twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் " - திரைவிமர்சனம்

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள் : சித்ரா , ஸ்ரீரஞ்சனி , ஜீவாரவி வினோதினி, நிழல்கள் ரவி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், ஆர் .சுந்தர்ராஜன்

    இயக்கம் : சபரிஷ்

    இசை : தமீம் அன்சாரி

    சென்னை : விஜே சித்ராவின் கால்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சித்ரா இப்பொழுது எல்லோருடைய நினைவுகளில் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த படம் வந்து உள்ளது என்பது தான் தனி சிறப்பு .

    உறைய வைக்கும் திரில்லர் காட்சிகளுடன் உருவாகியிருந்த இந்த படம் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு இன்று திரையில் வெளியாகி ரசிகர்களின் ஆஹாராவை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறது.

    Movie Review : ஏலே திரைவிமர்சனம்Movie Review : ஏலே திரைவிமர்சனம்

    சித்ரா முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இன்று வெளியாகியிருக்கும் கால்ஸ் திரைப்படத்தை பார்க்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    விறுவிறுப்பான த்ரில்லர்

    விறுவிறுப்பான த்ரில்லர்

    சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா திரைத்துறையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்து கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சபரீஷ் இயக்கியுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்தும் இன்றைய காலகட்டத்தில் நடக்கின்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் உருவாகியிருக்கும் கால்ஸ் விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்க , மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று திரையில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கால் சென்டர்

    கால் சென்டர்

    படத்தில் கால் சென்டரில் வேலை செய்யும் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சித்ரா. கால் சென்டரில் பணியாற்றும் நடுத்தர குடும்ப பெண்ணான சித்ரா வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்சினையை சந்திக்கிறார். அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. படத்தில் மெடிக்கல் கிரைம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை சேர்த்துள்ளனர்.

    திறம்பட நடித்துள்ளனர்

    திறம்பட நடித்துள்ளனர்

    வினோதினி, தேவதர்ஷினி, நிழல்கள் ரவி, ஆர் சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க சித்ராவின் பெற்றோர்களாக ஜீவா ரவி மற்றும் ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். குறை சொல்லும் வகையில் இல்லாமல் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட நடித்து கொடுத்துள்ளனர்.

    ரியல் லைஃப் போலவே

    ரியல் லைஃப் போலவே

    சித்ராவின் ரியல் லைஃப் போலவே அவர் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் கால்ஸ் திரைப்படத்தின் கதையிலும் அவர் காணாமல் போக ஒவ்வொரு காட்சிகளையும் பக் பக் என நம் அனைவரையும் பயமுறுத்துகிறது. அவ்வப்போது உருக்கமாக சித்ரா பேசும் வசனங்கள் அவருடைய கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது.

    மிகச் சிறப்பாக  கையாண்டு

    மிகச் சிறப்பாக கையாண்டு

    ஐடி துறையில் பணியாற்றும் ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக இயக்குனர் சபரீஷ் முதல் படத்திலேயே சிறப்பாக கையாண்டு இருக்க ஒவ்வொரு காட்சியும் பார்க்கும் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. இந்த படத்திற்கு தமீம் அன்சாரியின் இசை பக்க பலமாக அமைந்துள்ளது.

    லாஜிக் தவறுகள்

    லாஜிக் தவறுகள்

    கதைக்கு பெரிய பலமாக சித்ரா ஒரு புறம் இருந்தாலும் தேவையில்லாத கதாபாத்திரங்களால் ஒரு கட்டத்தில் கதை சுவாரஸ்யத்தை இழக்கிறது. சில லாஜிக் தவறுகள், கதையில் தொய்வு உள்ளது. இதனை சித்ராவிற்காக ரசிகர்கள் பெரிதும் பொருட்படுத்தாமல் நல்ல ஆதரவையே தந்துள்ளனர். சமூகத்தில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளை நாம் அன்றாடம் பார்த்து கொண்டு தான் வருகிறோம் . எந்த சூழலில் எந்த படம் வருகிறது என்பது தான் ஹிட் ஆவதர்குக்கும் காணாமலே போவதற்கும் ஏற்படும் வித்யாசம் .சித்ரா உயிருடன் இல்லை என்பதனாலேயே இந்த படத்தை பலரும் பார்க்க விருப்பம் காட்டுகின்றனர் . ஒரு வேலை அவர் இருந்திருந்தால் இந்த படத்தை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது ஆச்சரியமாகவும் கேள்விக்குறியாகவும் தான் இருக்கிறது.

    English summary
    movie review :calls
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X