For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review: பிரபு தேவா நடிப்பில் "தேள்" படம் எப்படி இருக்கு?

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள் :

  பிரபு தேவா
  சம்யுக்தா ஹெக்டே
  ஈஸ்வரி ராவ்
  யோகிபாபு

  இசை : சி. சத்யா

  இயக்கம் : ஹரிகுமார்

  சென்னை : ஹரிஹரன் இயக்கிய ''தேள்'' என்ற படத்தை நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இந்த பொங்கல் தினத்தன்று வெற்றிகரமாக தியேட்டர்களில் வெளிவந்துள்ளது.

  Recommended Video

  Theal Movie Review | Yessa ? Bussa ? | Prabhu Deva | Samyuktha Hedge | Harikumar | Filmibeat Tamil

  பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் காமெடி கலாட்டா செய்ய யோகிபாபு என்று படம் நகர்கிறது .

  படத்தின் மையப் புள்ளி என்னவென்றால் கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதை அமைந்திருக்கிறது.

  புரியாத புதிராக

  புரியாத புதிராக

  " தேள் " எப்படி தன் அருகில் வருபவர்களை கொட்டிக்கொண்டே இருக்கும், கோபத்துடன் விஷத்தை கக்கும் என்பதுபோல பிரபுதேவா உடைய கதாபாத்திரம் தன் அருகில் யாரையும் நெருங்க விடாமல் அனைவரையும் விஷம் போல கொட்டிக்கொண்டே இருக்கும் ஒரு புரியாத புதிராக அமைந்துள்ளது படத்தின் முதல் பாதி .

  பணம் கட்ட முடியாமல்

  பணம் கட்ட முடியாமல்

  கோயம்பேடு மார்க்கெட், பலவிதமான வியாபாரங்கள், தினமும் கத்தை கத்தையாய் உருளும் பணக்கட்டுகளை தினசரி வியாபாரிகளுக்கு வட்டியாக கொடுத்து மாலைப் பொழுதுக்குள் வசூல் செய்து பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பல். அன்றாட தேவைக்காக அதிக வட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்பட்டு கடைசியில் பணம் கட்ட முடியாமல் மானம் மரியாதை போன்றவற்றை இழந்து அடி உதை வாங்கி ஒரு சிலர் தங்களது உயிரையே மாய்த்துக் கொண்டு குடும்பத்தை அனாதையாக விட்டுச் செல்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் வட்டி வாங்கும் நபர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் பொழுது அவர்களை அடித்து உதைத்து தும்சம் பண்ணி பணத்தை வசூல் செய்வது தான் படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம்.

  திடீரென்று ஒரு நாள்

  திடீரென்று ஒரு நாள்

  ஈவு இரக்கமின்றி யாராக இருந்தாலும் அவர்களை அடித்து துவைத்து காயப்படுத்துவது மட்டுமல்லாமல் தனி ஒரு மனிதனாக பித்துப் பிடித்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் தேள் படத்தின் கதாநாயகன் பிரபுதேவா மனநிலை என்ன என்பதை முதல் பாதியில் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஒரு அனாதையாக பிறந்து வளர்ந்து தீய செயல்களில் ஈடுபட்டு அடிதடியில் பணம் சம்பாதிக்கும் ஒரு குணாதிசயம் கொண்ட கதாநாயகன் பல வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் "நான் தான் உன் தாய்" என்று ஒரு பெண் வந்து நிற்கும் பொழுது என்ன நடக்கிறது என்பது படத்தின் இரண்டாம் பாதி.

  கிம்கிடுக்

  கிம்கிடுக்

  கொரியன் பட இயக்குனர் கிம் கி டுக் பல எமோஷனல் திரைப்படங்கள் நம் கண் முன்னே வந்து போகும் .இருப்பினும் அவர் இயக்கிய பீடா (pieta ) என்கின்ற கொரியன் படத்தின் தழுவல்தான் இந்த "தேள்" படம் என்பதை மரியாதை செலுத்தும் விதமாக படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே "கிம்கிடுக்" என்ற மாபெரும் இயக்குனருக்கு "நன்றி" என்று இந்த படத்தின் குழு தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது

  அவலங்களை நிலைநிறுத்தி

  அவலங்களை நிலைநிறுத்தி

  பிரபுதேவா என்கின்ற மாபெரும் நடன அசுரனை இந்தப் படத்தில் எங்கும் நடனமாட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மாற்றாக மிகவும் அற்புதமாக பிரபுதேவாவுடைய நடிப்பை அங்குலம் அங்குலமாக பயன்படுத்தி அவரது உணர்ச்சிபொங்க வசனங்களை மிகவும் அழகாக உபயோகப்படுத்தி, ஸ்டண்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை நிலைநிறுத்தி திரைக்கதை அமைத்து உள்ளார் இயக்குனர் ஹரிகுமார்.

  தாய்மை உணர்வுடன்

  தாய்மை உணர்வுடன்

  காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகவும் நிறுத்தி நிதானமாகத் ஸ்லோவாக நகர்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது ஒன்று தான் மிகப்பெரிய தொய்வாக இருக்கிறது. இருந்தாலும் கூட இரண்டாம் பாதியில் நடக்கும் சின்ன சின்ன டிவிஸ்ட் அண்ட் டெர்ன் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. ஈஸ்வரி ராவ் முதல் பாதியில் அமைதியாகவும் சாந்தமாகவும் தாய்மை உணர்வுடன் நம்மை ரசிக்க வைக்கிறார். இரண்டாம்பாதியில் நம்மை பிரமிக்க வைக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை நன்கு புரிந்து கொண்டு தனக்கு உண்டான வேட்டையை சரிவர செய்துள்ளார் . கண்டிப்பாக இந்த படத்திற்கு என்று ஈஸ்வரி ராவ் ஒரு தனிப்பட்ட விருது கிடைக்கும் என்பது மிகவும் எதிர்பார்க்கப்படும்.

  கதையின் அழுத்தம்

  கதையின் அழுத்தம்

  அம்மா சென்டிமென்ட் படங்கள் எத்தனையோ தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமானது என்பது உண்மைதான். அதிலும் குறிப்பாக அம்மா சென்டிமென்ட் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பலரது கண்களையும் கசிய செய்யும். படத்தின் கதாநாயகி சம்யுக்தா தன்னால் முடிந்தவரை ஏதேதோ செய்து நடனமாடி குத்தாட்டம் போட்டு சிறப்பாக நடித்துள்ளார். இருந்தாலும் கூட அவரது கதாபாத்திரம் கதையின் அழுத்தம் வேறாக இருப்பதால் அந்த கவர்ச்சி + குத்தாட்டம் கொஞ்சம் ஒட்டவில்லை. படத்தில் வரும் குத்தாட்டம் பாட்டு இந்தப் படத்தின் கதையை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய டிஸ்டர்ப்பென்சுதான்.

  பணத் தேவைக்காக

  கடன் பிரச்சினையால் கஷ்டப்பட்ட, கஷ்டப்படுகிற பல குடும்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பணத் தேவைக்காக குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் உறவுகள் அவர்களது வலி மற்றும் வேதனையின் உச்சம் அனைத்தையும் சரியாக பதிவு செய்த இந்த "தேள்" படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சத்யாவின் இசை, எடிட்டிங் , கேமரா அனைத்தும் நன்கு கதைக்கு தேவை உணர்ந்து இருக்கிறது . இந்த பொங்கல் 2022 பிரபுதேவா நடிப்பில் வித்தியாசமான ஒரு முயற்சி மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கலாம். இந்தத் தேள் பல மனங்களை கொட்டும். கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக கண்ணீர் சொட்டும்.

  English summary
  Theal is an sentimental , action film written and directed by Harikumar in his directorial debut and produced by K. E. Gnanavel Raja of Studio Green. The film stars Prabhu Deva and Samyuktha Hegde, with Easwari Rao, Yogi Babu, Shatru and Arjai in supporting roles.its a long time wait and finally the movie got released in theaters for this pongal 2022.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X