Modern love chennai : அழகான காதல் உணர்வில் நனைய வைத்த மார்கழி விமர்சனம்!

Rating:
2.0/5

இயக்குனர் : அக்‌ஷய் சுந்தர்

நடிகர்கள் : சஞ்சுளா சாரதி, சே கோய் ஷெங்

இசை : இளையராஜா

ஓடிடி : அமேசான் பிரைம்

சென்னை : மார்டன் லவ் சென்னை ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்காம் அத்தியாயமான மார்கழி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இப்படத்தை அக்‌ஷய் சுந்தர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

Modern love chennai margazhi review in tamil

மார்டன் லவ் சென்னை:ஆறு அத்தியாயங்களை கொண்ட ஆந்தாலஜி படத்தில் லாலா குண்டா பொம்மைகள், இமைகள், காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி, மார்கழி, பறவை கூட்டில் வாழும் மான்கள் என ஆறு வெவ்வேறு இயக்குநர்கள் இணைந்து மார்டன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி படத்தை கொடுத்துள்ளனர்.

மார்கழி : இதில், பதின்பருவத்தில் வரும் அழகான காதலை விரலால் வருடுவது போல மார்கழி குறும்படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். படத்தின் நாயகி ஜாஸ்மீனின் (சஞ்சுளா சாரதி) அப்பா, அம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட விரக்தியில் இருக்கிறார் ஜாஸ்மீன். மன அழுத்தத்தில் இருந்து அவரை மீட்க சர்ச்சில் நடக்கும் கொயர் (Choir) கிளாஸில் சேர்த்து விடுகிறார் ஜாஸ்மீனின் தந்தை ஜெயசீலன்.

Modern love chennai margazhi review in tamil

அழகான காதல் கதை : இசை மீது தீராத காதல் கொண்ட ஜாஸ்மீனுக்கு, அந்த சர்ச்சிற்கு புதியதாக வரும் மில்டன் ( Che Khoy Sheng) என்ற இளைஞன் மீது இனம் புரியாத ஓர் காதல் உணர்வு வருகிறது. அறியாத பருவத்தில் மனதிற்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காதலால் ஜாஸ்மீன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் தான் மார்கழி ஆந்தாலஜி படத்தின் கதை.

மென்மையான இசை : இந்தப் படத்தில் மொத்த ஸ்கோரையும் ஜாஸ்மினாக வரும் சஞ்சளா சாரதிக்கும் , இசையமைப்பாளர் இளையராஜாவும் தட்டிச்சென்றுவிட்டனர். இப்படத்தின் ஆங்காங்வே வரும், 'தென்றல் புதிது தேனினும் இனிது' என்ற இளையராஜாவின் குரலில் வரும் பாடலை முழுவதுமாக கேட்க முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

Modern love chennai margazhi review in tamil

கோட்டைவிட்ட இயக்குநர் : நாயகியை நன்றாக தேர்வு செய்த இயக்குநர், கதாநாயகனை, வடமாநில இளைஞராக காட்டியது ஏன் என்றுதான் புரியவில்லை. இருந்தாலும், ஹீரோவை அழகாக தமிழில் பேசவைத்து மைனசை பிளஸ்சாக்கிவிட்டார். பதின்பருவத்தில் வரும் காதல், இனம் புரியாத உணர்வு, இளையராஜாவின் இசை மார்கழி மாத பனியில் நனைந்த ஓர் உணர்வை கொடுத்துவிட்டது 'மார்கழி'.

More from Filmibeat

Read more about: modern love chennai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X