twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Mookuthi Amman review: சாமி Vs சாமி 'யார்'.. நயன்தாராவின் அம்மன் அவதாரம் அடடா!

    By
    |

    Rating:
    3.0/5

    Star Cast: நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, அஜய் கோஷ், மவுலி

    Director: ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணன்

    தான் இருக்கும் காட்டை அபகரிக்க நினைக்கும் கார்பரேட் சாமியாரை, கடவுளே காய் நகர்த்தி விரட்டுவதுதான், மூக்குத்தி அம்மன்!

    உள்ளூர் சேனல் செய்தியாளரான ஆர்ஜே.பாலாஜிக்கு தாத்தா, அம்மா, மூன்று சகோதரிகள் என கஷ்டமான வாழ்க்கை.

    Soorarai Pottru Review: அசத்தும் சூர்யா.. அள்ளும் அபர்ணா.. இது மாறாவின் பெருங்கனவு!Soorarai Pottru Review: அசத்தும் சூர்யா.. அள்ளும் அபர்ணா.. இது மாறாவின் பெருங்கனவு!

    இஷ்ட தெய்வம்

    இஷ்ட தெய்வம்

    அப்பா, வீட்டை விட்டுச் சென்றுவிட, குடும்பத்தை தாங்கும் அவர், குல தெய்வமான மூக்குத்தி அம்மன் கோயிலுக்குச் சென்று தங்கினால், கஷ்டங்கள் தீரும் என நம்புகிறார். அங்கு கஷ்ட கோரிக்கை வைக்கும் பாலாஜியின் முன்பு, வந்து நிற்கிறார் இஷ்ட தெய்வம்! தனது கோயிலை ஃபேமஸாக்க கூறும் அம்மன், ஆ.ஜே.பாலாஜியுடன் இருந்து, கார்பரேட் சாமியார் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்ட இருக்கும் ஆசிரமத்தை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படம்.

    நகர்கிறது கதை

    நகர்கிறது கதை

    அந்த தெய்வங்களே கண் திறந்தால்தான், இனி அப்படியான போலி சாமியார்களை விரட்ட முடியும் போலிருக்கிறது. மூக்குத்தி அம்மனாக, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. அசத்தலான அவர் என்ட்ரியில் இருந்துதான் கதை நகர்கிறது. அவர் ஸ்டைலும் பேச்சும் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறது.

    நம்பலை போயிடுச்சு

    நம்பலை போயிடுச்சு

    'நம்பலை இல்லை' என்று ஸ்டைலாகச் சொடக்கு போடுவது, ஆசையாகக் கேட்ட பாலாஜியிடம், கொடுத்து பறித்துவிட்டு, நீங்க நம்புனீங்க வந்துச்சு, நம்பலை போயிடுச்சு' என சிரிப்பது, கடைசியில் கார்பரேட் சாமியார் முன்பு கலக்கலாகத் தோன்றி கேள்வி கேட்பது கடவுளை எங்கயும் தேடாதீங்க, அவன் உங்களுக்குள்ளதான் இருக்கான் என்ற அட்வைஸுடன் செல்வது என்று நயன்தாரா, அந்த அம்மனாகவே கண்முன் நிற்கிறார்.

    கமென்ட்ரி ஸ்டைலில்

    கமென்ட்ரி ஸ்டைலில்

    லொட லொட பேச்சுடன் வரும் ஆர்ஜே பாலாஜி, சேனல் செய்தியாளர். அம்மா, குடும்பம் என காட்டும் பாசம், 11 ஆயிரம் ஏக்கரை அழித்து ஆசிரம் கட்ட நினைக்கும் பகவதி பாபா பற்றி சொல்லிவிட்டு, இங்க இருக்கிற ஒரு சாமி கூட இதைக் கேட்காதா? என தவிப்பது, தெய்வம் கண்முன் வந்ததை, நம்பாமல், அது வேணும் இது வேணும் என அலப்பறை பண்ணுவது என தனது வேலையை சரியாகச் செய்கிறார். கோபமான நேரத்திலும் கமென்ட்ரி ஸ்டைலில் வேகமாகவே பேசியிருப்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

     பீலா விட்டும் ஊர்வசி

    பீலா விட்டும் ஊர்வசி

    அம்மாவாக ஊர்வசி. வெளியில் எல்லோரிடமும் பீலா விட்டுக்கொண்டு அலையும் கேரக்டர் அவருக்கு. பிறகு, தான் ஏன் இத்தனை பிள்ளைப் பெற்றேன் என்பதை விளக்கும்போதும், நான் பெத்தேன், அவங்களாதான் வளர்ந்தாங்க என்று சொல்கிற போதும் ஓடிப்போன கணவனை நினைத்து உருகும்போதும் கண்கலங்க வைக்கிறார்.

    கச்சிதமாகச் செய்கிறார்

    கச்சிதமாகச் செய்கிறார்

    கார்பரேட் சாமியார் அஜய் கோஷ். ஆசிரமங்களால் நடக்கும் அந்நிய செலாவணி விஷயங்களை சொல்வது, மக்கள் முன் நடனமாடுவது, மக்களை நம்ப வைக்க அவர் போடும் திட்டம் என தனது கேரக்டரை கச்சிதமாகச் செய்கிறார். சில இடங்களில் ஓவர் நடிப்பு, உறுத்தல். தாத்தாவாக மவுலி, தங்கையாக, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

    கதையோடு ஒட்டவில்லை

    கதையோடு ஒட்டவில்லை

    கன்யாகுமரியின் அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது, தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. பாடல்கள் கதையோடு ஒட்டவில்லை. அது இந்தப் படத்துக்கு தேவையுமில்லை. ஆர்.கே.செல்வாவின் எடிட்டிங் கதை வேகமாகச் செல்ல உதவி இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்துக்காக, இயக்குனர் என்.ஜே.சரவணனையும் ஆர்.ஜே.பாலாஜியையும் பாராட்டலாம்.

    அனைத்தும், அடடா

    அனைத்தும், அடடா

    சேனலில், பேட்டிக்கொடுக்கும் பாபாவை முதல் கேள்வியிலேயே வாரி விடுகிறார், பாலாஜி. பிறகு அவர் சத்தமே இல்லாமல் மறுபடியும் வந்து அவர் முன் அமர்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகச் செல்ல, இரண்டாம் பாதி திரைக்கதைக்கு இன்னும் லாஜிக்காக மெனக்கெட்டிருக்கலாம். தெய்வங்களை எப்படி பார்ப்பது, தெய்வத்தின் பெயரால், போலி சாமியார்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி இந்தப் படம் பேசியிருக்கும் விஷயங்கள், நாடகத்தனமாக இருந்தாலும் அனைத்தும், அடடா!

    English summary
    Mookuthi Amman is a timely tale that addresses religious politics and how people are fooled by godmen in our country
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X