Middle Class X Review: முனிஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் கவினின் மாஸ்க், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட புதிய படங்களுடன் போட்டியாக இந்த படம் வெளியாகிறது.

குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, 3 பிஹெச்கே, ஹவுஸ்மேட்ஸ் என இந்த ஆண்டு ஏகப்பட்ட மினி பட்ஜெட் ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்த படங்கள் வெளியாகி ஓரளவுக்கு கல்லா கட்டின. அதில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மட்டும் அதிகபட்சமாக 90 கோடி வரை வசூல் செய்து மகத்தான வெற்றியை பெற்றது.

Middle Class Twitter Review and Reactions in Tamil  Munishkanth shines bright

குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து படங்களை எடுத்தாலே மினிமம் கியாரண்டி என்றும் ஒட்டுமொத்த குடும்பமாக தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்தால் லாபம் நிச்சயம் என்கிற அடிப்படை கோட்பாட்டை புரிந்துக் கொண்டு உருவாக்கியுள்ள இந்த மிடில் கிளாஸ் படத்தின் பிரஸ் ஷோவுக்குப் பிறகு கிடைத்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

மிடில் கிளாஸ் கதை இதுதான்: "ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும். இதுதான் கரு. கதை நாயகனாக முனிஸ்காந்த் ஜெயித்து இருக்கிறார். விஜயலட்சுமி நடிப்பில் கலக்கி இருக்கிறார். படம் பார்த்துவிட்டு வரும் போது ஒருவித பாசிட்டிவ் பீல் கிடைக்கும். அதுதான் படத்தின் வெற்றி. இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் ஸ்கிரிப்ட், சொல்ல வரும் கருத்து பக்கா. குடும்பத்துடன் பார்க்கலாம்." என பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் 5க்கு 3.5 ரேட்டிங்கை கொடுத்துள்ளார்.

சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்: விமர்சகர் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பார்த்துவிட்டு, நல்ல ஜாலியான படமாக உருவாகியுள்ளது, நகைச்சுவை காட்சிகள் ரொம்ப அருமையாகவே படம் முழுக்க உள்ளது சிறப்பு, முனிஷ்காந்த், விஜயலட்சுமி, முகமது குரைஷி என பலரும் சிறப்பாக நடித்துள்ளனர் என பாராட்டி பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

சிம்பிள் படம்: மிடில் கிளாஸ் திரைப்படம் ஒரு சாதாரண படம் தான். ஆனால், 2ம் பாதியில் அந்த படம் ரொம்பவே ஷைன் ஆகிறது. முனிஷ்காந்த் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அழகாக சுமந்திருக்கிறார். மற்ற நடிகர்களும் தேவையான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றாத வகையில் நடித்துள்ளனர் என குமாரசம்பவம் படத்தின் இயக்குநர் பாலாஜி விமர்சித்துள்ளார். இந்த வாரம் ஜாலியாக ஃபேமிலியுடன் இந்த படத்தை போய் பார்க்கலாம் என்றும் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி கொடுத்த வைபை கண்டிப்பாக கொடுக்கும் என பல பத்திரிகையாளர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். பொதுமக்கள் இந்த படத்தை எந்தளவுக்கு ஏற்க போகின்றனர் என்பது நாளை தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X