twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஹீரோ.. சூப்பர் வில்லன்.. இரண்டும் களந்த கலவை.. ‘மின்னல் முரளி’ படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்

    டொவினோ தாமஸ்

    அஜு வர்க்கீஸ்

    நம்மூர் குரு சோமசுந்தரம்

    இயக்குநர் : பாசில் ஜோசப்

    சென்னை : இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தோமஸ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மின்னல் முரளி.

    இத்திரைப்படத்தில் அஜு வர்க்கீஸ், நம்மூர் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி களத்தில் ரிலீஸாகியுள்ள இந்த மலையாள சூப்பர் ஹீரோ படம் எப்படி இருக்கு பார்க்கலாமா ?

    அதிக மசவு

    அதிக மசவு

    சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிப்பார்கள். இந்த திரைப்படங்களை எடுக்க அதிகம் பணம் மற்றும் அதி நவீன தொழில்நுட்பம் தேவை என்பதால் இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை. மேலும், வெளிநாடுகளிலேயே சூப்பர் ஹீரோக்களுக்கு அதிகம் மசுவு இருக்கிறது.

    பாலிவுட் சூப்பர் ஹீரோ க்ரிஷ்

    பாலிவுட் சூப்பர் ஹீரோ க்ரிஷ்

    பாலிவுட்டில் ரித்திக்ரோஷன் க்ரிஷ் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த பாடத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெளியாகி வில்லை. இயக்குனர் மிஷ்கின் முகமூடி, சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிதாக வெற்றிறை பெற்றுத்தரவில்லை.

    மின்னல் முரளி

    மின்னல் முரளி

    ஒரு சூப்பர் ஹீரோ... ஒரு சூப்பர் வில்லன் இதுதான் மின்னல் முரளியின் மையக்கரு . உயிருக்கு உயிராக காதலித்த காதலியுடன் அமெரிக்காவில் குடியேறத்துடிக்கும் காதலன்( டோவினோ தாமஸ்). காதல் தோல்வியால் வாழ்க்கை இழந்து தவித்து வயிற்று பிழைப்புக்காக டீ கடையில் வேலை செய்யும் இளைஞனாக (குருசோமசுந்தரம்)

    அதிசய சக்தி

    அதிசய சக்தி

    இவர்கள் இருவருக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று மின்னல் தாக்கி ஒரு அதிசய சக்தி கிடைக்கிறது. மின்னல் தாக்கியது முதல் இவர்கள் உடலில் ஒருவித மாற்றத்தை உணர்கிறார்கள். கிடைத்த சக்தியை ஒருவன் தவறான வழியிலும், மற்றொருவன் நன்மைக்காகவும் பயன்படுத்துகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே மின்னல் முரளியின் கதை.

    சபாஷ்

    சபாஷ்

    டோவினோ தாமசின் அட்டகாசமான நடிப்பு மேச்சும்படி உள்ளது. கதாநாயகனுக்கு நானும் அசளைத்தவன் நல்ல என்பது போல குரு சோமசுந்தரமும் அதகளப்படுத்தி, பல நேரத்தில் சபாஷ் கூறவைத்தார்.

    மிரட்டலான இசை

    மிரட்டலான இசை

    சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கு இருக்கும் மற்றொரு ஸ்பெஷல் இசை அதை கனகட்சிதமாக செய்து மிரட்டி உள்ளார் இசையமைப்பாளர் சுஷில் ஷ்யாம். படத்தின் விறுவிறுப்புக்கு இசை பக்கபலமாக இருந்தது எனலாம்.

    சலிப்பு

    சலிப்பு

    முதல்பாதி முடியும்வரை ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாதது படத்தின் சுவாரசியத்தை குறைத்து. சொல்லப்போனால் முதல் பாதி எப்படா முடியும் என்ற சலிப்பை ஏற்படுத்தியது . படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

    நிதானமான ஹீரோ

    நிதானமான ஹீரோ

    ரயிலை நிறுத்துவது, விமானத்தை தாங்கி பிடிப்பது, கட்டிங்களில் தாவி சண்டை போடுட்டு கட்டிடங்களை அடித்து நொறுக்குவது போன்ற எந்த காட்சியும் மின்னல் முரளியில் இல்லை என்றாலும். இந்த சூப்பர் ஹீரோ மிகவும் நிதானமாக இருப்பது பாராட்டுக்கிறது.

    English summary
    Minnal Murali trending Review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X