Mosadi Review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்கள்... 'மோசடி'யில் பார்க்கலாம்!

Recommended Video

மோசடி இது ஒரு demonetization பற்றிய படம் | Mosadi | Viju Iyyapasamie, Pallavi Dora | Shajahan

Rating:
1.5/5

நடிகர், நடிகைகள் - விஜூ, பல்லவி டோரா, அஜெய்குமார் , விஜயன், வெங்கடாச்சலம், நீனு சுகுமாரன், O.S.சரவணன், மோகன், முத்துசாமி, பிரதீப், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் - ஒளிப்பதிவு - R.மணிகண்டன்

இசை
- ஷாஜகான்

பாடல்கள்
- மணிஅமுதவன், K.ஜெகதீசன்

எடிட்டிங்
- S.M.V.சுப்பு, கோபி ரா நாத்

நடனம்
- விமல், பாலா

தயாரிப்பு
- JCS மூவீஸ்

கதை
, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் - K.ஜெகதீசன்

சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்த ஏமாற்று வேலைகளை கண்முன்னே காட்சிப்படுத்துகிறது மோசடி திரைப்படம்.

நாயகன் விஜுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து, சதுரங்க வேட்டை பாணியில் பல மோசடிகளை செய்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுடைய இலக்கு நூறு கோடி ரூபாய். கருப்பு வைரம், நவரத்தின புதையல் என மோசடி செய்து இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள். ஒருகட்டத்தில் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாயகன் விஜுவுக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சினையே, அவரை மோசடி செய்யும் நிலைக்கு தள்ளுகிறது. இந்த சிக்கலில் இருந்து விஜு எப்படி வெளியே வருகிறார் என்பது தான் மீதிக்கதை.

Mosadi review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்களை காட்டும் மோசடி!

சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய சில பித்தலாட்டங்களை மோசடியில் பார்க்கலாம். வீட்டு தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பவைத்து ஹவுஸ் ஓனரை ஏமாற்றுவது, பூனைக்கு கருப்பு சாயம் பூசி கருப்பு வைரம் என டகால்டி செய்வது, நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பல லட்சங்களை அபேஸ் செய்வது என வித்தியாசமான மோசடிகளை பற்றி பாடம் நடத்துகிறது படம்.

Mosadi review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்களை காட்டும் மோசடி!

அதேபோல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சில அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற அப்பாவி மக்களை எப்படி எல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதை உண்மைக்கு அருகில் இருந்து காட்டுகிறது மோசடி. தான் சொல்ல நினைத்த கருத்தை, நேர்மையாகவும், உண்மையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். அதற்காக ஒரு சபாஷ்.

Mosadi review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்களை காட்டும் மோசடி!

ஆனால் முதிர்ச்சி இல்லாத நடிகர்களின் நடிப்பு, படத்தை போரடிக்க வைக்கிறது. அதுவும் அவர்கள் பேசும் தமிழ், வேற்று மாநிலத்தவர்கள் பேசுவது போலவே காதில் விழுகிறது. டப்பிங்கிலாவது அதனை சரி செய்திருக்கலாம்.

நாயகன் விஜு, நாயகி பல்லவி டோரா உள்பட படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். அதனால் நடிப்பு பயிற்சி போதவில்லை. எல்லாக் காட்சிக்கும் ஒரே ரியாக்ஷன் தான்.

Mosadi review: சதுரங்க வேட்டையில் சொல்லத் தவறிய பித்தலாட்டங்களை காட்டும் மோசடி!

ஷாஜகானின் இசையில் ஒரு குத்து பாட்டு மட்டும் தாளம் போட வைக்கிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்தை ஓரளவுக்கு காப்பாற்றுகிறது. கோபிநாத்தின் எடிட்டிங்கில் குறை எதும் இல்லை.

Mosadi review: Its a movie on demonetization frauds

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான படமாக முதலில் செல்கிறது மோசடி. ஆனால் கடைசியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்துவிடுகிறது படம். ரூபாய் தாள்களை ஒழித்து, இ-கரன்சியை நாடு முழுவதும் கொண்டு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிறது மோசடி.

Mosadi review: Its a movie on demonetization frauds

குறைந்த பட்ஜெட்டில் நல்ல கருத்துள்ள படத்தை தர நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். நல்ல நடிகர்களை வைத்து அதனை செய்திருந்தால், 'மோசடி' மோசம் செய்திருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X