Monica O My Darling Movie Review: ’கொலை..கொலை’யாம் முந்திரிக்கா..அடுக்கடுக்கான திருப்பம், சஸ்பென்ஸ்

Rating:
3.5/5

நடிகர்கள்: ராஜ்குமார் ராவ், ஹீமா குரேஷி, ராதிகா ஆப்தே,

இயக்கம்: வாசன் பாலா

இசை : அசிண்ட் டாக்கர்

மோனிகா மை டார்லிங் இந்திப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிடியில் நெட்ஃபிலிக்ஸில் உள்ளது.

அடுத்தடுத்த கொலைகள், சுவாரஸ்யமான காமெடியுடன் படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது படம்.

ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள் கொல்லப்படுவதும், அடுத்தடுத்து மர்மமுடிச்சுகளுடன் அதே கண்கள் படப்பாணியில் செல்கிறது படம்.

 தமிழில் டப் செய்யப்பட்ட கிரைம் காமெடி த்ரில்லர் படம்

தமிழில் டப் செய்யப்பட்ட கிரைம் காமெடி த்ரில்லர் படம்

ஒரு பெரிய நிறுவனத்தின் பெண் செகரெடரி நிறுவனத்தின் முதலாளியின் மகன், கதாநாயகன் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் இருப்பதை பயன்படுத்தி மிரட்ட அவளை கொல்ல எடுக்கும் முயற்சியில் பலர் கொல்லப்படுகின்றனர். அதன்பின் வேகமாக நகரும் கதையில் பல திருப்பங்கள் உள்ளன. படத்தின் கதை ஒரு ஜப்பானிய நாவலின் தழுவல் என்கின்றனர். படத்தில் முக்கிய இடங்களில் மோனிகா என பாடப்படும் 1971 ஆம் ஆண்டு வெளியான கேரவன் படத்தின் பாடலை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

 கதை இதுதான்

கதை இதுதான்

மும்பையில் உள்ள யூனிகார்ன் தொழிற்சாலை. அதி நவீன ரோபோர்ட் செயல்பாட்டில் உள்ளது. இரவு பணிக்கு வரும் ஊழியர் ​​தேவ் பிரகாஷ் தனது நண்பன் கௌரவிடம் ஹீரோ ஜெயந்தின் தங்கை ஷாலுவிடம் காதலை சொன்னதாகவும் அவரும் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார். காதலியிடமிருந்து போன் பேசிக்கொண்டிருக்கும் போது நிறுவனத்தின் ரோபோ தேவ்வை தாக்கி கொன்றுவிடுகிறது. இதை விபத்தாக நிறுவனம் அறிவிக்கிறது. பாதுகாப்பு அதிகாரி ஃபரிடி பெய்க்கை சஸ்பெண்ட் செய்கின்றனர்.

 முதலாளியின் மகளுடன் நிச்சயதார்த்தம், டைரக்டர் பதவி அத்தனைக்கும் வேட்டு

முதலாளியின் மகளுடன் நிச்சயதார்த்தம், டைரக்டர் பதவி அத்தனைக்கும் வேட்டு

6 மாதங்களுக்குப் பிறகு, யூனிகார்ன் நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாவில், நாயகன் ஜெயந்த்தை நிறுவனத்தின் இயக்குநராக பதவி உயர்த்துகிறார் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாராயண். அப்போது அவரது மகள் நிக்கிக்கும் அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அடுத்தக்காட்சி நிறுவனத்தின் செகரெடரி மோனிகாவுடன் (ஹுமா குரேஷி) உறவில் இருக்கிறார் நாயகன் ஜெயந்த். மோனிகா ஜெயந்திடம் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறார். கருவை கலைக்க ஜெயந்த் கேட்க முடியாது, நீ உன் முதலாளியின் மகளை கட்டிக்கொள், சொத்தை அனுபவி எனக்கு பணம் கொடுத்துவிடு என சொல்கிறார்.

 ஒரு பெண் மூன்று தொடர்புகள்..பிளாக் மெயிலால் நடுங்கும் ஹீரோ

ஒரு பெண் மூன்று தொடர்புகள்..பிளாக் மெயிலால் நடுங்கும் ஹீரோ

குழப்பத்துடன் மறுநாள் அலுவலகம் செல்ல அங்கு அவர் மோனிகாவுடன் உறவில் இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்களுடன் ஒரு கடிதம் அருகில் உள்ள ஹோட்டலுக்கு வரச்சொல்லி மிரட்டலான மெசேஜை சொல்கிறது. அடுத்த விநாடி படத்தில் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்கிறது. ஹோட்டலுக்கு செல்ல அங்குள்ள அறையில் யூனிகார்னின் சி.எஃப்ஓ அரவிந்த் மணிவண்ணன் மற்றும் உரிமையாளர் சத்தியநாராயணனின் மகன் நிஷிகாந்தை பார்த்து அதிர்ச்சியாகிறார். அவர்கள் இருவரும் மோனிகாவுடன் தொடர்பில் இருந்ததால் கர்ப்பமானதாக மோனிகா மிரட்டுவதாக சொல்கிறார்கள். மூன்று பேருடனும் மோனிகா தொடர்பில் இருந்து பின்னர் பிளாக்மெயில் செய்வதால் மோனிகாவை கொன்று விடலாம் என முதலாளியின் மகன் நாயகன் ஜெயந்திடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

 பெண் செகரெட்டரியை கொல்ல திட்டமிடும் காதலர்கள்

பெண் செகரெட்டரியை கொல்ல திட்டமிடும் காதலர்கள்

நிஷிகாந்த் மோனிகாவை கொல்லவும், அந்த உடலை ஜெயந்த் வேனில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் உள்ள அரவிந்திடம் ஒப்படைக்க வேண்டும், பின்னர் அவரவர் வேலையை நிம்மதியாக பார்க்கலாம் என முதலாளியின் மகன் நிஷிகாந்த் சொல்லி சம்மதிக்க வைக்கிறார். இதில் மூவரும் ஒப்பந்தம் போடவேண்டும் என எழுதி வைத்திருக்கும் பத்திரத்தில் இருவரையும் கைநாட்டு வைக்க சொல்கிறார். அவரும் வைக்கிறார். பின்னர் திட்டமிட்டப்படி மும்பைக்கு வெளியே மோனிகாவை நிஷிகாந்த் வரவழைத்து கொன்று பார்சல் கட்டி வேனில் வைக்க வேனை எடுத்துக்கொண்டு ஹீரோ ஜெயந்த் அந்த உடலை வேனில் எடுத்துச் சென்று காட்டில் இருக்கும் அரவிந்திடம் ஒப்படைக்கின்றார். உடலை காட்டில் தூக்கி போட்டுவிட்டு வந்து விடுகின்றனர்.

 கொல்லப்பட்டவர் உயிருடன் வர ஆரம்பமான பரபரப்பு

கொல்லப்பட்டவர் உயிருடன் வர ஆரம்பமான பரபரப்பு

மறுநாள், மோனிகா உயிருடன் அலுவலகம் வர அப்படியானால் இறந்தது மோனிகாவை கொல்ல திட்டமிட்ட முதலாளியின் மகன் என்பது தெரிய வருகிறது. இதன் பின் நடக்கும் அடுக்கடுக்கான கொலைகள் அடுத்தடுத்து நடக்க காமெடி கலந்த த்ரில்லராக படம் நகர்கிறது. இடையில் நாயகன் மீதும் கொலை முயற்சி நடந்து தப்பிக்கிறார். அவர்மீது கொலைப்பழி விழுகிறது. இதற்கு பின் நடப்பதுதான் மீதிக்கதை.

 விறுவிறுப்பான முடிவு கடைசி ட்விஸ்ட்

விறுவிறுப்பான முடிவு கடைசி ட்விஸ்ட்

படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அதே நேரம் அங்காங்கே காமெடிக்கும் பஞ்சமில்லை. படத்தின் நாயகனாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். காதலிக்கும் போதும், அனைத்தும் கைகூடி வரும்போது கள்ளக்காதலி மிரட்ட அவளைக்கொல்ல சின்ன முதலாளி சொல்லும்போது அதிர்ச்சி ஆவதும், பின்னர் உடலை காட்டுக்குள் போட்டு மறுநாள் கொலை செய்யப்பட்டவர் நேரில் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர் கொலைகளை விறுவிறுப்பாக நகர்த்தும் கதைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது. கடைசியில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் படத்தில் உள்ளது.

மைனஸ்

மைனஸ்

படத்தில் பெரிதாக மைனசாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு பெரிய நிறுவனத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை படமாக்கியுள்ளனர். ஆனால் படத்தில் செகரெட்டரி உறவு வைத்துள்ள விஷயம் ஒருவருக்கு ஒருவர் தெரியாதது போல் இருப்பதும், என்ன நடந்தாலும் ஹீரோ பிரச்சினை இல்லாமல் தப்பிப்பதும் நெருடலாக உள்ளது.

 ஓடிடியில் நெட்ஃபிலிக்ஸில் தமிழில் காணலாம்

ஓடிடியில் நெட்ஃபிலிக்ஸில் தமிழில் காணலாம்

இந்தப்படம் ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது. படம் ஆரம்பம் முதல் காமெடி கலந்து திரில்லலராக வேகமாக நகர்கிறது. தமிழிலும் டப்பிங் சரியாக செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. தவறு செய்யும் யாரும் தப்பவே முடியாது என்பது படத்தின் கடைசி ட்விஸ்ட். அதற்கு புகழ்பெற்ற பாடலின் வரிகளை ஆங்காங்கே உபயோகப்படுத்தியுள்ளதும் கவர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X