twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Nenjam Marapathillai Review: பேய் படம் பை செல்வராகவன்..நெஞ்சம் மறப்பதில்லை திரைவிமர்சனம்!

    |

    Rating:
    3.0/5
    Star Cast: எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸ்சன்றா
    Director: செல்வராகவன்

    சென்னை : செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    வழக்கத்தை விடவும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்து இருப்பதற்கு காரணம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த திரைப்படம் தற்போது வெளியானது தான்.

    இதுவரை கேங்ஸ்டர் மற்றும் காதல் திரைப்படங்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல்முறையாக ஹாரர் கதையில் இறங்கி இருக்க நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. அதே தேதியான இன்று தான் செல்வராகவனுக்கு பிறந்தநாள் என்பது கூடுதல் தகவல் .

    அண்ணாந்து பார்க்க

    அண்ணாந்து பார்க்க

    தமிழ் சினிமாவிலேயே தனித்துவமான இயக்குனர்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவனின் திரைப்படங்களுக்கு என்றும் இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் , இவரது படங்கள் பல வேற்று மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காதல் படங்களை இயக்கி வந்த செல்வராகவன் பின் கேங்ஸ்டர் படங்களையும் இயக்கி அதிலும் வெற்றி பெற சரித்திரப் படமான ஆயிரத்தில் ஒருவன் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு

    5 ஆண்டுகளுக்கு பிறகு

    இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை 2016 ஆம் ஆண்டு இயக்க ஆரம்பித்த செல்வராகவன் அதே ஆண்டே படபிடிப்பு உட்பட மொத்த வேலைகளையும் முடித்து ரிலீஸுக்கு படத்தை தயாராக வைத்திருந்தார். பின் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் பல ரிலீஸ் தேதிகள் தள்ளி போய்க்கொண்டே இருக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் இப்பொழுது வெளியாகி உள்ளது.

    மனைவியாக  நந்திதா

    மனைவியாக நந்திதா

    இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராக தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பி வரும் எஸ் ஜே சூர்யா ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன் பாத்திரங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வர இப்பொழுது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வில்லன் கலந்த கதாநாயகனாக நடித்துள்ளார். மனைவியாக நந்திதா ஸ்வேதா மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண் பணியாளராக ரெஜினா கஸன்ட்ரா நடித்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்பு

    பெரும் எதிர்பார்ப்பு

    இதுவரை செல்வராகவனை காதல் மற்றும் கேங்ஸ்டர் படங்களை இயக்கிய மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடன் இந்த முறை பேய் படத்தை இயக்கி இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது.நெஞ்சம் மறப்பதில்லை இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஆன நிலையில் மார்ச் 5ஆம் தேதியான இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வெள்ளத்தில் திரையரங்குகள் மூழ்க ஆரம்பிக்கின்றன . நடிகருக்கு ரசிகர்கள் இருப்பது வேறு ஆனால் ஒரு இயக்குனருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் ஆன உண்மை .

    வசன உச்சரிப்பில்  தூள்

    வசன உச்சரிப்பில் தூள்

    எஸ்.ஜே . சூர்யாவின் படங்கள் என்றால் கண்டிப்பாக அவர் நடிப்பில் காமெடி கலந்த ரசனையுடன் கூடிய வசனங்கள் இருக்கும் .இந்த படத்திலும் அதற்கு பஞ்சம் இல்லை . ஏழையாக இருந்து அரக்கனாக மாறி முன்னுக்கு வரும் தீடீர் பணக்காரன் ஆகும் கதாபாத்திரம் . பணக்கார தொழில் அதிபரின் மாப்பிளையாக இருந்தாலும் தன் உடம்பிலும் மனதிலும் கொடூரமான சிந்தனைகளுடன் காமம் கலந்த பார்வையுடன் ராமசாமி எனும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து உள்ளார் எஸ்.ஜே . சூர்யா . ஆண் ஆதிக்கம், ஆணுடைய எண்ணங்கள் , ஆணுடைய வக்ரம், காமத்தின் வெளிப்பாடு என முதல் பாதி கதை நகர்கிறது. ஆனால் எந்த இடத்திலும் ஆபாச வசனங்கள் இல்லாமல் அதிகப்படியான கிளாமர் காட்சிகள் இல்லாமல் இந்த விஷங்களை கையாண்டது இயக்குனர் செல்வா ஸ்டைல் .

     பங்களா வீடு

    பங்களா வீடு

    ஒரு பெரிய பங்களா , காட்டு பகுதி , இரண்டு பெண்கள் , ஐந்து ஆண்கள் , ஒரு குட்டி குழந்தை என்ற இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் லோகேஷன்ஸ் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கும் போது சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது . மிகவும் குறுகிய பட்ஜெட் வைத்து இந்த படத்தின் கதையை நகர்த்தி உள்ளார் செல்வா . சீரியஸான காட்சிகளில் பட்லர் இங்கிலிஷ் பேசும் நண்பன் கதாபாத்திரம் செம்ம சூப்பர் ஐடியா . படத்தின் பல காட்சிகளில் நடிகர்கள் கண் சிமிட்டாமல் நடித்து உள்ளார்கள் என்பதை உன்னித்து பார்த்தால் செல்வாவின் மெனக்கெடல் புரியும் .

    இந்த ஆண்டு பரிசு

    இந்த ஆண்டு பரிசு

    ரெஜினா இந்த படத்தில் இரண்டு வித்யாசமான கதாபாத்திரம் செய்து மிரட்டி உள்ளார் . முதல் பாதி பாசத்துடனும் , தைரியமான பெண்ணாகவும் மனதை கவருகிறார் . இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான பல காட்சிகள் மூலம் மனதில் நிற்கிறார் . இந்த ஆண்டு பரிசு போல பல நாட்களாக தேக்கி கிடந்த ரெஜினாவுடைய படங்கள் இந்த ஆண்டு ஒவ்வொன்றாக வருகிறது .

    சமுதாயத்திற்கான பகட்டு

    சமுதாயத்திற்கான பகட்டு

    எஸ்.ஜே . சூர்யாவின் மனைவியாக மிகவும் அழகாக நடித்து அசத்தி உள்ளார் நந்திதா ,நீண்ட நாட்களாக சரியான படம் அமையவில்லையே என்ற ஏக்கமும் இந்த படம் மூலம் நந்திதாவிற்கு கொஞ்சம் தாகம் தணிக்கும் . முதல் பாதியில் மிரட்டலான வசனங்கள் இரண்டாம் பாதியில் ஸ்டண்ட் என்று தனக்கு கிடைத்த எல்லா விஷயத்தையும் மிகவும் செவ்வனே செய்து முடித்து உள்ளார் . எஸ்.ஜே . சூர்யாவை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விட்டு லவ் யு சொல்லும் போது தியேட்டரில் கிளாப்ஸ் . பணம் , அந்தஸ்து போலி கவுரவம் என்று சமுதாயத்தில் பகட்டான வாழ்க்கை வாழும் மனைவி கதாபாத்திரம் நச் என்று ஒட்டிக்கொண்டது இவருக்கு.

     திரைக்கதை மூலம்

    திரைக்கதை மூலம்

    பாவங்களை சுமந்த கர்த்தர், சிலுவையில் இருக்கும் கர்த்தர் என்று கிறிஸ்த்துவ மதம் சார்ந்த பல காட்சிகள் படத்தில் இருந்தாலும் யாரையும் புண்படுத்தாத அளவுக்கு காட்சிகள் நகர்கின்றன . கடவுளுக்கும் சாத்தானுக்கும் உண்டான வேறுபாடு , நல்லவைக்கும் தீமைக்கும் இருக்கும் சண்டை என மிகவும் எளிதான ஒரு ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு திரைக்கதை மூலம் கூடுதல் பலம் சேர்த்து எஸ்.ஜே . சூர்யா எனும் வெறித்தனமான நடிகனை பயன்படுத்தி நெஞ்சம் மறப்பதில்லை படத்தை முடித்து உள்ளார் . எஸ்.ஜே . சூர்யாவின் ஆக்ட்டிங்
    ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்வதா சூப்பர் ஆக்ட்டிங் என்று சொல்வதா என்று தெரியாத அழவு குழம்பி போகும் ரசிகர்கள் மனநிலை. பல இடங்களில் ரசித்தாலும் சில இடங்களில் இச் கொட்டுகிறார்கள். இருப்பினும் செல்வராகவன் சொல்ல வந்த விஷயத்தை ஆணி தனமாக சொல்லி விடுகிறார்.

    பின்னணி இசை

    பின்னணி இசை

    படத்திற்கு இடையில் அடிக்கடி சூர்யா கிட்டாருடன் பாடுவது நல்ல சிந்தனை.யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையிலும் ,பாடல்களிலும் செல்வாவின் படத்திற்கே உரித்தான விஷயங்களோடு இசையை வடிவமைத்து நெகிழவைக்கிறார் ."கண்ணுங்களா என் செல்லங்களா" என்று காவல் நிலையத்தில் வரும் பாடல் பதிவு வித்யாசம் . அதிகமான சி ஜீ காட்சிகள் எதுவும் இல்லாமல் சிம்பிள்ஆன ஒரு செல்வராகவன் படம் என்று "நெஞ்சம் மறப்பதில்லை " மற்ற செல்வாவின் படங்களோடு ஒப்பிட்டு பார்பதுக்கில்லை .

    திரும்ப திரும்ப

    திரும்ப திரும்ப

    "நெஞ்சம் மறப்பதில்லை" கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் . பேய் படம் பை செல்வராகவன் என்று சொன்னால் மிகை ஆகாது . செல்வாவின் முந்தைய படங்களை பல ரசிகர்கள் பல முறை திரும்ப திரும்ப பார்த்து ரசித்த அளவுக்கு இந்த படம் இருக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக "ஒன் டைம் வாட்ச் " மூவி என்று சொல்லலாம் .

    English summary
    director selvaraghavans most expected movie " nenjam marapathillai" got released today on his birthday . sj surya who has done the lead and yuvan shankar raja has given a good music album for this movie. huge fan following for director selvaraghavan and actor sj surya enjoying this movie in theaters
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X