Haraa Review: ஆக்‌ஷனில் அதகளப்படுத்தும் மோகன்.. மருத்துவ மாஃபியா.. ஹரா பப்ளிக் விமர்சனம்!

சென்னை: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மோகன், அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், வனிதா விஜயகுமார் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் மோகன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், முதல் நாளே அவரை பார்க்க ரசிகர்களை விட அதிகளவில் ரசிகைகள் தியேட்டருக்கு குவிந்துள்ளனர். மைக் மோகன் என கொண்டாடப்பட்டு வந்த மோகன் இந்த படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் என படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

Review  Mohan  Haraa  GOAT  Anumol

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் முக்கிய ரோலில் மோகன் நடித்துள்ள நிலையில், ஹரா படத்திலும் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோகனின் ஹரா: ராமராஜன் நடித்த சாமானியன் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெறாமல் தோல்வியை தழுவியது. ராமராஜன் படத்துக்கு மக்கள் ஆதரவு தராத நிலையில், மோகன் படத்துக்கு ஆதரவு எப்படி இருக்கும் என்று பார்த்தால் முதல் நாள் நல்லாவே ஆதரவு கிடைத்து வருகிறது. மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் இன்று வெளியான நிலையில், பல ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்து வருகின்றனர். மோகனின் ஹரா படத்துக்குப் போட்டியாக இன்று வெப்பன், அஞ்சாமை, தண்டுபாளையம், இந்தியன் மற்றும் கஜினி ரீ ரிலீஸ், ஹாலிவுட் படமான பேட் பாய்ஸ் என பல படங்கள் வெளியாகி உள்ளன.

Review  Mohan  Haraa  GOAT  Anumol

அப்பா மகள் பாசம் சூப்பர்: மகளுக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக் கேட்க எந்த எல்லைக்கும் செல்லும் தந்தையாக மோகன் நடித்துள்ளார். அப்பா, மகள் பாசம் படத்தில் பக்காவாக உள்ளது. எங்கேயும் போரடிக்காமல் செல்வதாக இளம் ரசிகர்களுக்கு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

மெளன ராகம் படத்துல பார்த்ததை போல: நடிகர் மோகன் மெளன ராகம் படத்துல பார்த்தது போலவே இப்பவும் அப்படியே இருக்காரு என ஏகப்பட்ட ரசிகைகள் மோகனை தியேட்டரில் மீண்டும் சைட் அடிக்கவே வந்ததாக தெரிவித்துள்ளனர்.

Review  Mohan  Haraa  GOAT  Anumol

மருத்துவ மாஃபியா: மருத்துவ துறையில் நடக்கும் மாஃபியா மற்றும் தவறான மருந்துகள் கொடுக்கும் கதையையும் உள்ளே வைத்திருக்கிறார் இயக்குநர். பெண்களுக்கான அட்வைஸ், பெண்களை சமூகம் எப்படி பார்க்கிறது. சமூகத்தில் அவர்களுக்கு எப்படியெல்லாம் தொல்லைகள் வருகின்றன என பல விஷயங்களை சொல்லியுள்ளனர் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Review  Mohan  Haraa  GOAT  Anumol

செம மொக்கை: மோகன் நடிப்பு எல்லாம் ஓகே தான். ஆனால், படத்தின் மேக்கிங் எல்லாம் ரொம்பவே சுமாராக உள்ளது. சீட்டில் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. மோகன் ரசிகராக இருந்தால் மட்டும் வந்து பாருங்க என்றும் ரசிகர்கள் பப்ளிக் ரிவ்யூவில் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X