாதா என இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் முனிஷ்காந்தை ஹீரோவாக்கி, விஜயலட்சுமியை ஹீரோயினாக்கி தமிழ்நாட்டில் குறிப்பாக சொந்த ஊரை விட்டு எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்கிற முனைப்புடன் சென்னைக்கு வந்து கஷ்டப்படும் ஏகப்பட்ட மிடில் கிளாஸ் குடும்பங்களின் பிரதிபலிப்பாக இந்த மிடில் கிளாஸ் படம் உருவாகியுள்ளது.

Middle Class Review in Tamil  Munishkanth and Vijayalakshmi gives their best

எந்த அளவுக்கு இந்த படம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பது குறித்தும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு தான் கடைசி வரைக்கும் நிலைக்கும் என்றும் நிம்மதியாக தூங்க நிறைய பணம் தேவையில்லை என்பது குறித்தும் இந்த படம் என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

மிடில் கிளாஸ் கதை: மாத சம்பளமே வெறும் 15 ஆயிரம் மட்டுமே வாங்கும் முனிஷ்காந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளை வைத்துக் கொண்டு சென்னையில் எப்படி ஜீவனம் செய்கிறார். துணி தைப்பது, சிட் ஃபண்ட் போடுவது, யூடியூப் சேனல் ஆரம்பித்து பணம் சம்பாதிக்க போராடுவது என குடும்பத்தின் வளர்ச்சிக்காக பணத்தை சேமிக்கத் துடிக்கும் யதார்த்தமான குடும்ப தலைவியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக் கிடைக்க, பணம் கிடைத்து விட்டதே என ஆடம்பர செலவில் இறங்க, அந்த செக் காணாமல் போக இவர்களது நிலை என்ன ஆகிறது என்பது தான் இந்த மிடில் கிளாஸ் கதை.

படம் எப்படி இருக்கு?: ராட்சசன் படத்தில் தனது மகளை காரில் அப்படியொரு நிலையில் பார்க்கும் காட்சியிலேயே நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருப்பார் முனிஷ்காந்த். பல படங்களில் காமெடியனாகவும், எமோஷன் காட்சிகளில் தூக்கிச் சாப்பிடும் குணசித்திர நடிகராகவும் தூள் கிளப்பிய முனிஷ்காந்த் இந்த படத்தில் ஹீரோ என்றால் சொல்லவா வேண்டும், மொத்த படத்தையும் தனது தோளில் போட்டுக் கொண்டு கடைசி வரை கச்சிதமாக நடித்து பல அப்பாக்களின் வலியை திரையில் காட்டி அசத்திவிட்டார்.

குடும்பத்துக்காக காசு சேர்த்து வைக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி இந்த படத்தில் முனிஷ்காந்த் ஜோடியாக கலக்கலாக நடித்துள்ளார். தம்பி கல்யாணத்துக்கு சீர் செய்ய பணம் ரெடி பண்ண சொல்லும் காட்சிகளிலும், கணவர் ஒரு கோடி ரூபாய் செக் தொலைத்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரை திட்டித் தீர்க்கும் காட்சிகளிலும் செம ஸ்கோர் செய்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தாண்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராதாரவி, குரைஷி, காளி வெங்கட், மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் தங்களது பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளனர்.

காணாமல் போன செக் கிடைத்ததா? இல்லையா? நகரத்தில் நரக வேதனை அடைவதை விட சொந்த ஊரில் சொர்க்கமாக வாழலாம் என்கிற கருத்து என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த மிடில் கிளாஸ் படத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

பிளஸ்: மிடில் கிளாஸ் மக்களின் பிரச்சனைகளும், பணம் அவர்களின் வாழ்க்கையில் நடத்தும் போராட்டங்களையும் அவர்களுக்கு இடையே கொண்டு வரும் சண்டைகளையும் தெளிவாக காட்சிகளாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம். இயக்குநரின் எண்ண ஓட்டங்களை தனது ஒளிப்பதிவால் அழகாக செதுக்கி ரசிக்கும் படி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன்.

குறிப்பு: தமிழ் பிலிமிபீட்டில் ரஞ்சித் கண்ணன் கொடுத்துள்ள யூடியூப் வீடியோ விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.

மைனஸ்: பிரணவ் முகர்ஜியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகம் தான். சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் காணப்படுவது படத்திற்கு பலவீனத்தை கொடுக்கிறது. மேலும், இரண்டாம் பாதியில் படம் இதை நோக்கித் தான் நகரப்போகிறது என்பது முன்கூட்டியே யூகிக்க முடிவதும், கடைசி வரை அதை நோக்கியே படம் செல்வதும் மைனஸ். ஆனாலும், தியேட்டருக்குச் சென்று படத்தை பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் இந்த படம் ஏமாற்றாமல் மகிழ் விக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X