மிஸ்டர் லோக்கல் மாஸா, மொக்கையா?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இது வழக்கமான ராஜேஷ் படமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
தர லோக்கல்
மிஸ்டர் லோக்கல் படத்தை துபாயில் பார்த்தேன். சிவகார்த்திகேயன் பக்கா மாஸ், டயலாக் டெலிவரி, நடிப்பு தர லோக்கல்- தரமான மாஸ் படம். நயன்தாரா அசத்திவிட்டார். கிளைமாக்ஸ் அருமை. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம ட்ரீட் என்கிறார் மணிகண்டன்.
விடுமுறை
கோடை விடுமுறைக்கு ஏற்ற படம் என்று தெரிவித்துள்ளார் தினேஷ்.
மொக்க
மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும். காமெடி காட்சிகள் கை கொடுக்கவில்லை. படம் ரொம்ப நீளம் என்கிறார் யுவராஜ்.
சிவகார்த்திகேயன்
சந்தானம் இல்லாத இந்த படம் மிஸ்டர் லோக்கல் அல்ல மிஸ்டர் மொக்க என்கிறார் சோனி.


Click it and Unblock the Notifications











