மெகா சீரியல் கதை.. புதுசா ஏதும் இல்ல.. ஆனா நல்லாருக்கு.. நம்ம வீட்டு பிள்ளை டிவிட்டர் விமர்சனம்!

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Namma veetu pillai Movie Review | Sivakarthikeyan

சென்னை: நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

இயக்குனர் பாண்டிராஜுடன் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சமுத்திரகனி, பாரதிராஜா, நட்டி, ஆர்.கே.சுரேஷ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். அதேபோல் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இந்நிலையில் படம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

குடும்பங்களை மகிழ்விக்கும் படம்

"நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களை மகிழ்விக்கும் ஒரு படம். நிச்சயம் வெற்றி படம் தான். திரையரங்கு உரிமையாளர்களுக்கு மற்றொரு கடைக்குட்டி சிங்கம் இந்த நம்ம வீட்டு பிள்ளை", என இவர் பாராட்டியுள்ளார்.

மெகா சீரியல் மெட்டீரியல்

"நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றன. சிவகார்த்திகேயன் மட்டும் தனித்து தெரிகிறார். க்ளைமாக்ஸ் நடிப்பு சூப்பர். இமான் இசை அருமை. முதல் பாதியில் காமெடி சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒரு மெகா சீரியலுக்கான கதை இது. ஆனால் இயக்குனர் பாண்டிராஜ் ரசிக்கும்படியாக தந்துள்ளார். புதிதாக எதுவும் இல்லை. ஆனால் சுவாரஸ்யமாக உள்ளது", என இவர் தெரிவித்துள்ளார்.

சிவா ஓவர் ஆக்டிங்

"நம்ம வீட்டு பிள்ளை படத்தின் கதையும், திரைக்கதையும் டீசெண்டாக உள்ளது. ஆனால் நிறைய இடங்களில் அலுப்படைய வைக்கிறது. மையிலாஞ்சி பாடலை தவிர்த்து மற்ற பாடல்கள் எல்லாம் மோசம். ஹீரோ சிவகார்த்திகேயன் எல்லாம் பிரேமிலும் ஓவர் ஆக்டிங் செய்கிறார். ஹீரோயின் டப்பிங் மிக மோசம். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மட்டும் தான் நன்றாக உள்ளது", என இவர் விமர்சித்துள்ளார்.

உணர்வுப்பூர்வமான காட்சிகள்

"கடைக்குட்டி சிங்கம் போலவே நம்ம வீட்டு பிள்ளையும் ஒரு குடும்பப் படம் தான். சிவகார்த்திகேயன், அனு இமானுவேல் இடையேயான காதல் காட்சிகள் சிறப்பாக உள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் இடையேயான உணர்ப்பூர்வமான காட்சிகள் சிறப்பாக உள்ளது", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X