twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Moon Knight Episode 2 Review: ஹாலிவுட் அந்நியனில் இப்படியெல்லாமா ட்விஸ்ட் வைப்பாங்க?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கதைப்படி பார்த்தால் நம்ம ஊர் அந்நியன். காஸ்ட்யூம் மற்றும் சூப்பர் ஹீரோ உடையை வைத்து பார்த்தால் மார்வெலின் பேட்மேன் போல இருந்தாலும் மூன் நைட் வெப்சீரிஸில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை கொடுத்து ரசிகர்களை பயங்கரமாக மெர்சலாக்கி விடுகின்றனர்.

    முதல் எபிசோடை பார்த்து மிரண்டு போன ரசிகர்களை இரண்டாவது எபிசோடு இன்னமும் விரிவாக கதை சொல்லி ஏகப்பட்ட ஆச்சர்யங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

    ஸ்டீவ் உடம்புக்குள் மார்க் மற்றும் மூன் நைட் உள்ளனர் என நினைத்த ரசிகர்களுக்கு இரண்டாவது எபிசோடில் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.

     '’கே.ஜி.எஃப் சாப்டர் 2’’… ட்விட்டரில் மாஸ் காட்டும் ராக்கி பாய்... சும்மா கிழி கிழி தான் ! '’கே.ஜி.எஃப் சாப்டர் 2’’… ட்விட்டரில் மாஸ் காட்டும் ராக்கி பாய்... சும்மா கிழி கிழி தான் !

    முதல் எபிசோடு எப்படி

    முதல் எபிசோடு எப்படி

    சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தை போலத் தான் அம்பியான ஹீரோவுக்குள் ரெமோ மற்றும் அந்நியன் என இரு கதாபாத்திரங்களின் குரல் மாறி மாறி கேட்டு அந்த உடலை வாங்கி வருகிறது. ஆர்த்தர் எனும் தராசு டாட்டூ போட்ட வில்லன் அனுப்பும் கொடிய மிருகத்திடம் இருந்து தப்பிக்க மூன் நைட்டாக மாறுகிறார் ஸ்டீவ்.

    மீண்டும் கனவு

    மீண்டும் கனவு

    நடந்தது எல்லாமே மீண்டும் கனவு என்பதை போல இரண்டாம் எபிசோடு ஆரம்பிக்கிறது. ஆனால், உடனடியாக இதெல்லாம் கனவு இல்லை என்பதை புரிந்து கொள்கிறார் ஸ்டீவ். கண்ணாடியில் இருந்த படி ஸ்டீவின் உடம்பை மார்க் கேட்கிறார். மார்க்கின் பாஸ்போர்ட்டை பார்க்கும் போது தான் ஸ்டீவ் என்பதே மார்க் உருவாக்கிய ஒரு கேரக்டர் என்பது.

    செம ட்விஸ்ட்

    செம ட்விஸ்ட்

    அம்பியாக தன்னை மறைத்து வைக்க முயற்சித்திருக்கிறார் திருமணமான மார்க். மார்க்கின் உடம்பு இறந்து கிடந்த நிலையில் தான் அவரை கோன்ஷு தன்னுடைய அவதாரமாக மாற்றிக் கொண்டதாக சொல்லும் காட்சியில் மேலும், குழப்பங்கள் உருவாகின்றன. மார்க்கின் மனைவியின் குணாதிசயங்களை கொண்டு உருவாக்கப்பட்டவர் தான் ஸ்டீவ். இருவருக்கும் இடையே ஒத்துப் போகும் டேஸ்ட் மற்றும் எகிப்த் பற்றிய ஆராய்ச்சி என்பதை காட்சிகளில் தெளிவாக புரிய வைத்துள்ளனர் இரண்டாம் எபிசோடை இயக்கிய ஆரோன் மற்றும் ஜஸ்டின்.

    தண்டனை கொடுக்கும் கடவுள்கள்

    தண்டனை கொடுக்கும் கடவுள்கள்

    மூன் நைட் இரண்டு பாகங்களை பார்த்த நிலையில், கருட புராணத்தின் படி கொடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிப்பது போல கோன்ஷு கடவுள் தப்பு செய்பவர்களை தாமதமாக கொலை செய்ய மூன் நைட்டை பயன்படுத்துகிறது. அதே போல அமீத் கடவுள் தப்பு செய்பவர்களை குழந்தையாக இருக்கும் போதே கணித்து கொன்று விட ஆர்த்தரை நியமித்து இருக்கிறது. ஆர்த்தர் முன்னதாக கோன்ஷுவின் அவதாரமாக இருந்து வந்த நிலையில், அங்கிருந்து எஸ்கேப் ஆகி அடுத்த கொடூர தண்டனை கொடுக்கும் கடவுளிடம் சிக்கி உள்ளார் என்பது புரிகிறது.

    திடீரென வரும் சூட்

    திடீரென வரும் சூட்

    அமித் கடவுள் கல்லறைக்கு வழி காட்டும் அந்த காம்பஸை தேடி ஆர்த்தர் வருகிறான். அவனை அங்கிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் மனைவி உனக்குள்ள ஒரு சூட் இருக்கும் மார்க் அதை வர வை என ஸ்டீவ்விடம் சொல்கிறார். ஸ்டீவ் எதுவுமே புரியாமல் தவித்து நிற்க கொல்ல வரும் மிருகத்திடம் இருந்து தப்பிக்க சூட் வரட்டும் என சொல்ல, ஸ்டீவே அந்த மிருகத்திடம் சண்டை போடும் காட்சிகள் செம ஹைலைட். ஆனால், கடைசியில் அவனால் முடியாத நிலையில், மார்க்கிடம் உடம்பை கொடுக்க அந்த மிருகத்தை மூன் நைட்டாக வதம் செய்ய இரண்டாவது எபிசோடு நிறைவடைகிறது. மூன்றாவது எபிசோடில் அடுத்து என்ன ட்விஸ்ட் காத்திருக்கிறதோ என்பதை பார்க்கவே மார்வெல் ரசிகர்கள் மூன் நைட் அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.

    English summary
    Moon Knight Episode 2 Review: Steve Summon the suit and helps Mark to rule his body and turns Moon Knight to defeat the Ghost Wolf.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X